otc asthma inhaler walgreens over the counter asthma inhalers வாழ்க்கையில் எனக்கு இலவச மாகக் கிடைத்ததெல்லாம் வறுமை மட்டும்தான் என்று, ஒரு ஹீரோ சொல்லும் விளம்பரத்தை அடிக்கடி டி.வி.யில் பார்த்திருப்பீர்கள். டோனியின் கதையும் கிட்டத்தட்ட அதேதான். சர்வதேச கிரிக்கெட் என்ற மரத்தின் உச்சாணிக் கொம்பை எட்ட முன்னேறிய ஒவ்வொரு முறையும், அவருக்கு இலவசமாகக் கிடைத்தது ஏமாற்றம் மட்டும்தான்.
இந்த ஏமாற்றத்தில் இருந்து விடுபட டோனிக்கு உதவியாய் இருந்தது இரண்டு விஷயங்கள். முதல் விஷயம் கிஷோர்குமாரின் பாடல்கள். இரண்டாவது விஷயம் மோட்டார் பைக். எப்போதாவது மனம் சோர்வடைந்தால் உடனே கிஷோர்குமார் பாடல்களை ஹெட்போனில் மாட்டி தன் பைக்கை உசுப்பி சீறவிட்டுக்கொண்டு ராஞ்சி நகர் முழுக்க ஒரு ரவுண்ட் வருவார். மோட்டார் பைக்கை வேகமாக ஓட்டுவது எனக்கு தியானம் செய்வதைப் போன்றது. ஒருமுறை அதில் வேகமாகச் சென்று வந்தால் மனம் ரிலாக்ஸாகும். எல்லாவற்றையும் ஜெயித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை பிறக்கும் என்கிறார் டோனி. ஆனால், அதே நேரத்தில் இந்த இரண்டு விஷயங்களோடு மட்டும் நில்லாமல் கிரிக்கெட்டிலும் கவனத்தைத் தொடர்ந்தார். இந்தியா ஏ ஆட்டங்கள் முதல் லோக்கல் கிரிக்கெட் வரை எல்லாவற்றிலும் ரன்களைக் குவித்தார். கூடவே சில கேட்சுகளையும்...
எந்தப் போராட்டத்துக்கும் ஒரு முடிவு உண்டு அல்லவா? டோனியின் கிரிக்கெட் போராட்டத்துக்கும் அப்படி ஒரு முடிவு வந்தது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டோனி சேர்க்கப்பட்டார். டிசம்பர் 23, 2004. அன்றுதான் டோனியின் கிரிக்கெட் கனவு நனவான நாள். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டோனி களமிறக்கப்பட்டார்.
பேட் பிடித்து மைதானத்துக்குள் நுழைந்த டோனியின் வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன. எப்படியாவது 50 ரன்களை எடுக்கவேண்டும் என்ற வெறியுடன் பந்தை அடித்தார். அடித்ததும் ஓடினார். ஆனால், பாவம்... பந்து வங்கதேச ஃபீல்டரின் கையில் சிக்கியிருந்தது. அவர் வெறியுடன் தூக்கி எறிய, பந்து ஸ்டம்பில் பட்டு ரன் எதுவும் எடுக்காமலேயே வெளியேறினார் டோனி. இதேபோன்று முதல் 4 போட்டிகளிலும் குறைந்த ரன்களில் சொதப்ப, தன் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிட்டதாய் முடிவெடுத்தார் டோனி.
டோனி தன்னம்பிக்கையை இழந்தாலும் அவர் மீதான நம்பிக்கையை கேப்டன் கங்குலி இழக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் மூன்றாவது பேட்ஸ்மேனாக அவரைக் களம் இறக்கினார் கங்குலி. இதுதான் உனக்கு கடைசி சான்ஸ். அதுவும் நான் தேர்வாளர்களிடம் போராடிப் பெற்றது. இதையும் தவறவிட்டால் உன்னை நான் காப்பாற்றுவது கஷ்டம் என்று சொல்லியபடியே டோனியைத் தட்டிவிட்டார் கங்குலி.
