Posted By:ganik70 On 3/26/2009 |
|
viagra na prodej viagra prodej cena பேராசிரியர் ஒருவர் உருவாக் கியுள்ள செல்போனுக்கான சாப்ட் வேரைப் பற்றி அறிந்து கொண்டால், இந்த கேள்விக்கான பதில் தானாக கிடைத்து விடும். கணிதத்திலும், கணித பாடத்தின் அறிவை மாணவர் களுக்கு போதிப்ப திலும் பேரார்வம் கொண்ட மிக்கேல் ஏரூஷ்லாமி என்னும் அந்த பேராசிரியர் செல்போன் களில் டவுன்லோடு செய்து கொள்ளக் கூடிய கணித சாப்ட்வேரை உருவாக்கி இருக்கிறார். இந்த சாப்ட்வேரை அவர் செல் போனுக்குள் அடங்கக்கூடிய கணித ஆய்வுக்கூடம் என்று வர்ணிக்கிறார். ஆய்வுக்கூட கோட்பாட்டை அவர் வலியுறுத்தும் விதமே சுவாரசியமாக இருக்கிறது. பௌதீகம் மற்றும் ரசாயனம் போன்ற பாடங்கள் ஆய்வுக்கூடங்களின் வழியே கற்பிக்கப்படுகிறது. அதே விதமாக கணிதமும் கரும்பலகையை மட்டுமே சார்ந்திராமல் ஆய்வுக் கூடத்துக்கும் இறங்கி வர வேண்டும் என்கிறார் அவர். அந்த உத்தேசத்தோடு கணித ஆய்வுக்கூடத்தை செல் போனில் டவுன்லோடு செய்யக்கூடிய சாப்ட்வேரை வடிவமைத்துள்ளார். இந்த சாப்ட்வேர் பற்றி சுருக்கமாக சொல்வதாயின் மாணவர்கள் கம்ப்யூட் டரின் உதவியோடு கணித சமன்பாடு களை கற்றுக்கொள்ள முடிவது போல செல்போன் மூலமே கணித சமன்பாடு களை தெரிந்து கொள்ள உதவக் கூடியது இது. அடிப்படையான சூத்திரங்களில் தொடங்கி மேல்நிலை படிப்பு வரையி லான கணித பாடங்களின் பல்வேறு சமன்பாட்டை சார்ந்த விஷயங்கள் இந்த சாப்ட்வேரில் அடங்கியுள்ளன. பொழுதுபோகாமல்இருக்கும்போது மாணவர்கள் செல்போனில் இருக்கும் கேம்களை விளையாடுவது போல இந்த கணித சமன்பாடுகளுக்கு தீர்வு காண முயற்சிக்கலாம். மாணவர்களுக்கு ஈடுபாடு மிக்கதாக இருக்கும் என்பதோடு, கணித பாடத்தை கற்றுக்கொண்டது போலவும் இருக்கும். இன்றைய உலகில் எல்லோரும் செல் போன்கள் வைத்திருக்கும் நிலையில் குறிப்பாக இளைய தலைமுறையினர் செல்போன் களுடனே பிறக்கும் நிலையில் தொழில்நுட்பத்தை பயன் படுத்தி கணித பாடத்தை கற்றுத் தரும் வகையில் இந்த சாப்ட்வேரை உருவாக்கியிருப்பதாக பேராசிரியர் தெரிவிக்கிறார். இதற்காக அவர் மேத் 4 மொபைல் டாட் காம் என்னும் இணையதளத்தை அமைத்திருக்கிறார். இந்த தளத்திலி ருந்து நான்கு வகையான கணித செயல்பாடுகளை டவுன்லோடு செய்து கொள்ள முடியும். கால்குலசில் தொடங்கி ஜாமன்ட்ரி, அல்ஜீப்ரா என பல்வேறு கணித பாடங்களை இந்த சாப்ட்வேர் மூலம் கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக இந்த சாப்ட்வேர் மூலம் கணித பாடங்களுக் கான தயாரிப்பை சரிபார்த்துக்கொள்ள லாம். அது மட்டுமல்லாமல், இந்த பாடங்களை எஸ்எம்எஸ் மூலம் பரிமாறிக்கொள்ளும் வசதியும் இருக்கி றது. எனவே மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய தீர்வை சக மாணவர் களுக்கு அனுப்பி வைக்கலாம். இதேபோல பள்ளி ஆசிரியரிட மிருந்து வீட்டுப்பாடத்தைப் பெற்று அதற்கான ஆலோசனைகளையும் பெறலாம். மேலும் பஸ்சின் வேகம், கார் சீறிப்பாய்ந்து செல்லும் வேகம் ஆகியவற்றை இந்த சாப்ட்வேர் உதவியோடு வரைபடமாக மாற்றி பார்க்கும் வசதியும் உண்டு. இவ் விதமாக கணிதத்தின் அடிப்படை செயல்பாடுகளை மாணவர்கள் புது விதமாக புரிந்துகொள்ளலாம். இது ஒரு ஆரம்பம்தான். மாணவர்க ளின் பயன்பாட்டுக்கேற்ப மேலும் பல கணித பாடங்கள் செல்போன் சாப்ட் வேராக வரும் என்கிறார் பேராசிரியர். இப்போது சொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தைரியமாக செல்போனை வாங்கிக்கொடுக்கலாம் அல்லவா, அதற்கு முன்பாக “math4mobile.com”ட்” தளத்திற்கு சென்று பாருங்கள். இந்த சாப்ட்வேருக்கு கட்டணம் கிடையாது. இலவசமான டவுன்லோடு செய்து கொள்ளலாம். அனைத்து விதமான செல்போன்களிலும் செயல் படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
———–
link; http://www.math4mobile.com/
|
|