Posted By:jasmin On 5/25/2009 |
|
zoloft weed effects zoloft and weed side effects
ஏடாகூடப் பேச்சு ~~~~~~~~~~~~~~~ ஆசிரியர் : சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல? சிவா : அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க கூடத்தான் போன வாரம் ஒரு நாள் வரல, நான் ஏன்னுக் கேட்டேன்னா? ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதை பைத்தியம் ~~~~~~~~~~~~~~~
பத்திரிக்கைல கதைகளைப் படிச்சு படிச்சு அவர் மென்டலாவே ஆயிட்டார்!
ஏன் என்ன ஆச்சு?
கல்யாணப் பத்திரிகை கொடுத்தா கூட என்ன சார் இந்த வாரம் யாரோட கதைன்னு கேட்டு மானத்த வாங்கறார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஞாபக மறதிக்கு ~~~~~~~~~~~~~~ விஞ்ஞானி : ஞாபக மறதிக்கு ஒரு மாத்திரை கண்டு பிடிச்சினே அது எப்படி இருக்கு?
உதவியாளர் : அட நீங்க வேற... அத சாப்பிட்டவங்களுக்கு எல்லாம் போன ஜென்மத்து ஞாபகம் எல்லாம் வருதாம். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பாவி நோயாளி ~~~~~~~~~~~~~~~~~
டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்? ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சீரியலும் சண்டையும் ~~~~~~~~~~~~~~~~~~~~ உங்க மனைவிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் மனைவிக்கும் சண்டை சரி, ஆனா நேத்து மத்தியானம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தாறுமாறா திட்டிக்கிறாங்க அப்பறம் ஒரு 10 நிமிஷத்துக்கு சத்தத்தையே காணோம், அப்பறம் மறுபடியும் ரெண்டு பேரும் வந்து கன்னாபின்னான்னு திட்டிக்கிறாங்க அப்பறம் உள்ள போயிடறாங்க இது என்னென்னே புரியலையே?
ரெண்டு பேரும் மெகா சீரியலையும் பாக்கணும் சண்டையையும் விட முடியாதுல்ல அதான்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வானிலை ~~~~~~~~~
அவர் வானிலைத் துறையில் வேலை செய்றார்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்ற?
மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும் இருக்கலாம், இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே. ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சந்தோஷம் ~~~~~~~~~~ கல்யாணம் ஆச்சுன்னா உங்களுக்கு இருக்கற தோஷம் நிவர்த்தியாயிடும், அது அப்பறம் உங்க வாழ்க்கைப் பக்கமே எட்டிப்பாக்காது!
அப்படியா அப்படி என்ன தோஷம் ஜோசியரே அது?
"சந்தோஷம்"!!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ராமு - சோமு ~~~~~~~~~~~~
ராமு : என் மகன் ராஜாவா இருக்க வேண்டியவன்...
சோமு : எப்படி
ராமு : முதல்ல அவனுக்கு ராஜான்னுதான் பெயர் வைச்சோம். அப்புறம்தான் மாத்திட்டோம்.
சோமு : ?!?!?!? ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரப்பர் ஸ்டாம்ப் ~~~~~~~~~~~~~~ உங்க படத்துல குறிப்பிட்ட சில சீன்கள்ல மட்டும் சம்பந்தம் இல்லாம ரப்பர் ஸ்டாம்ப் வந்துட்டு போகுதே ஏன்?
அந்த சீன்லையெல்லாம் என்னோட "முத்திரை" இருக்குங்கறத சிம்பாலிக்கா காண்பிச்சிருக்கேன்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் நாளே ~~~~~~~~~~~~ என்ன டைரக்டர் சார் உங்க படத்துக்கு முதல் நாளே இவ்வளவு அடிதடி?
அப்படியா அப்ப படம் ஹிட்!
மண்ணாங்கட்டி! முதல் சீன் முடிஞ்ச உடனே அவ்வளவு பேரும் உடனே தியேட்டரை விட்டு வெளியே போகணும்னு முண்டியடிச்சா அடிதடி வராதா! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
|