கோட்டை தகர்ந்திருச்சு;
கோப்பை நழுவிருச்சு
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
நாக்பூரில் கோட்டை விட்டோம்
நாமத்தைப் போட்டுக்கிட்டோம்
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
பட்டை கிளப்புமென்று பந்தாவாய் வந்தோம்
சட்டை கிழித்துக்கொண்டு சந்தியிலே நிற்கிறோமே!
கோட்டை தகர்ந்திருச்சு;
கோப்பை நழுவிருச்சு
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
நாக்பூரில் கோட்டை விட்டோம்
நாமத்தைப் போட்டுக்கிட்டோம்
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
தோத்தோம் இந்தக் கோப்பை
தோனி வைச்சார் ஆப்பை
ரேட்டிங் இனி மாறும்
மானம் கப்பல் ஏறும்
ஏசினேன் ரொம்பப் பேசினேன்
முயல் ஆமை கதையாச்சே!
ரெண்டுக்கு வெறும் பூஜ்யமா?
செமையான உதையாச்சே!
மட்டை விளாசவில்லை பந்தும் பறக்கவில்லை
மண்ணைக் கவ்விப்புட்டோமே
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
மகேந்த்ர தோனி காட்டில் மழை ரொம்பப் பெய்யுதிப்போ
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
கோட்டை தகர்ந்திருச்சு;
கோப்பை நழுவிருச்சு
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
நாக்பூரில் கோட்டை விட்டோம்
நாமத்தைப் போட்டுக்கிட்டோம்
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
பிரெட் லீ வேகம் எங்கே?
இட்லி ஆனாய் இங்கே!
ஜான்சன் சாம்பார்த் தூக்கு
சட்னியானார் கிளார்க்கு!
சவுரவும் சேவாக் கவுதமும்
சரியாக உதைத்தாரே!
லக்ஷ்மனும் சச்சின் தோனியும்
முதுகெலும்பை முறித்தாரே!
இம்சைக்கோர் இஷாந்த் ஷர்மா ஜாகீரைப் போல் வருமா
மிஸ்ராவும் ஹர்பஜனும் பின்னினார் என் ப்ரெட் லீ!
உடனடியா மூட்டைகட்டு ஓடிப்போவோம் ஏர்-போர்ட்டு
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
கோட்டை தகர்ந்திருச்சு;
கோப்பை நழுவிருச்சு
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
நாக்பூரில் கோட்டை விட்டோம்
நாமத்தைப் போட்டுக்கிட்டோம்
பிரெட் லீ - என் ப்ரெட் லீ!
தமிழன் வேணு