Posted By:ganik70 On 4/8/2009 |
|
வரப்போகிற நம்ம நாடாளுமன்ற தேர்தலுக்கு டிவி சானல்கள், நாளிதழ்கள், பருவ இதழ்கள், விளம்பர நிருவனத்தினர், செய்தி வலைத்தளங்கள், வலைப்பூவினர் இப்படி மொத்த மீடியாவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வேலையில் இறங்கி விட்டனர்.
சும்மா இல்லாத கூகிள், நானும் இந்த தேர்தலை கவரேஜ் செய்யறேன்னு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளது. இதற்காக 'Lok Sabha Elections 2009' என்ற பெயரிட்டு ஒரு வளைத்தளத்தை திடீரென ஆரம்பித்துள்ளது.
அந்த சுட்டி இங்கே.
இந்தியா முழுக்க உள்ள பல தொகுதிகளின் Map, புள்ளிவிவரம், முக்கிய செய்திகள், வலைப்பூ உலக Talk, வீடியோன்னு தேர்தல் உலகத்தையே கண் முன் நிறுத்துகிறது.
மயிலாப்பூர்ன்னு தேடினா, Chennai Central, Tamilnadu-ன்னு தொகுதியை கரெக்டா மேப்பில் காட்டுது. உங்க ஊரை நீங்க தேடிப் பாருங்க.
Tendulkar Sachin என்று Mumbai செலக்ட் செய்து சர்ச் கொடுத்தால் 37 year Male, அப்பா பேர் Tendulkar Ramesh என்பதிலிருந்து voter list-ல் உள்ள முகவரி போன்ற எல்லா விவரத்தையும் கொட்டுகிறது.
நம்ம அரசியல்வாதிகளின் பன்ச் டயலாக்கை கூட விடலைன்னா பார்த்துக்குங்களேன்.
அப்ப கூகிள் ரொம்ப வேகம் இல்லே? .........அதுதான் இல்லை. போன வாரமே Yahoo தன் பங்கிற்கு India Election 09 வெப்சைட் ஆரம்பித்து கூகிளை முந்திவிட்டது.
சபாஷ்! சரியான போட்டி.
|