Emaniya Mottukkal 2022 - ஈமானிய மொட்டுக்கள் 2022 - 10ம் ஆண்டு

போட்டி விபரங்கள் & விதிமுறைகள்

ஈமான் அறக்கட்டளை சார்பாக, நம் வளரும் தலைமுறையினருக்கு மக்தப் மதரஸா கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த வருடங்களைப் போல இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ள நமதூரின் அனைத்து மக்தப் மதரஸாக்களுக்கிடையிலான மார்க்க அறிவுப் போட்டி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் விபரம்:

16 & 17 ஜுலை 2022 (சனி & ஞாயிறு) இடம்: மீலாது மைதானம், 6வது தெரு

நாள் : 16 ஜுலை 2022 (சனி) நேரம்: காலை 9.00 to 12.30 (முதல் அமர்வு: இணையதள (Online) போட்டிகள்) (ஈமான் ஆடை மேளா, பாரம்பரிய பண்டக சாலை, புத்தகங்கள் பகிர்வு, கண்ணாடி ஃபிரேம் பகிர்வு) மாலை 4.30 to 10.00 (2ம் அமர்வு – போட்டிகள் & சிறப்பு அமர்வுகள்)
நாள் : 17 ஜுலை 2022 (ஞாயிறு) நேரம்: காலை 9.00 to 12.30 (முதல் அமர்வு - போட்டிகள்) மாலை 4.30 to 10.00 (2ம் அமர்வு – போட்டிகள், சொற்பொழிவு & பரிசளிப்பு)

இணையதள போட்டிகள் (Online)

1. ”வருங்கால ஹாஃபிழ்கள்” - 5 ஜுஸ்வுகள் குர்ஆன் மனனம்
2. “எமது முஹல்லா, எமது சிறப்பு” - பேச்சுப் போட்டி (Online)
3. ”வேர்களைத் தேடி” - பெண்களுக்கான வினாடி வினா போட்டி [Online Kahoot Quiz ]

மதரஸா மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள்

4. நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் மற்றும் இமாம் நவவி அவர்களின் 40 ஹதீத்களிலிருந்து வினாடி வினா போட்டி (Quiz)
5. இஸ்லாமியக் குறு நாடகம் ( Drama / Skit)
6. படம் பார்த்து நபிமார்களின் வரலாறு கூறும் போட்டி - சுட்டிக் குழந்தைகளின் குட்டிக் கதைகள்.

பொதுவான போட்டிகள்

7. “விளையாட்டில் மிளிர்வோம் வாழ்க்கையில் ஒளிர்வோம்” - கருத்தரங்கம்
8. எழுத்தழகியல் (Calligraphy) கலை போட்டி மற்றும் கண்காட்சி.
9. “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி” - குறும்பட போட்டி.
10. “மலரும் நினைவுகள்” – பெரியவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்.

நிகழ்வுகள் / கண்காட்சிகள் :

11. பாரம்பரிய பண்டகசாலை – Traditional Shops
12. ஈமான் ஆடைமேளா
13. புத்தகங்கள் பகிர்வோம்! அறிவை பெருக்குவோம்!,
14. கண்ணாடி ஃபிரேம் வழியே கருணையை பகிர்வோம்!.
15. எழுத்தழகியல் (Calligraphy) – மாணவ மணிகளின் கலை படைப்புகள்.


விதிமுறைகள்


அனைத்துப் போட்டிகளுக்கும் பொதுவான சில விதிமுறைகள்

  • மேடையில் (Stage) நடைபெறும் எந்த போட்டிகளிலும் வயதுக்கு வந்த / 13 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொள்ள அனுமதியில்லை.
  • போட்டிகளின் நோக்கம் ஏற்றமிகு ஏர்வாடியே அன்றி வேறில்லை. எனவே ஒவ்வொரு போட்டியிலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பதை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்களது பெயரை www.nellaieruvadi.com/em22 என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளவேண்டும்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கு கொள்ள விரும்பினால், ஒவ்வொறு போட்டிக்கும் தனித் தனியாக பதிவு செய்யவேண்டும்
  • முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும்.

