Eruvadi Muslim Association

Eruvadi Muslim Association (EMAN)

ஏர்வாடி முஸ்லிம் சங்கம்

தோற்றம் : எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ஏர்வாடி மக்களின் நலனிற்காக ஏர்வாடி சகோதரர்களால் 1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபை நகரத்தில் ஏர்வாடி முஸ்லிம் சங்கம் ( Eruvadi Muslim Association - EMAN ) தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய சகோதரிகளின் திருமண உதவிக்காக தொடங்கப்பட்டாலும் நாளடைவில் ஏர்வாடி மக்களின் நலனுக்காக பல்வேறு உதவிகளை வழங்க ஆரம்பித்தது.

தற்போதைய செயல்பாடுகள் :
  • நன்றாக பயிலும் ஏழை மாணவ மாணவிகளின் படிப்பிற்கு உதவுவது.
  • வசதியற்றோரின் மருத்துவ செலவிற்கு உதவுவது.
  • சிறு தொழில் தொடங்க கடன் கொடுத்து உதவுவது.
  • ஏர்வாடியில் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவுவது.
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் திருமணத்திற்கு உதவுவது
  • ஏர்வாடி மக்களின் ஈருலக வெற்றிக்காக பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்துவது


செயல்முறை
  • ஈமான் உறுப்பினர்களின் குறைந்தபட்ச மாதச்சந்தாத்தொகை திர்ஹம் 10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நன்மையை நாடி இதற்கு அதிகமாக தர விரும்பும் உறுப்பினர்களும் அளிக்கலாம்.
  • பிரதி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.
  • பிரதி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையில் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும்
  • ஊரிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் கூட்டத்தில் வாசித்துக் காண்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்.
  • ஆலோசனைக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கிணங்க முடிவு எடுக்கப்படும். எடுத்த முடிவுகள் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
  • ஆலோசனைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு எடுக்கும் முடிவே இறுதி முடிவாகும்.
  • கூட்டத்தில் முடிவு செய்த கடன் மற்றும் உதவித் தொகைகள் ஈமான் - ஏர்வாடி பிரதிநிதிகள் மூலம் விண்ணப்பதாரரிடம் வழங்கப்படும்.

ஈமானின் அறப்பணிகள் தொடர்ந்து நடைபெற அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும். ஈமான் நிர்வாகம் சம்பந்தமாகவும் ஏர்வாடி மற்றும் ஈமானின் வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 

Eruvadi Muslim Association - EMAN.
Nellai Eruvadi