Posted By:ganik70 On 3/10/2009 |
|
buy naltrexone from trusted pharmacy buy naltrexone மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை செல்போன் சேவையில் புதிதாக கொண்டு வந்திருக்கும் 3G(மூன்றாம் தலைமுறை சேவை)என்ற புதிய சேவையினால் என்ன பயன் ? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் ...
1. மொபைல் மூலமாக "3G" என்று சொல்லப்படுகின்ற அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் இந்தியாவில் இப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.அதுகூட இன்னும் முக்கியமான மாநகரங்களில் கூட முழுமையாக அறிமுகப்படுத்தப்படவில்லை.மேலும் பி.எஸ்.என்.எல் தவிர மற்ற தனியார் நிறுவனங்களுக்கு இன்னும் அனுமதி கொடுக்கப்படவே இல்லை.ஆக 3G சேவை நாடு முழுவதும் வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகிவிடும், வெளிநாடுகளில் 3G யின் அடுத்த அதிவேக சேவையாக சொல்லப்படுகின்ற 4G (fourth-generation ) என்ற சேவையே வந்துவிட்டது.
சரி இந்த "3G" சேவையின் பயன்கள் என்னென்ன?
1. அதிவேக 3Mbps வரையிலான இணையதள சேவையை நாம் மொபைலிலேயே பெறலாம் .
2. இப்போது நீங்கள் தொலைபேசி மூலமாக இணையசேவையை பயன்படுத்துவீர்கள். சுமாரான வேகம் இருக்கும்,ஆனால் ஒரே இடத்தில் இருந்து பயன்படுத்த வேண்டும். அடுத்ததாக வெளியே எங்கும் சென்றால் WI-FI மூலமாக இணைய இணைப்பை பெறலாம் ஆனால் அதில் வேகம் இருக்காது. அல்லது லேப் -டாப்பில் இணைக்கக் கூடிய USB MODAM மூலமாக இணைய இணைப்பை பெறலாம். இதில் வரும் வேகமும் மிகமிகக் குறைவு இதில் இப்போது அதிகபட்சம் 256kpbs வரை தான் வேகம் கொடுக்கப்படுகிறது . ஆனால் 3G சேவை வந்தபிறகு அதன்மூலமாக USB MODAM பயன்படுத்தி 3Mbps வரையிலான இன்டர்நெட் இணைப்பை பெற முடியும் அதற்கான USB STICK குகளை AIRTEL, B.S.N.L, RELIANCE VODAFONE, TATAINDICOM போன்ற நாட்டின் அனைத்து முன்னணி தொலைபேசி நிறுவனங்களும் விற்பனைக்கு கொண்டுவரும். அப்படி கொண்டு வருகிற பட்சத்தில் இப்போது நாம் 256 Kbps என்ற படுமட்டமான இன்டர்நெட் வேக இணைப்பிற்கு கொடுக்கும் 800 ரூபாயை 1Mbps வேக இணைப்பிற்கு கொடுத்து குறைந்த செலவில் அதிவேக இன்டர்நெட் இணைப்பை பெற்று மகிழலாம்.மேலும் எங்கு வேண்டுமானாலும் அதிவேக இணைய இணைப்பை பெறமுடியும்.
3.தடைபடாத "VIDEO STREAMING" சாத்தியமாகிறது,அதாவது இப்போது நீங்கள் "YOUTUBE" தளத்தில் ஒரு வீடியோவை பார்க்கவிரும்பினால் அதை தொடர்ச்சியாக பார்க்க முடியாது நின்று,நின்று தான் வரும். 3G மூலம் இந்த குறை களையப்படும்.
4. 3G மூலம் செல்போனில் வீடியோஅழைப்புகள் செய்யமுடியும்.அதாவது இப்போது நாம் எதிர்முனையில் பேசுபவர் யார்? என்று முகம் தெரியாமல் தான் பேசுகிறோம்.ஆனால் 3G யில் எதிர்முனையில் பேசுபவரின் முகத்தை பார்த்து பேசமுடியும்.ஆனால் அதற்கு 3G வசதியுள்ள செல்போன்களை இருவரும் வைத்திருக்கவேண்டும். அதில் 3G சேவையை இருவரும் பெற்றிருக்க வேண்டும்
5.சிறந்த "ஆன்லைன் கேமிங்" அனுபவத்தை பெறலாம்.ஆமாம்,3G வசதியுள்ள போன்கள் பெரும்பாலும் பெரியதிரை கொண்டவைகளாக இருக்கும் அல்லது நாம் அப்படிப்பட்ட போன்களை வாங்கிக்கொள்ள வேண்டும். நோக்கியாவில் (N-GAGE GAMING வசதி ) என்று சொல்லப்படுகின்ற கேமிங்போன்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிகொள்ளலாம்.
6.மொபைல் இணையதளம் மூலமாக டிஜிட்டல் ஒலித்தரத்தில் இன்டர்நெட் ரேடியோக்களை தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 24 மணி நேரமும் நாம் கேட்டு ரசிக்க முடியும் .
7. மொபைலில் நேரடி ஒளிபரப்பில் டிவி நிகழ்ச்சிகளை நாம் பார்க்க முடியும்.கிரிக்கெட் பார்ப்பதற்காக நீங்கள் வேலைக்கு லீவு போட வேண்டிய அவசியம் இருக்காது.நோக்கியாவில் N96 என்ற மாடலில் மட்டும் (MOBILE -TV) வசதி உள்ளது மற்ற கம்பெனி போன்களில் இன்னும் வரவில்லை.3G சேவை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும்போது எல்லா முன்னணி கம்பெனி செல்போன்களிலும் இந்த வசதி வந்துவிடும் . இப்படி,இன்னும் 3G யின் பயன்களை சொல்லிக்கொண்டே போகலாம் ...மொத்தத்தில் மிகச்சிறந்த "மல்டிமீடியா" அனுபவத்தை பெறுவதற்கு நீங்கள் தயாராகுங்கள்.எதிர்காலத்தில் கம்ப்யூட்டர்-போன் இரண்டும் ஒரே சாதனமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. |