ஏர்வாடி சங்க(ம)மும் “சங்க கால” விளையாட்டுக்களும் – சிறப்பு நிகழ்வு ( நமதூர் பாரம்பரிய விளையாட்டுக்கைளுடன் ஒரு மக்கள் சங்கமம் )
அன்புள்ள ஈமானிய சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. இன்ஷா அல்லாஹ்... நாள் : 29/12/2017 வெள்ளி நேரம் : காலை 9.00 முதல் மாலை 5:00 மணி வரை இடம் : ஷஃபீல் பார்க் ( கேட் நம்பர் 3 ) மெட்ரோ : ஜாஃபிலிய்யா கேட் நம்பர் : 2 & 3 ( Sana Signal அருகில் உள்ள ) நுழைவு வாயில் (டிக்கெட் nol card மூலம் வாங்க வேண்டும்)
சிறப்பம்சங்கள் : நமது பாரம்பரிய ஊர் விளையாட்டுக்களை நாமும் நமது தலைமுறைகளும் அறியும் பொருட்டு கீழ் காணும் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சகோதரர்களுக்காக….. 1. கபடி 2. ஆபியம் மனியாபியம் 3. கஸகஸா 4. உறியடி 5. ஏழு கற்கள் 6. கோலிக்காய் 7. பம்பரம் 8. குச்சி கம்பு 9. வார்த்தை விளையாட்டு (தற்போதைய புழக்கத்தில் இல்லாத மறைந்து போன நமதூர் வார்த்தைகளை கொண்டு 3 நிமிடம் பேச வேண்டும் அதிகமான வார்த்தைகளை பிரயோகிப்பவர் வெற்றியாளர்)
சகோதரிகளுக்காக.. 1. சிட்டிக்கல் 2. பல்லாங்குழி 3. பாண்டி (நொண்டி) 4. கொல கொலயா முந்திரிக்கா 5. குச்சி குச்சி தாம்பூலம் 6. மொழியின்றி பழமொழி (சீட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ள பழமொழிகளை ஒவ்வொருவராக வந்து எடுத்து அந்த பழமொழியை நடித்து காட்ட வேண்டும். மற்றவர்கள் அதனை எது என சொல்ல வேண்டும்)
குழந்தைகளுக்காக • பாரம்பரிய உடை போட்டிகள் (Traditional Dress competition) , • பழைய ஏர்வாடி பற்றி புதிய தலைமுறை" முந்திய காலத்தில் நமதூரின் பாரம்பரியம் கலாச்சாரம் , இயற்கை வளம் ( நம்ம ஆறு பற்றி ,,, ) மற்றும் நினைவுகள் பற்றி வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கேட்டு குழந்தைகள் 3 நிமிடங்களில் சொல்லும் போட்டி. இதன் மூலம் நமக்கு சிறந்த நினைவுகள் மட்டுமின்றி , அடுத்த தலைமுறைக்கு ஒரு எழுதப்படாத வளமான ஏர்வாடியின் வரலாறு pass பண்ணப்படும் வாய்ப்பு ஏற்படும் இன்ஷா அல்லாஹ், இதற்காக தங்களது குழந்தைகளை தயார் செய்யவும். • ஐஸ்பால், ,கன்னி மூலை மற்றும் கிளி வந்து நுள்ளி போ • எளிய ஆங்கில வாக்கியங்களுக்கு கலப்பின்றி தமிழில் சொல்லுதல் ----------------------------------------------------------------------------- மதிய உணவாக தலைவாழை இலையில் நெய்சோறு நமதூர் பாரம்பரிய உடையில் (சாரம் , சட்டை & தொப்பி) ஒரு குழு புகைப்படமும் (Group Photo) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அமீரக வாழ் ஏர்வாடி சொந்தங்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு அழைக்கிறோம்
வாகன வசதி தேவைப்படுபவர்கள் கீழ்கண்ட சகோதரர்களை தொடர்புக் கொள்ளவும்
சகோதரர் அமீர் புஹாரி-052 7312887 சகோதரர் தவ்பீக்-056 5205868 சகோதரர் ஜைனுல்-055 8428716
அபுதாபி சகோதரர் முஹம்மத்-050 7129759 சகோதரர் ரபிக்-050 6429360
போட்டியில் பங்குபெற ஆர்வமுள்ளவர்கள் வாட்சப் மூலம் தகவல் தெரிவிக்கவும் அல்லது தங்களை தொடர்புகொள்ளும் ஈமான் ஷூரா சகோதரர்களிடம் பெயரையும் போட்டியையும் முன்பதிவு செய்துகொள்ளவும்
வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
ஈமான் அமீரகம்
குறிப்பு : 1. சகோதரர்கள் தங்கள் வருகையினை வாட்சப் மூலம் அல்லது தங்களது சூரா உறுப்பினர்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
2. உணவினை விரயம் செய்யாமல் இருப்பதற்காக வருகையை உறுதிப்படுத்தி விட்டு வராமல் இருந்து விட வேண்டாம்.
|