Posted by S Peer Mohamed
(peer) on 9/20/2024 7:23:32 AM
|
|||
18.09.2024 அன்று ஏர்வாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் மற்றும் மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டியை நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் திரு ரூபி R.மனோகரன் அவர்கள் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் தஸ்லிமா அயூப்கான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் எர்வாடியில் புதிய பேருந்துநிலையம் அமைக்க விரைவு படுத்திடவும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் கேட்டும் மனு அளிக்கப்பட்டது.கோரிக்கைகளை அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற துணை தலைவர் A.C.பீர்முகமது மற்றும் திமுக பேரூர் செயலாளர் மு.அயூப்கான் கவுன்சிலர்கள் . மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |