Events


Event Date: 12/12/2010
2011 தேர்தல் - ஒர் பார்வை - ஆய்வரங்கம்
Date: 12/12/2010        
Time: 9 am to 4.30 pm
2011 தேர்தல் - ஒர் பார்வை - ஆய்வரங்கம்

 

 

 

இடம் : தொழிலாளர் விவசாயிகள் மையம், எண் 50, பயணியர் விடுதி, மகபூப் பாளையம், மதுரை. 

 

நாள் : 12.12.2010, ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.30 வரையில்.

 

 

"பல ஏழை விவசாயிகளின் பிரச்சனையை முழுமையாக அறிந்தவர்களாகவும் தங்களுக்கும் குறிப்பாக அவர்களுடைய குழந்தைகளுக்கும் கல்வி, பொருளாதார வாய்ப்பு, சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றிற்கான பலமான வேட்கைகளைக் கொண்டிருந்தார்கள்!"

 

"இதுவரை யாரும் அனுபவித்திராத வகையில் எனது சிறைவாசம் மிகக் கடுமையாக இருக்கும் என்பதையும் கோழைத்தனமான அடக்கு முறைகளும் மிருகத்தனமான கொடுமைகளும் அதில் நிறைந்திருக்கும் என்பதையும் நான் அறிவேன். இருந்தபோதிலும், எனது உயிரினுமினிய தோழர்களைப் பலி வாங்கிய அந்தக் கொடுங்கோலனின் கோபத்தைக் கண்டு நான் எவ்வாறு அஞ்சவில்லையோ, அதைப்போன்றே இந்தச் சிறைவாசத்தை கண்டும் நான் அஞ்சப் போவதில்லை! என்னைத் தண்டியுங்கள்! அது எனக்குப் பொருட்டல்ல! வரலாறு என்னை விடுதலை செய்யும்!"

 

கயமை அதிகமாக கொண்ட அயோக்கியனா? கயமை குறைவாக கொண்ட அயோக்கியனா? தேர்தலில் மக்கள் இந்த இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினையே பெறுகிறார்கள். நேர்மையான ஒருவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு என்பது மக்களுக்கு அளிக்கப்படவேண்டும். அதை அவர்களுக்கு மறுப்பது நாம் செய்யும் மாபெரும் தவறாகும்.

மக்களின் ஆதரவு இல்லாமல் தேர்தல் புறக்கணிப்பு என்பது வெற்றுச்செயலே. தேர்தலில் பங்கேற்பது என்பது வேறு!. தேர்தலை தீர்மானிப்பது என்பது வேறு!. மக்கள் இயக்கங்கள் எதுவாகவும் இல்லாதிருப்பது அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லாதிருப்பதையே வெளிப்படுத்துகிறது.

தேர்தல் அரசியல் கட்சிகளை, அவர்களின் கயமையை எதிர்த்து போராட தேர்தல் ஒரு களத்தை அமைத்து தருகிறது. இச்சமயத்தில் மக்களை இணைத்துக்கொண்டு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலுவாக முன்னெடுத்து போராடினால் மக்கள் ஆதரவினை பெருக்கிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும். நமக்கு தேர்தல் மட்டுமே களம் அல்ல. ஆனால் தேர்தலும் ஒரு களம்தான். மக்களும் மக்கள் இயக்கங்களும் தேர்தல் முடிவினை தீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும். வரலாற்றில் வழமையை நீக்கிவிட்டு முன்னெடுக்கப்படும் புதிய முயற்சிகளே அடுத்த கட்டத்திற்கு இட்டு செல்லும். நம் முன்னே இருக்கும் கடமை மிகப்பெரியது. ஆனால் அதனை செய்ய செய்து முடிக்க நாம் உறுதி பூண்டுள்ளோம்.

 

தமிழ்நாட்டின் அரசியல் போக்கின் வழியினை மாற்ற நாம் போராட வேண்டும் சாத்தியமான அனைத்து வழிகளிலும்.............

