Posted by S Peer Mohamed
(peer) on 12/21/2017 12:39:47 PM
|
|||
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் ஏர்வாடியின் நீர் வளத்தை பாதுகாக்க கீழ்கண்ட திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். 1. தெருக்களில் மழை நீர் சேகரிப்பு தளங்கள் அமைப்பது. இதன் ஆரம்பமாக தற்பொழுது, முஹைதீன் பள்ளித் தெருவில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து கொண்டிருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ். இந்த முறை வெற்றி பெற்றால் அடுத்தடுத்த தெருக்களிலும் இதே முறையில் அமைக்கப்படும் இன்ஷா அல்லாஹ். அடுத்த கட்டமாக இரண்டாவது தெரு மற்றும் மதினா நகரில் ஆற்றில் கலக்கும் சாக்கடைகளை தடுத்து சோக் பிட் முறையில் தூய்மைப் படுத்தப்படும். இரண்டாவது தெரு பாலத்தின் அருகில் எளிதான முறையில் தண்ணீர் தேங்க குளித்துறை அமைக்க நினைக்கிறோம். இதில் உங்களுடைய யோசனைகள் வரவேற்கப்படுகிறது. இதை பற்றி மேலும் விபரங்கள் அறிய சகோதரர் முஹைதீனை (9566773469) தொடர்பு கொள்ளவும். மேற் கூறியவைகளை திட்டமிட்ட படி முடித்தால் நாம் நமது திட்டத்தின் முதல் மைல் கல்லை அடைந்ததாக அமையும். பின்னர் நாம் நமது இரண்டாவது மைல் கல்லை நோக்கி நகரலாம். மேற் கூறியவைகளை செய்துமுடிக்க உங்கள் அணைவரின் பங்களிப்பும் அவசியமாக இருப்பதால். அணைவரும் ஒன்றாக இணைந்து இந்த திட்டத்தை செயல் படுத்த உறுதுணையாக இருக்கும் படி கேட்டுகொள்கிறோம். நமது குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் முஹைதீன், தங்கவேல் சார் மற்றும் ஜனாப் சலாகுத்தீன் ஆகியோர்களுடன் தொடர்பில் இருங்கள். உங்கள் ஆலோசனைகளையும் பங்களிப்பையும் அதிகமாக இந்த பணிக்காக வழங்கிடுங்கள். அல்லாஹ் நம்முடைய இந்த முயற்சியை பெரும் வெற்றியாக்கி நமது மறுமை வாழ்கையை சிறப்பாக்கி வைப்பானாக.
வெளிநாடு சகோதரர்கள் இந்த திட்டங்களில் பங்கெடுக்க , ஆலோசனைகள் தெரிவித்திட சகோதரர் ஹனீப் முஹம்மத் அவர்களை தொடர்புக் கொள்ளவும். வாட்சப் : +971563434819 |
|||
|
|||
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |