Posted By:ganik70 On 3/24/2009
ஐதராபாத், மார்ச் 25: வீட்டில் இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு கம்ப்யூட்டர் இல்லையே என்ற வருத்தமா? கவலையை விடுங்கள், டிவி இருந்தால் போதும் இன்டர்நெட் பார்ப்பது ஈஸி. கம்ப்யூட்டர் இல்லாமலேயே இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கு உதவும் கருவியை 50 பேர் கொண்ட பொறியியல் நிபுணர் குழு கண்டுபிடித்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஐசிப் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் ‘அட்பாக்ஸ்‘ என்ற ஒரு கருவியை வடிவமைத்துள்ளனர். இதை எந்த ஒரு டிவி அல்லது வீடியோ கிராபிக் ஆரே (விஜிஏ) மானிட்டரில் பொருத்திவிட்டு இன்டர்நெட் பிரவுஸ் செய்யலாம்.
கீ போர்டு, டிராக்பால், பவர் அடாப்டர், டிவியுடன் இணைப்பதற்கான வயர் ஆகியவற்றின் உதவியுடன் இது செயல்படுகிறது. இதன் விலை ரூ.6,990.
‘‘உலகிலேயே முதன் முறையாக இந்த கருவி அறிமுகமாகிறது. இதற்கு சர்வதேச பேடன்ட் உரிமை பெறப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் 10 லட்சம் கருவிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஐரோப்பா, ஜப்பான், சிங்கப்பூர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்‘‘ என இந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கோட்டா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களுக்கு மலிவான விலையில் இந்த கருவியை வழங்குவதற்காக ஐசிப் நிறுவனம், பிஎஸ்என்எல் பிராட்பேண்டு உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 9 லட்சம் கருவிகள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் டிவி வைத்திருப்பவர்களுக்கு இந்த கருவி ரூ.2,500க்கு வழங்கப்படும். இதற்கு டெபாசிட், பொருத்துதல் கட்டணம் எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.
Posted By:ganik70 On 3/24/2009
|