இணையதள போட்டிகள் (Online)


”வருங்கால ஹாஃபிழ்கள்” - 5 ஜுஸ்வுகள் குர்ஆன் மனனம்

  • வயது வரம்பு இல்லை. இது ஹிஃப்ழு மாணவ, மாணவியருக்கானது.
  • போட்டியாளர்கள் ஏதேனும் ஐந்து ஜூஸ்வுவை மனனம் செய்திருக்க வேண்டும்.
  • போட்டி அன்று இணைய வழியில் (Online), மாணவர் மனனம் செய்த 5 ஜுஸ்வுகளில் இருந்து சில வசனங்களை சொல்லி நடுவர் ஓதச் சொல்வார். அவர் நிறுத்தச் சொல்லும் வரை உள்ள வசனங்களை ஓத வேண்டும்.
  • கேட்கப்படும் வசனங்களை / ஸுராக்களை மனனமாக பிழையில்லாமல் சரியான உச்சரிப்புடன் கிராஅத்தாக ஓதிக் காட்ட வேண்டும்.
  • மாணவரது மனனம், பிழையின்மை, உச்சரிப்பு (தஜ்வீத்) மற்றும் கிராஅத் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

2. "எமது முஹல்லா, எமது சிறப்பு " - பேச்சுப் போட்டி

  • இந்தப் போட்டி 11 முதல் 21 வரை வயதுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கானது.
  • முன்பதிவுகளைப் பொறுத்து இரண்டு வயதுவாரிக் குழுக்களாக நடத்தப்படலாம்.
  • இது மாணவ மாணவிகளின் ஆளுமைத்திறனையும் சமூக ஆர்வத்தையும் வெளிக்கொணரும் ஒரு முயற்சி.
  • போட்டியாளர், தமது முஹல்லாவின் சிறப்பு பற்றி பேச வேண்டும். தங்கள் முஹல்லாவின் பாரம்பரியம், ஏதேனும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், தங்கள் முஹல்லாவில் வாழ்ந்த முன்மாதிரியான ஆளுமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பேசலாம்.
  • தற்போது வாழும் நபர்களைப் பற்றி பேசக் கூடாது.
  • பிற முஹல்லாக்கள், அமைப்புகள், இயக்கங்கள், ஜமாஅத்துகள்,தனி நபர்கள் ஆகியோரை சிறுமைப்படுத்தும் விதமாகவோ , புண்படுத்தும் விதமாகவோ பேசக் கூடாது.
  • ஒரு போட்டியாளருக்கு அதிக பட்சம் 4 நிமிடங்கள் வழங்கப்படும்.
  • போட்டியாளரின் கருத்து, பேச்சு, அதில் வெளிப்படும் சமூக சிந்தனை அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
  • முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

3. ”வேர்களைத் தேடி” - பெண்களுக்கான வினாடி வினா போட்டி [Online Kahoot Quiz ])


  • இது பெண்களுக்கான இணைய வழி (Online) கேள்வி பதில் போட்டி. வயது வரம்பு இல்லை.
  • இது குழு போட்டியல்ல. ஒவ்வொருவரும் தனித்தனியாக கலந்து கொள்ள வேண்டும்.
  • இதில் தமிழ் கலாச்சாரம், ஏர்வாடி, மற்றும் பாரம்பரியம் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படும்.
  • போட்டி நடைபெறும் நேரம், Zoom ஆன்லைனில் https://kahoot.it/ என்ற ஆன்லைன் இணைய செயலி(Website tool) தளத்திற்கான PIN வழங்கப்படும். போட்டியாளர் அந்த PIN உள்ளீடு செய்து, தங்களது பெயரை கொடுத்து Quizக்குள் செல்ல வேண்டும். அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு அதில் குறிப்பிட்டுள்ள வினாடிகளுக்குள் பதிலை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்வி முடிந்த பின்பும் யார் மிக விரைவாக சரியான பதிலை சொல்கிறார்களோ அதனடிப்படையில் தரவரிசையை அந்தச் செயலியே தந்து விடும். இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் தந்து , இறுதியில் மொத்த கேள்விகளுக்கும் அதிகமான சரியான பதில்களை விரைவாகத் தந்தவர்களை 1,2,3 என வரிசைப்படுத்தும். அவர்களே போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

மதரஸா மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள்


4. நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் மற்றும் இமாம் நவவி அவர்களின் 40 ஹதீத்களிலிருந்து வினாடி வினா போட்டி


