ஈமானிய மொட்டுக்கள் 2016

Posted by S Peer Mohamed (peer) on 9/25/2016 2:33:39 PM

அல்லாஹ்வின் மகத்தான கருணையினால் ஏர்வாடி முஸ்லிம் அறக்கட்டளை சார்பாக செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஈமானிய மொட்டுக்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஈமானிய மொட்டுக்களின் நான்காவது நிகழ்ச்சியாகும் இது.

இரண்டு தினங்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் குர்ஆன் மனனம், கிராஅத், பகரா பாக்கியசாலிகள், குட்டிக்குழந்தைகளின் சுட்டிக் கதைகள், துஆ மனனம், வம்சாவழி போட்டி, காகிதத்தில் கைவண்ணம், குறு நாடகங்கள், பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவு, விருதுகள் வழங்கல் என பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.



சூரா பகராவை முழுமையாக மனனம் செய்த மூன்று குழந்தைகள் பிற குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கினர் என்றால் மிகையாகாது. அதுபோல் சூரா பகராவின் 100 வசனங்களை மனனம் செய்தவர்களிலும் ஏராளமான குழந்தைகள் இடம் பெற்றனர்.

ஒரு பக்கம் கிராஅத்திலும், துஆ மனனம் செய்வதிலும் தங்களது திறமையை வெளிக் கொண்டு வந்த சிறார்கள் மற்றொரு புறம் பட்டிமன்றம், நாடகங்களில் அசத்தினர். தங்களது பரம்பரையை குழந்தைகள் அறியும் விதமாக நடத்தப்பட்ட வம்சாவழி போட்டியில் தங்களது குடும்பத்தின் வம்சாவழியினை அழகான முறையில் தயாரித்துக் கொண்டு வந்தனர்.

ஈமானிய மொட்டுக்களின் ஒரு பகுதியாக பொதுமக்களிடையில் நீர் சேமிப்பினை வலியுறுத்தும் வகையில் “ நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி” என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

நாடகங்களில் மக்களுக்கு தேவையான பல்வேறு கருத்துக்களை அழகாகவும் அற்புதமாகவும் வெளிக்கொண்டு வந்தனர் குழந்தைகள். ஈமான் சார்பாக விருதுகள் வழங்கும் நிகழ்வு இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது. ஏர்வாடியின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் சமூக ஆர்வலர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

ஏர்வாடி அரசினர் ஆண்கள் பள்ளி ஆசிரியர் சகோதரர் தங்கவேல் அவர்கள் நம்பியாற்றினை என் எஸ் எஸ் மூலம் சுத்தப்படுத்த எடுத்த முயற்சிக்கும், பள்ளிக்கு புதிய வகுப்பறைகளை கொண்டு வர எடுத்த நடவடிக்கைக்கும் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

ஏர்வாடி பஞ்சாயத்து மூலமாக பேரூராட்சி திருமண மண்டபம், சாலைகள் நிர்மாணித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததற்கும், ஊழலற்ற பஞ்சாயத்து என பத்திரிகைகளால் பாராட்டும் வகையில் செயல்பட்டதற்கும் பஞ்சாயத்து தலைவர் சகோதரர் ஆசாத் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஏர்வாடியின் வரலாற்றினை ஆய்வுகள் செய்து யர்பாத் என்ற சிறந்த ஆவணப்படத்தினை தயாரித்த சகோதரர் ஆதில் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சுவனம் நமது வீடுகளில் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் மௌலவி நூஹ் மஹ்ளரி. நமது குடும்பத்தினர் அனைவரும் சுவனவாதிகளாக மாறுவதற்கான வழிமுறைகளை எளிய முறையில் தமது உரையில் விளக்கினார். கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்ற படிப்பினைகளை அவர் விளக்கிய விதம் அருமையாக இருந்தது.

அனைத்து போட்டிகளிலும் வென்ற மொட்டுக்களுக்கு சிறப்பான பரிசுகள் அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

சகோதரர் மாஹின் அவர்களின் நன்றியுரையுடன் மக்களின் மனம் கவர்ந்த இரண்டு நாள் இனிய நிகழ்வுகள் நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சிக்காக குழந்தைகளை பயிற்றுவித்த மக்தப் மதரஸா ஆசிரியப் பெருமக்களும் பெற்றோர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு இரவு பகலாக தங்களது உடலையும் பொருளாதாரத்தினையும் வழங்கி பாடுபட்டு வெற்றி பெற உழைத்த கீழ்கண்ட சகோதர சகோதரிகளை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
சகோதரர் முஹைதீன் ( ஈமான் பிரதிநிதி, ஏர்வாடி)
சகோதரர் கானா மூனா அப்பா ( லெப்பை வளைவு பிரதிநிதி)
சகோதரர் முஹைதீன் ( முஹைதீன் பள்ளித் தெரு பிரதிநிதி)
சகோதரர் செய்யதப்பா ( மேல முஹல்லம் பிரதிநிதி)
சகோதரர் முத்துவாப்பா ( கீழ முஹல்லம் பிரதிநிதி)
சகோதரர் முஸ்தபா ( நடு முஹல்லம் பிரதிநிதி)
சகோதரர் ஜமீல் ( பைத்துஸ்ஸலாம் பிரதிநிதி)
சகோதரர் ஆஸிக் பிர்தெளஸி ( ஈமான் அலுவலகப் பிரதிநிதி)