ஸ்டம்புக்கு முன்னால் நின்ற டோனிக்கு சிறுவயது கனவுகள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தது. இது கடைசி சான்ஸ். இதைத் தவறவிட்டால் கடவுள்கூட மன்னிக்கமாட்டார் என்று முழுவேகத்தில் மட்டையைச் சுழற்ற, 123 பந்துகளில் 148 ரன்களை விளாசி இந்தியாவின் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பரானார்.
அத்துடன் நிற்கவில்லை டோனியின் சாதனை. அடுத்ததாக நடந்த இலங்கைத் தொடரில் 145 பந்துகளில் 183 ரன்களைக் குவித்தார். தனது கனவு நாயகனான கில்கிறிஸ்டையும் முறியடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையைப் படைக்க இது உதவியது. அத்துடன் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் (10) அடித்த வீரர் என்ற சாதனையையும் பெற்றார்.
ரசிகர்களின் மனதைக் கவர இதைவிட வேறென்ன வேண்டும்? சச்சின் பத்து வருடங்கள், போராடிப் பெற்ற ரசிகர்களை ஒரே வருடத்தில் வசமாக்கினார் டோனி. இந்தியாவின் எதிரி நாடாகக் கருதப்படும் பாகிஸ்தானின் அதிபர் முஷாரஃபையே கவர்ந்தார். இப்போது அவர் புகழ் மேலும் பரவிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் குவிய விளம்பரமும், அதன்மூலம் பணமழையும் டோனிக்குக் குவிகிறது. இந்த ஆண்டில் அதிக வருமானவரி கட்டிய ஜார்க்கண்ட் குடிமகன் என்ற பெருமை வேறு. பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அலைகிறார்கள்.
ஆனால், இத்தனைக்குப் பிறகும் அவர் ஒரு சாதாரண ராஞ்சி இளைஞராகத்தான் இருக்கிறார் என்கிறார்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள். மாறிய ஒரே விஷயம் அவரது தலைமுடி. ஏற்கெனவே நண்பர்களிடம் சபதமிட்டபடி, இந்திய அணியில் இடம்பிடித்தது மட்டுமின்றி உலகக் கோப்பையையும் வென்று கொடுத்த பின் தன் தலைமுடியை வெட்டினார் டோனி.
உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.
ட்வென்டி 20 கோப்பையை வென்ற பிறகு, தான் படித்த டி.ஏ.வி. சியாமளி பள்ளிக்குச் சென்றிருக்கிறார் டோனி. இப்போதைய மாணவர்களிடம் கைகுலுக்கி மகிழ்ந்தபிறகு, தன் முன்னாள் ஆசிரியர் சர்மிஷ்ட குமாரின் அறைக்குச் சென்றிருக்கிறார். அவரைக் கட்டியணைத்த டோனி, தன் சட்டைப் பையில் இருந்து அவர் அளித்த பார்க்கர் பேனாவை எடுத்துக் காட்டியுள்ளார்.
இன்று வீடு முதல் கார் வரை எனக்கு பரிசுகள் குவிகின்றன. ஆனாலும் நீங்கள் அளித்த இந்த பேனாதான் என் மனம் கவர்ந்த பரிசு என்று சொல்லி சிரித்திருக்கிறார். ஆசிரியர் கண்களில் கண்ணீர்.
இந்த எளிமைதான் அவர் தலையில் கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற மகுடத்தைச் சூட்டியிருக்கிறது.
வன்முறைக்கும், வறுமைக்கும் மட்டுமே பெயர் பெற்ற ஜார்க்கண்ட் மாநிலத்தை, இந்திய கிரிக்கெட்டின் தலைநகரமாக மாற்றிய அந்த மாவீரர், மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவோம்.
டோனி ராஜ்ஜியம் மேலும் விரியட்டும். |