  • 7 முதல் 16 வயது வரையுள்ள மதரஸா மாணவ, மாணவியருக்கானது. (வயதுக்கு வந்த மாணவிகள் பங்கு பெற முடியாது).
  • ஒரு மதரஸாவிற்கு ஒரு குழு மட்டும் கலந்து கொள்ளலாம்.
  • ஒரு குழுவிற்கு குறைந்த பட்சம் 3 பேரிலிருந்து அதிக பட்சம் 5 பேர் இருக்கலாம்.
  • இமாம் நவவி(ரஹ்) அவர்களின் “நாற்பது ஹதீஸ்கள் “ என்ற புத்தகத்திலிருந்தும் நேர்வழி சென்ற நான்கு கலீஃபாக்களின் வரலாற்றிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.
  • மேடையில் நான்கு நான்கு குழுக்களாக போட்டி நடத்தப்படும்.
  • ஒரு போட்டிக்கு (4 Groups) 20 கேள்விகள் கேட்கப்படும்.
  • அதாவது ஒரு மேடையில் முதல் கேள்வி Group Aக்கும் இரண்டாவது Group B க்கும் 3 வது Group C க்கும் 4 வது கேள்வி Group D க்கும்செல்லும்.
  • கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும். அதிக பட்சம் 20 விநாடிகள் வழங்கப்படும்.
  • குறித்த நேரத்தில், சரியாக சொல்லப்படும் பதில்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
  • கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரியவில்லையென்றாலோ, நேரம் தாமதித்தாலோஅல்லது தவறாக பதிலளித்தாலோ , கேள்வி அடுத்த குழுவுக்கு செல்லும்.
  • ஒரு குழு பதில் சொல்லத் தவறிய கேள்விக்கு பதில் சொல்லும் குழுவிற்கு Extra Mark வழங்கப்படும்.
  • ஒரு கேள்விக்கு 4 குழுக்களுமே பதில் சொல்ல வில்லையென்றால் கேள்வி பார்வையாளர்களுக்கு செல்லும்.
  • ஒவ்வொரு செட்டிலும் வெற்றி பெறும் குழுக்களைக் கொண்டு இறுதிச் சுற்று நடத்தப்படும். இறுதியில் அதிக மதிப்பெண் பெற்ற மதரஸா குழு வெற்றியாளராக அறிவிக்கப்படும்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், அவற்றிற்கிடையே மீண்டும் ஒரு சிறப்பு கேள்வி சுற்று வைக்கப்பட்டு முடிவு செய்யப்படும்.

5. இஸ்லாமியக் குறு நாடகம் (Drama / Skit)


  • ஒரு மதரஸாவிற்கு ஒரு குழு மட்டும் கலந்து கொள்ளலாம். வயதுக்கு வந்த சிறுமிகள் மற்றும் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
  • ஒரு குழுவிற்கு குறைந்த பட்சம் 2 பேரிலிருந்து அதிக பட்சம் 7 பேர் வரை இருக்கலாம்.
  • நாடகத்தின் தலைப்பையும், உரையாடல்களையும் (Script) அந்தந்த மதரஸாக்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஈமான் சார்பாக ஏற்பாடு செய்து தர இயலாது.
  • ஒரு நாடகம் அதிக பட்சம் 10 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
  • நாடகத்தின் தலைப்பின் அடிப்படையில் இஸ்லாமிய வரையறையில், இஸ்லாமிய மாண்புகளை / நல்ல செய்தியை எடுத்து சொல்லும் விதமாக நாடகம் அமைய வேண்டூம் (உதா: ஒழுக்க மாண்புகள், போதை வஸ்துகளின் தீமைகள், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் மற்றும் மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வி, … போன்ற தலைப்புகள்).
  • நாடகத்தின் வசனங்கள் மற்றும் செயல்கள் தனிநபரையோ, ஜமாத்தையோ, அமைப்பையோ விமர்சிப்பதாகவோ, புண்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது.
  • நாடகக் கதாபாத்திரத்திற்குத் தேவையான உடைகளை (costumes) அந்தந்த மாணவர்களே கொண்டு வர வேண்டும்.
  • நாடகத்தின் தலைப்பைப் பொறுத்து அதற்குத் தேவையான அளவு தகுதியான மாணவ மாணவிகளை மதரஸா ஆசிரியர் தேர்வு செய்து ஈமான் நிர்வாகிகளிடம் முன்னரே சொல்ல வேண்டும்.
  • மாணவர்களுக்கு நாடகத்திற்கான பயிற்சிகளை மதரஸா ஏற்பாடு செய்யவேண்டும்.
  • ஒவ்வொரு மதரஸாவும் தாங்கள் திட்டமிட்டுள்ள தலைப்பு மற்றும் உரையாடல்களை (Script) இன்ஷா அல்லாஹ் 10-7-2022 ஞாயிற்றுகிழமை க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • நாடகத்திற்கு பதிவு செய்த மதரஸா குழுக்கள் , தங்களின் நாடகத்தை இன்ஷா அல்லாஹ் நிகழச்சிக்கு ஓரிரு நாட்கள் முன்பு ஈமான் பிரதிநிதிகள் நேரில் வரும்போது சிறு ஒத்திகை செய்து காட்ட வேண்டும்.

