நாமும் - இப்ராஹிம் (அலை) அவர்களும்
தனி மனிதர்தான் ஆனால் சமுதாயம் அவர்
சமுதாயமாக இருந்தாலும் தனித்தனியே நாம்
சிலைகளை உடைத்து சிந்தனையை திறந்தவர் அவர்
சிலை வணக்கம் செய்வோருடன் மற்றொரு சிலையாய் நாம்
தூயவனின் கட்டளைக்கு பணிந்து துணையையும் தூரமாக்கினார்
துணையுடன் இறைக்கட்டளையை விட்டும் தூரமாய் நாம்
இறைவன் ஆணை செவியேற்றேன் , கட்டுப்பட்டேன் - அவர்
செவியேற்றேன் , வாதம் செய்தேன் - நாம்
தந்தை செய்தாலும் தவறு தவறுதான் - அவர்
தலைவர் செய்தால் தவறும் சரிதான் - நாம்
நெருப்பும் குளிர்ந்தது அவருக்கு
குளிரும் அறையிலும் மன இறுக்கமாய் நாம்
மகனையே தியாகம் செய்யும் மனம் அவருக்கு
மணித்துளிகளையும் தியாகம் செய்ய மனதில்லை எமக்கு
ஏகத்துவமே வாழ்க்கையாக இப்ராஹிம் (அலை)
ஏகத்துவம் வெறும் தத்துவமாய் நாம்
சுருக்கமாக
தியாகமே வாழ்க்கையாய் அவர்
தியாகத்தை தியாகம் செய்தவராய் நாம். |