ம்ம்.ஒன்னும் இல்லை என்ற ஒற்றை வார்த்தையிலேயே நோயாளிகளின் நோயை சுகப்படுத்திவிடும் அற்புத மனிதர்.
OP பார்க்கும்போது ஏர்வாடிகார ர்கள் என்றால் உடனே பார்த்துவிடுவார்.
அட்மிட் ஆகி டிஸ்சார்ஜ் ஆகும்போது பில் வந்தவுடன் பில்லைக்கொஞ்சம் குறைக்கச்சொன்னால்,உடனே அக்கவுன்டரிடம் சொல்லி பில்லை குறைச்சு போடச் சொல்லுவார்.
ஒரு லட்சத்தை கட்டினால்தான் அட்மிட் பண்ணுவோம் என்ற மருத்துவர்கள் வாழும் இந்த காலத்தில் அன்றுமுதல், இன்று வரை அட்மிசன் பீஸ் வாங்காமல் நோயாளிகளை அட்மிட் பண்ணிய ஒரே மருத்துவர்.ஏர்வாடி மக்களோடு இரண்டறக்கலந்தவர்.மொத்தத்தில் மனித நேயமிக்க மருத்துவர்.
ஏர்வாடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் . மருத்துவ சேவைக்கான இலக்கணமாக வாழ்ந்த மிக் சொற்ப மருத்துவர்களில் ஒருவர் . பெரிய நோய்கள் என்று சென்றால் கூட இது ஒன்றுமில்லை எல்லாம் சரியாகிவிடும் என சொல்லி நம்பிக்கையூட்டி குணப்படுத்தும் மாண்பாளர் .
நமதூர் ஏர்வாடி மக்கள் மேல் மிகுந்த நன்மதிப்பும் அக்கறையும் கொண்டவர் . மெர்ஸி டாக்டரை போல் ஏர்வாடி மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ள ஒரு மக்கள் மருத்துவர் . நமதூரில் முதன்முதலாக மெர்ஸி மருத்துவமனையை திறந்து வைத்தவரும் இவரே என்பது கூடுதல் தகவல் .
பெரியவர் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் நாகர்கோயில் மத்தியாஸ் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு மருத்துவ சேவை துறைக்கு ஒரு பேரிழப்பு . இவரை போன்ற தன்னலமற்ற சேவை செய்யும் மருத்துவர்களை உருவாக்குவதே நாம் செய்யும் சிறந்த நினைவேந்தலாக இருக்கும்
|