6. சுட்டிக் குழந்தைகளின் குட்டிக் கதைகள்

  • இது மிகவும் சிறிய குழந்தைகளான 6 வயது மற்றும் அதற்குக் கீழுள்ள குட்டி மாணவ மாணவிகளுக்கான போட்ட.
  • நபிமார்களின் வரலாற்றிலிருந்து புகைப்படம் காட்டப்படும். அதனைப் பார்த்து அந்த புகைப்படம் சம்பந்தப்பட்ட நபியின் நிகழ்வை மழலைகள் கதை வடிவில் சொல்ல வேண்டும் (உதாரணம்: ஒட்டகம் கொடுக்கப்பட்டால் ஸாலிஹ் நபி பற்றி பேசவேண்டும்),
  • ஒரு போட்டியாளர் ஒரு கதை மட்டுமே சொல்ல முடியும். அதிக பட்சம் 2 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும் .

பொதுவான போட்டிகள்


7. “விளையாட்டில் மிளிர்வோம் வாழ்க்கையில் ஒளிர்வோம்” - கருத்தரங்கம்.

  • இந்த கருத்தரங்கம் 23 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கானது.
  • வளர்ந்து வரும் தொழில் நுட்ப யுகம் காரணமாக விளையாட்டில் ஆர்வம் செலுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரியது. விளையாட்டு உடல் நலனுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு ஒளிமயமான ஒரு இளந்தலைமுறையை உருவாக்கவும் பயன்படுகிறது. விளையாட்டுத் துறையில் எவ்வாறு சாதித்து வாழ்க்கையை ஒளிமிக்கதாக ஆக்கலாம் என்பதை பங்குபெறுபவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்

8. எழுத்தழகியல் (Calligraphy)கலை போட்டி மற்றும் கண்காட்சி.

  • 11 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கானது. மதரஸா மாணவ, மாணவியர்களும் மற்றவர்களும் பங்கு பெறலாம்.
  • இது மாணவ மணிகளின் கலைத்திறனைக் வெளிக்கொணரும் ஒரு முயற்சி
  • calligraphy க்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் போட்டியாளர்கள் கொண்டு வர வேண்டும்.
  • போட்டியாளர், போட்டி நடைபெறும் இடத்தில் (On the Spot) செய்து காட்ட வேண்டும்.
  • போட்டியளருக்கு அதிகபட்சம் 60 நிமிடங்கள் வழங்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகள் பார்வையாளர்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

