Posted By:jasmin On 3/27/2007 |
|
யாருக்கு சின்னம்மை வரும்?
குழந்தைப் பருவத்திலேயே சின்னம்மையால் பாதிக்கப்பட்டோருக்கு மீண்டும் சின்னம்மை வராது. ஏனெனில் ஒரு முறை சின்னம்மை வந்து குணமானவுடன், நோய் எதிர்ப்புப் பொருள் உடலில் உருவாகி ஆயுள் முழுவதும் சின்னம்மை வராமல் தடுத்து விடும்.
இதேபோன்று இளம் வயதிலேயே தட்டம்மை ஏற்படும் நிலையில், வளரும் நிலையில் தட்டம்மை மீண்டும் வராது. மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையிலேயே தட்டம்மை தடுப்பூசி இடம்பெற்றுள்ளதால், தட்டம்மையால் பாதிக்கப்படுவோர் மிக மிகக் குறைவு.
கர்ப்பிணிகளே உஷார்...: சின்னம்மையால் பாதிக்கப்பட்டவருக்கு தனியே அறை, தட்டு, துண்டு, தலையணை, போர்வை அளிப்பது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மற்றவர்களுக்கு சின்னம்மை பரவாமல் தடுக்க முடியும். மேலும் பாதிக்கப்பட்டவர் காற்றோட்டமான அறையில் முழுமையாக ஓய்வு எடுப்பது அவசியம்.
வீட்டில் யாருக்காவது சின்னம்மை ஏற்படும் நிலையில், கருக் குழந்தைக்கு உறுப்புகள் உருவாகும் முதல் மூன்று மாத கால கர்ப்பிணிகள் உஷாராக இருந்து அம்மை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கர்ப்பிணிகளுக்கு அம்மை ஏற்பட்டால், வைரஸ் காரணமாக கருக் குழந்தைக்குப் பரவி, பிறவி ஊனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். |
|