அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.....
மதுரைய்யில் வசிக்கும், என்னுடைய்ய பெரியாப்பா மகன் என் பாசத்துக்குரிய
காகா S.M.A.ஜின்னா அவர்கள் இன்று 19-12-2013 மதியம் 02:15 மனிக்கு வபாத்
ஆனார்கள்.
இடம்; மதுரை சுந்தரராஜன்பட்டி. I.A.B. பள்ளி வளாகம்.
அன்னார், சிக்கந்தர் என்ற அப்துல் ரஹீம், மற்றும் ரோஷன் ஆகியோரின் தகப்பனார் ஆவார்கள்.
அன்னார், மர்ஹூம்: உதுமான் கனி, மர்ஹூம்: ரஹீம் ஹாஜியார், மர்ஹூம்: ஹாஜா, மர்ஹூம்: பதர்னிஷா ஆகியோரின் சகோதரராவார்.
மர்ஹூம்: S.A.மீரான் அவர்களின் மருமகனாவார்.
என்னுடைய்ய வாப்பாவின், கூடபிறந்த காகாவின் மகனாவார்.
தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி: +91 9600 822994
+91 9600 822995.
அன்னார்: I.A.B பள்ளியின் தாளாளர் ஆவார்.
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்யவும்.
இறைவா ! இவரை மன்னித்து அருள் புரிவாயாக !
இவரது பிழைகளை பொறுத்தருள்வாயாக !
இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக !
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக !
பனிகட்டி, ஆலங்கட்டி, மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக !
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக !
நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக!
இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக!
வல்ல ரஹ்மான் அவரது மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பானாக.
அவருக்கு உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக.
அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் நீ மன்னிப்பாயாக!
அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரின் அன்பு குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையைக் தந்தருள்வானாக.
إِنّا لِلّٰهِ وَإِنّا إِلَيْهِ رَاجِعُونَ
நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம். {அல்குரான் 2 : 156 }