[ஈமானிய மொட்டுகள் 2024 சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை ]
என்றும் போல் வழமையாக அடுப்பங்கறையில் அன்றாட வேலைகளை பார்த்தவளாக நாளைத் தொடங்கினாள் ஆமீனா.
சிறிய வீட்டுக் கடை வைத்து நடத்தி வருபவள் ஆமீனா. ஆமீனாவிற்கு ஆறாவது படிக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.பள்ளி சென்று வீடு திரும்பிய சனாவை அழைக்கிறாள். கடைக்கு ஆள் வந்திருக்கிறது,சென்று என்ன வேண்டும் கேள் என்று சொல்லி அனுப்புகிறாள்.
வீட்டினுள் தந்தை ரஷீத் நுழைகிறார்,
தந்தையைக் கண்ட சனா, அஸ்ஸலாமு அலைக்கும் வாப்பா என்றாள்.ஒன்றும் பதிலுரைக்காமல் சென்று, ஒரு கட்டு பீடி எடுத்திட்டு வா கடையில் இருந்து என்று சொன்னார். சனாவும் எடுத்து வந்து கொடுக்க, பீடியை பற்ற வைத்து கொண்டே தன் பிள்ளை அருகே அமர்ந்து விளையாடி கொண்டு இருந்தார் ரஷீத்.
இப்படியே நாட்கள் செல்கிறது...
சனா பண்ணிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள், வீட்டிற்கு ஒரு அழைப்பேசி அழைப்பு வருகிறது.
ஹாலோ... சனா அம்மா ஆ?? திடீர் என்று சனா மயக்கமடைந்து விழுந்துவிட்டாள் அழைத்துச் செல்ல வாருங்கள் என எதிர்புறத்திலிருந்து அழைப்பு வர, மனப் பதட்டத்தோடு பள்ளியை நோக்கி செல்கிறாள் ஆமீனா, அங்கிருந்து சனாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி ஓடினாள் ஆமீனா.
அங்கு பரிசோதனைகள் நடைபெறுகிறது, வேர்வை கொட்ட பயத்தோடு நின்றாள் ஆமீனா.
"பேரதிர்ச்சியான செய்தியை டாக்டர் வந்து சொன்னார்".
உங்கள் மக...மகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வந்துள்ளது, சரியான சிகிச்சை மேற்கொண்டால் சரி செய்து விடலாம் என டாக்டர் சொல்கிறார்.
அழுகையோடு எதனால் இந்நோய் என் குழந்தைக்கு வந்தது டாக்டர் என கேட்டாள் ஆமீனா. உங்கள் வீட்டில் யாரும் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர் இருக்கிறார்களா ...? என கேட்டார்.
ஆம், என் கணவர் புகைப்பிடிப்பவர் தான் என்று பதிலுரைக்க, அது தான் காரணம். அது எப்படி அவர் செய்த தவறு இவளை பாதிக்கும் டாக்டர் என ஆமீனா வினவ...!!? அந்த புகையை ரொம்ப வருடங்களாக சுவாசித்ததால் உங்கள் மகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டது என சொன்னார் டாக்டர்.
அழுதப்படி மகளைத் தேடி ஓடினாள்..அவள் கைகளைப் பிடித்தவளாக உனக்கு இந்த நோய் வர நானும் ஒரு காரணமாகி விட்டேனே மகளே...!!! என அழுகிறாள். இனி நம்ம கடையில் போதை தரும் எந்த பொருளையும் விற்ற மாட்டேன் இது அல்லாஹ்வின் மீது ஆணை என உறுதி கொள்கிறாள்.
தந்தை ரஷீத் மருத்துவமனை நோக்கி ஓடி வருகிறார் ..
"மகளுக்கு நோயின் தாக்கம் அதிகரித்து மரணத்தருவாயில் இருப்பதைப் போல உணர்கிறார்...!” அவரின் கண் ஓரத்திலிருந்து கண்ணீர் வடிய, தேம்பி தேம்பி தொண்டை அடைக்க அழுதப்படி விழித்துக் கொள்கிறார்.
அல்லாஹூ என் மகள் எங்கே...?? எங்கே ..? என கதறுகிறார் ....
அறைக்குள் வந்து வாப்பா என்னாச்சி ...நான் இங்கே தான் இருக்கிறேன் என்று கூறினாள் சனா. நான் இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவா ....!!!!!
மகளை அணைத்த படி அழுகிறான் ரஷீத். என்னாச்சி வாப்பா....?? என கேட்டாள் சனா.அது ஒரு கெட்ட கனவு கண்டேன் மா வேற ஒன்றுமில்லை என கூறினார் ரஷீத்.
வாப்பா உங்களிடம் ஒன்று கேட்பேன் எனக்காக செய்வீங்களா...?
என்னடா தங்கோ...சொல்லு கண்டிப்பா வாப்பா உனக்காக செய்கிறேன் என கூறினார்.
நேற்று எங்க பள்ளியில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வு நடைப்பெற்றது, அதில் புகைப்பிடிப்பது ரொம்ப தப்பு அவற்றால் பெரிய பெரிய நோய்கள் வரும் என்று சொன்னாங்க வாப்பா எனக்கு அழுகையே வந்துட்டு.
"(சிறு தயக்கத்தோடு) நீங்க இனி புகைப்பிடிக்காதீங்க ....உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க நல்லா இருக்கனும் என்று கூறியவலாக கண்களில் கண்ணீரோடு சனா."
ரஷீத் மகளை கட்டியணைத்தப்படி கண்டிப்பா இனி நான் புகைக்கவே மாட்டேன்மா என்று கூறினான். வாப்பா நம்ம கடையிலும் இனி இது போன்ற பொருள்களை விற்ற வேண்டாம்.
நம்ம ஊர் மக்களை பாதுகாக்குறதும் நம்மளோட கடமை தானே? வியாபார சங்கத்தில் சொல்லி இதை விற்காமல் இருக்க செய்யலாமே வாப்பா? நல்ல யோசனை சனா..!! நான் இதை பற்றிப் தலைவரிடம் பேசுகிறேன்.
"ரஷீத் தலைவரிடம் பேசினார், சர்வ சாதரணமாக நாம் பயன்படுத்தி வரும் இந்த புகையிலை பழக்கம் எந்தளவான பாதிப்பை நமதூர் மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது என்பதை புரிந்துக் கொண்ட தலைவர்,
"புகையிலை பயன்பாடும் அதன் விளைவும்" என்ற ஓர் குறும்படம் ஒன்றை ஊர் மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்."
அதன் பிறகு, எல்லோரும் ஒன்றுகூடி பேசி இவ்வாறான போதை பொருள்களின் பாதிப்பின் தாக்கத்தை புரிந்து ஒரு மனதாக நமதூர் மக்கள் நலனுக்காக இனி போதை தர கூடிய எந்த பொருள்களையும் விற்க மாட்டோம் என உறுதி எடுத்துக் கொண்டனர்.
ஆறு மாதம் கழித்து....!!!
தமிழக அரசால் நடத்தப்பட்ட சுதந்திர தின விருது வழங்கும் நிகழ்ச்சியில் ,
"புகையிலை இல்லா பேரூராட்சி ஏர்வாடி" என்ற விருது வழங்கப்பட்டது.
அவ்வூர் கவுன்சிலரான ரஷீத் அந்த விருதை பெற்றுக் கொண்டார்.
நமதூரை நலமான வழியில் கொண்டுச் செல்வது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையே...!!!
புகையிலை எனும் தீமையை அழிப்போம், நமதூர் மக்களை காப்போம்...!!!
|