தலைமைத்துவம் என்பது...
சாதாரண நபர்களிடமிருந்து அசாதாரணமான சாதனைகளைப் பெறும் திறனே தலைமைத்துவமாகும்.
குரலை உயர்த்திப் பேசுவது தலைமைத்துவம் அல்ல.. நாம் பேசத் துவங்கும்போது மற்றவர் குரல் அடங்குவது தான் தலைமத்துவம்.
தலைமைத்துவம் என்பது தன் கீழ் பணியாற்றுவோரின் முகம் பார்த்து நடத்துவது அல்ல. மாறாக, எல்லாரையும் ஒருசேர நடத்துவதே தலைமைத்துவம்.
சிறந்த தலைமையின் அடையாளம் அவரை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பதல்ல. அவர் எத்தனை தலைமை களை உருவாக்குகிறார் என்பதுதான்.
என்னைவிட யாரும் உயர்ந்தவன் இல்லை என்பது தலைக்கனம். என்னைப் போல எல்லாரும் உயர்ந்தவர்கள் என்பதே தலைமைக் குணம்.
அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுப்போம். ஏனெனில். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
தலைமைத்துவம் என்பது 15 சதவீதமே திறன்கள். மீதி 85 சதவீதம் ஒழுக்கம்... ஒழுக்கம்... ஒழுக்கம்தான்.
நீங்கள் உங்களைப் பற்றி உணராதவரை இன்னொரு நபரை நல்லவிதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை. ஆக...தலைமைத்துவம் என்பது உள்ளிருந்துதான் துவங்குகிறது. சிங்கத்தின் தலைமையில் இருக்கும் கழுதையும் வென்றுவிடும். கழுதையின் தலைமையில் இருக்கும் சிங்கமும் தோற்றுவிடும்.
▪︎இறுதியாக ஓர் உறுதியான செய்தி :
பொதுவாக சேவை அடிப்படையிலான தலைமைத்துவத் தையே மனித மனம் சார்ந்து நிற்கும். பேர்... புகழ்... பந்தா... சார்ந்த தலைமைத்துவத்தை அது ஒருபோதும் விரும்புவது இல்லை.
'ஒரு சமூகத்தின் தலைவன் அந்தச் சமூகத்தின் ஊழியன்' என்பது நபிகள் நாயகம் மொழி. இதை என்றும் மறவோம்!
* கே.ஆர். மஹ்ளரீ
|