 

 

நிகழ்ச்சிநிரல்

 

 

 

கண்களுக்கு புலப்படாத எதிரிகளும், கண்களுக்கு புலப்படும் எதிரிகளும்! - சு.தளபதி - சர்வதேச தமிழர் கழகம் (9.00-10.30)

 

மக்களுக்காக போராடுவது தலைவர்களின் உரிமையும் அல்ல, தனிநபர்களின் சொத்தும் அல்ல! நம் அனைவருடைய கடமையும், பொறுப்பும் ஆகும் - சோழநாடன் - தமிழர் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஆய்வுக்கழகம் (10.30-12.00)

 

மக்கள் அறிக்கையும், மக்களிடம் வேலைசெய்வதற்கான செயல்திட்டங்களும்  - பேராசிரியர்.மணிவண்ணன் - அரசியல் பொதுத்துறை - சென்னை பல்கலைகழகம் (12.00-1.30)

 

தேர்தலில் செயல்படும் காரணிகளும், இயங்கியலும் மற்றும் பொதுவேட்பாளர்கள் என்ற முன்முயற்சியும் - பேராசிரியர்.இராஜநாயகம் - ஊடகத்துறை, லயொலா கல்லூரி, சென்னை (1.30-3.00)

 

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல், நாடு பெரிது என்று வாழ்வோம்" - பேராசிரியர்.அறிவரசன் (3.00-4.30)

 

 

 

தங்களுடைய வருகை இவ்வரங்கத்தின் மேன்மையினை பலப்படுத்தும் என்று நம்புகிறோம். தாங்கள் தங்களுடைய பங்களிப்பினை தவறாமல் பதிவுசெய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழர் சமூக அரசியல், பொருளாதார, பண்பாட்டு ஆய்வுக்கழகம், தமிழ்நாடு - 9042274271 / 9843050198 / 9489802001 / 9965002873

 

குறிப்பு : காலை மற்றும் மதிய உணவு நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திலே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை பங்குகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தாழ்மையான வேண்டுகொள் - அலைப்பேசி அழைப்புகளை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளவும் () அலைப்பேசி அழைப்பு சத்தத்தை குறைத்துக் கொள்ளவும்.

 

ன்றி

 

 

 



கு.Kannan
சர்வதேச தமிழர் கழகம்
"தமிழ்க்குடில்"
6/28,
புதுத்தெரு
கண்ணம்மாப்பேட்டை
தியாகராயர்நகர்
சென்னை - 600 017
Click here to view the attachment
Posted By: jasmin on 12/8/2010

மாவீரன் கார்கரே - பொதுக் கூட்டம்
Date: 12/12/2010        
Time: மாலை 6
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ்.  தாருல் இஸ்லாம் பௌண்டேஷன்  டிரஸ்ட் சார்பில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 12.12.2010 அன்று மாலை சுமார் ஆறு மணியளவில் சென்னை இராயப்பேட்டை  ஐஸ் ஹவுஸ் ஷேக் தாவூத் தெருவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் டிரஸ்ட் இன் தலைவர் ஜனாப் மு குலாம் முஹம்மது அவர்கள் மாவீரன் கர்கரே என்ற தலைப்பிலும் பெரியார் திராவிட கழக பொது செயலாளர் திரு விடுதலை இராஜேந்திரன் அவர்கள் பெருகி வரும் இந்துத்துவ தீவிரவாதம் என்ற தலைப்பிலும் திரு முத்து கிருஷ்ணன் அவர்கள் பாபரி மஸ்ஜித் தொடரும் அநீதி என்ற தலைப்பிலும் பேசவுள்ளார்கள். அனைவரும் கலந்து கொண்டு நாட்டின் உண்மை நிலையை அறிந்து கொள்ள நாட்டின் நலனில் அக்கறை கொண்ட அனைவரையும் அன்போடு அழைக்கிறது தாருல் இஸ்லாம் பௌண்டஷன் டிரஸ்ட்.   
Click here to view the attachment
Posted By: jasmin on 12/12/2010


« AUG
SEPTEMBER 2025
OCT »
Sun Mon Tue Wed Thu Fri Sat
31 1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

1 2 3 4
Event:
 
There are no events posted for this month
 
Post Event
Post Marriage
Post Birth
Post Afterlife
Post Other Events
View Old Events
View Birth
View Marriage
View Afterlife
Other