மற்றும் தன்னார்வலர்களாக சிறப்புடன் செயல்பட்ட
சகோதரர் ஆதில்
சகோதரர் ஏஜாஸ்
சகோதரர் அஷ்பாக்
சகோதரர் ஆலிம்
சகோதரர் செய்யதப்பா
சகோதரர் ஸாஹிப்
சகோதரர் யாஸர்
சகோதரர் சுஹைல்
சகோதரர் சேக் பீர்
சகோதரர் ஷம்சுதீன்
சகோதரர் இப்ராஹிம்
சகோதரர் அமீன்
சகோதரர் அல்தாப்
சகோதரர் ஜாபர்
சகோதரர் இம்ரான்’
சகோதரர் பாஸில்
சகோதரர் வாஜித்
சகோதரர் ஸலாகுதீன்
சகோதரர் இம்தியாஸ்
சகோதரர் ஆதில் ( 8வது தெரு)
சகோதரர் ஹனீபா
சகோதரர் ஸதக் அப்துல்லாஹ்
சகோதரர் ஸப்ரான்
சகோதரர் அப்துல் ரஹ்மான்
சகோதரர் சித்திக்
சகோதரர் அமீர் புஹாரி
சகோதரர் முஹம்மத்
சகோதரர் ஹிதாயத்துல்லாஹ்
சகோதரர் அஹமத் முஹைதீன்
சகோதரர் ஹாஜா

மற்றும் பெண்கள் பகுதியில் தன்னார்வலர்களாக பணியாற்றிய அகமது மதரஸா மாணவிகள் மற்றும் 4 சகோதரிகள்





EMAN NEWS
1. 29-03-22 ஈமானிய மொட்டுக்கள் போட்டிகள் - 2022 - S Peer Mohamed
2. 12-30-20 அமீரக ஈமான் கிரிக்கெட் 2020 - S Peer Mohamed
3. 28-47-19 அமீரக வாழ் ஏர்வாடி உறவுகளின் பாரம்பரிய கலாச்சார சங்கமம் - 19/4/2019 - S Peer Mohamed
4. 16-54-19 ஈமானின் புதிய தலைவர் நியமனம் . - S Peer Mohamed
5. 31-36-17 அமீரக ஈமான் பாரம்பரிய விளையாட்டு மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி: (With Photos) - S Peer Mohamed
6. 21-39-17 ஈமான் அறக்கட்டளை: நீர் மேலாண்மைக் குழு - S Peer Mohamed
7. 21-24-17 ஈமான் அமீரகம் நடத்தும் ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு - S Peer Mohamed
8. 18-17-17 ஏர்வாடி சங்க(ம)மும் சங்க கால விளையாட்டுக்களும் – ஈமான் அமீரகம் - S Peer Mohamed
9. 08-11-16 M 2016: இஸ்லாமிய குறு நாடகம் - 3 (வரதட்சிணை) - S Peer Mohamed
10. 17-41-16 அமீரக ஈமானின் இஃப்தார் நிகழ்ச்சி - S Peer Mohamed
11. 27-24-16 ஈமான் ஜகாத் மற்றும் வரலாறு சிறப்பு நிகழ்ச்சி - S Peer Mohamed
12. 10-17-15 ஈமான் இஃப்தார் - மலரும் நினைவுகள் - S Peer Mohamed
13. 10-34-15 அமீரக ஈமான் இஃப்தார் நிகழ்ச்சி / 26.06.2015 / Photos - S Peer Mohamed
14. 26-50-15 ஈமான், அமீரகம் நடத்தும் இப்தார் நிகழ்ச்சி / 26-06-2015 - S Peer Mohamed
15. 02-30-15 01-ஜனவரி-2015. ஈமான் அமீரகம் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி - S Peer Mohamed
16. 11-06-14 மணம் வீசிய ஈமானின் ஈமானிய மொட்டுக்கள் 2014 - Haja Mohideen
17. 03-48-14 ஈமான் அமீரகம் பெருநாள் கூட்டம் / 04-10-2014 - S Peer Mohamed
18. 13-42-14 வளைகுடா வாழ் மக்களுக்கான சிறப்புப் பொருளாதார விழிப்புணர்வு பயிற்சி முகாம் - S Peer Mohamed
19. 10-45-13 இஸ்லாமியக் கண்காட்சிக்காக ஓர் வேண்டுகோள் - S Peer Mohamed
20. 30-00-12 EMAN - Dubai: Cricket - Venue and Location Map - S Peer Mohamed
21. 22-00-12 ஈமான் அமீரகம் - பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி (26-10-2012) - S Peer Mohamed
22. 13-00-12 ஈமான் அமைப்பின் மாதாந்திர கூட்டம் 14.09.2012 - Mohamed Uvais
23. 04-00-12 ஏர்வாடி செய்திகள் - Mohamed Uvais
24. 13-00-12 ஈமான் சிறப்புக் கூட்டம் - Mohamed Uvais
25. 22-00-12 EMAN UAE - Sports Day - S Peer Mohamed
26. 24-00-12 டாக்டர் அப்துல்லாஹ் / ஏர்வாடி 6வது தெரு உரை / வீடியோ - S Peer Mohamed
27. 19-00-12 ஈமான் பொது உறுப்பினர் கூட்ட அறிக்கை - 13.01.2012 - Mohamed Uvais
28. 11-00-12 கட்டுரைப்போட்டி (Nov-2011): முத‌ல் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
29. 23-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை - S Peer Mohamed
30. 20-00-11 கட்டுரைப்போட்டி (Nov-2011): மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை - 2 - S Peer Mohamed



The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..