9 “போதைகளற்ற ஆற்றல்மிக்க ஏர்வாடி”- குறும்பட போட்டி

  • இந்தப் போட்டி இளைஞர்களுக்கானது. இதில் குழுவாகவும் பங்கு பெறலாம். அதிக பட்சம் 5 பேர்க: ஒரு குழுவில் இருக்கலாம்.
  • தற்போதுள்ள சூழ்நிலையில் நமது ஏர்வாடியை எவ்வாறு போதைகளில்லாத ஊராக மாற்றலாம், அழிவுப் பாதைகளைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பாதைகளில் எவ்வாறு பயணிக்கலாம் போன்றவற்றினை மையமாக வைத்து உங்களது குறும்படம் இருக்க வேண்டும்.
  • கருத்துக்கள், ஆலோசனைகள் இஸ்லாமிய வரையறைக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
  • குறும்படம், பிற குறும்படங்களிலிருந்து நகல் எடுத்ததாக இருக்க கூடாது
  • போட்டியாளர் ஏர்வாடியை பூர்வீகமாகக் கொண்டவராக இருக்க வேண்டும்
  • போட்டியாளருக்கு வயது வரம்பில்லை.  குறும்படம் 10 நிமிடத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • எந்த ஒரு தனி நபரையோ, சமூகத்தையோ விமர்சிப்பதாகவோ, புண்படுத்துவதாகவோ இருக்க கூடாது
  • போட்டியாளர் தற்போதைய முகவரியையும், ஏர்வாடி முகவரியையும் , தொலைபேசி எண்ணையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்*

10. மலரும் நினைவுகள் – பெரியவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்

  • இந்த கலந்துரையாடல் 65 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கானது.
  • தங்கள் வாழ்க்கை முறையையும் தற்போதுள்ள வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு பெரியவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும்.
  • இளந் தலைமுறைகளுக்கு தங்கள் வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை பெரியவர்கள் பகிரலாம்.

நிகழ்வுகள் / கண்காட்சிகள் :


11. பாரம்பரிய பண்டகசாலை (கடைகள்) – Traditional Shops

  • பாரம்பரிய பண்டக சாலைகள் (கடைகள்) மாதிரி மீலாது மைதானத்தில் ஈமான் மூலம் ஏற்பாடு செய்யப்படும். இதில் வைப்பதற்காக கலந்து கொள்ள விரும்புபவர்கள் பாரம்பரிய பாத்திரத்தில் பாரம்பரிய் பண்டங்கள் ஒன்றை (உதா : கல்கோனா, கமர்கட்டு, குழல், etc..) கொண்டு வந்து வைக்க வேண்டும்.

12. ஈமான் ஆடைமேளா

  • ஈமான் ஆடை வங்கியிலுள்ள உபயோகப்படுத்தும் படியான புத்தாக்கம் செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள், இளையோர், முதியோர் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான ஆடைகளை தேவையுடையர்கள் கண்ணியாமான முறையில் நேரில் வந்து பார்த்து தேர்ந்தெடுத்து செல்லும் வகையில் ஆடைகள் வைக்கப்படிருக்கும்.
  • உங்களிடமுள்ள அதிகப்படியான, உபயோகப்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் ஆடைகளை தேவையுடையர்களுக்கு பகிர்ந்து கொள்ள நாடினால் அவற்றை சலவைச் செய்து, அயர்ன் செய்து கொண்டு வந்தும் தரலாம்.

13. புத்தகங்கள் பகிர்வோம்! அறிவைப் பெருக்குவோம்!

  • உங்களிடமுள்ள நீங்கள் படித்து முடித்த, இனிமேல் தேவைப்படாத நல்ல புத்தகங்களை கொண்டு வந்து தாருங்கள்.
  • உங்களுக்கு பயன்படக் கூடிய நல்ல புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்.  வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவோம்.

14. கண்ணாடி ஃபிரேம் வழியே கருணையை பகிர்வோம்!

  • ஈமான் கண்ணாடி ஃபிரேம் வங்கியிலுள்ள உபயோகப்படுத்தும் படியான நல்ல நிலையிலுள்ள கண்ணாடி ஃபிரேம்கள் காட்சியகப் படுத்தப் பட்டிருக்கும். தேவையுடையர்கள் கண்ணியாமான முறையில் நேரில் வந்து பார்த்து தேர்ந்தெடுத்து செல்லாம்.
  • உங்களிடமுள்ள அதிகப்படியான, உபயோகப்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் கண்ணாடி ஃபிரேம்களை தேவையுடையர்களுக்கு பகிர்ந்து கொள்ள நாடினால் அவற்றை கொண்டு வந்து தரலாம்.

15. எழுத்தழகியல் (Calligraphy) – மாணவ மணிகளின் கலை படைப்புகள்

  • எழுத்தழகியல் (Calligraphy) போட்டியில் கலந்துகொண்ட மாணவமணிகளின் படைப்புகள் காட்சிக்காக வைக்கபடும்.