இணையத்தின் ஊடாக அரட்டை(chatting) அடிப்பதற்காக ஏராளமான இலவச மென்பொருட்கள் (Freeware) உள்ளன.
AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, Jabber, மற்றும் Facebook அரட்டை என இத்தனை தளங்களும் இலவச அரட்டை அடிக்கும் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. ஆனால் ஒவ்வொரு தளத்தின் ஊடாக அரட்டை அடிப்பதற்கும் நாம் தனித்தனி மென்பொருட்களை இணையிறக்கம் (download) செய்து நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறோம்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜி-மெயில், யாகூ பயனர் கணக்கின் வாயிலாக அரட்டை அடிப்பது கடினம்.
Digsby- அரட்டை அரங்கங்களின் சங்கமம்
இவையனைத்திற்கும் பதிலாக ஒரு மாற்று மென்பொருள் பயன்பாடுதான் Digsby. இந்த ஒரே பயன்பாட்டை மட்டும் நிறுவிவிட்டு அனைத்து அரட்டை அடிக்கும் தளங்களின் பயனர்கணக்கையும், கடவுச்சொல்லையும் (User Name, Password)கொடுத்துவிட்டால் - இதை மட்டும் பயன்படுத்தி அனைவருடனும் சாட்டிங் செய்து மகிழலாம்.
சிறப்பம்சங்கள் :
1) எந்த பயனர் கணக்கிற்கு புதிய மின்னஞ்சல் வந்தாலும் அதை நினைவூட்டிவிடும். (E-Mail Alert)
2) நண்பர்களுக்குள் குறுஞ்செய்தி அனுப்ப உதவுகிறது. (SMS - Short Message Service)
3) Hotmail, Gmail, Yahoo Mail, AOL/AIM Mail, IMAP, மற்றும் POP மின்னஞ்சல் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து நிர்வகிக்க இயலும்.
4) நண்பர்களுக்குள் கோப்புப்பகிர்வு செய்வதும் இதன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது. (File sharing)
தள முகவரி : http://www.digsby.com/ |