Event Date: 11/7/2010
|
|
2011 தேர்தல் ஓர் பார்வை - ஆய்வரங்கம் | |
Date: 11/7/2010 |
Time: காலை 9 மணி
|
2011 தேர்தல்? ஒர் பார்வை - ஆய்வரங்கம்இடம் : மான்சுரோவர் உணவகம், முதல் தளம், 100, தெற்குவீதி, சிதம்பரம் நாள் : 7.11.2010, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.00 வரையில் "அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச்சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு". "ஒரு போரின் வெற்றியைத் தீர்மாணிப்பது ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும் வீரமும் விடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்". -மேதகு.பிரபாகரன்- தங்களது வாழ்க்கையில் விடிவு ஏற்படுத்தும் என்ற எண்ணங்கள் ஆசைகளோடு 3 கோடி மக்கள் தேர்தலில் பங்கேற்கின்றனர். இன்றைய அரசியல் கட்சிகளின் கறைபடிந்த வாழ்க்கையினை தங்கள் விரல்களை கறைபடுத்தி கொள்வதன் மூலம் அங்கீகரிக்கும் இம்மக்கள் தங்கள் வாழ்நாள் நெடுக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இவ்விதம் ஏமாற்றும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக செயல்படும் பல்வேறு மக்கள் திரள் அமைப்புகள் ஏமாற்றப்படும் மக்களுக்கு உதவுவதற்கு இவ்வரங்கத்தில் முன் வைக்கப்படும் ஆய்வுகள், பார்வைகள், கோணங்கள், திட்டங்கள், முடிவுகள் போன்றவை உதவும் என்று நம்புகிறோம். நிகழ்ச்சிநிரல் பதவி அரசியல் கட்சிகளை தூக்கியெறிய மக்களை தயார்படுத்துவம் ? - இராசேந்திரசோழன் - மண்மொழி (9.00-9.45) கேள்வி -பதில் (9.45-10.30)தமிழ்நாட்டில் மக்கள் திரள் போராட்டங்களின் அவசியமும், மக்கள் இயக்கங்களின் பலவீனமும் - தமிழ்நாட்டு தகுநிலையிலிருந்து - தியாகு - தமிழ் தேசிய விடுதலை இயக்கம் (10.30-11.15) கேள்வி -பதில் (11.15-12.00)தமிழக அரசியலில் இளைஞர்களின் பங்கு - ஜோதி நாராயணன் - தமிழிளைஞர் கூட்டமைப்பு (12.00-12.45) கேள்வி -பதில் (12.45-1.30)சட்டமன்ற தேர்தல் : மக்கள் தேவைக்கான மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நமக்கு தேவையான செயல்திட்டங்கள், செயல் தந்திரங்கள், தீர்மானங்கள் - ஆய்வு - பேரா.பழனிதுரை - காந்திகிராமம் (2.00-2.45)
கேள்வி -பதில் (2.45-3.30)பொதுவேட்பாளர்கள் - க.கோபிநாத் - தமிழக இளைஞர் சங்கம் - (3.30-4.00) தங்களுடைய வருகை இவ்வரங்கத்தின் மேன்மையினை பலப்படுத்தும் என்று நம்புகிறோம். தாங்கள் தங்களுடைய பங்களிப்பினை தவறாமல் பதிவுசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி ஏற்பாடு : வண்டமிழ் பாசாறை - 9750452394 நிகழ்ச்சி ஒருங்கினைப்பு : தமிழர் சமூக அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக் கழகம், சென்னை - 9042274271. குறிப்பு : காலை மற்றும் மதிய உணவு நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை பங்குகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தாழ்மையான வேண்டுகொள் - அலைப்பேசி அழைப்புகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளவும் (அ) அலைப்பேசி அழைப்பு சத்தத்தை குறைத்துக் கொள்ளவும். |
|
Click here to view the attachment | |
Posted By:
jasmin on 11/2/2010
|
|
|
|