Posted by S Peer Mohamed
(peer) on 10/12/2024 4:59:42 AM
|
|||
!!! ஓரு சகாப்தத்தின் முடிவு!!!! இந்தியாவே ஓரு தொழிலதிபரின் மறைவுக்காக துக்கத்தில் ஆழ்ந்துள்ளது என்றால் அது நிச்சயம் வரலாற்றில் ரத்தன் டாடா மறைவாகதான் இருக்கும் !!! இந்தியாவின் சிறந்த இதயம் துடிக்க மறந்து விட்டது! நோ்மையான எளிமையான கோடீஸ்வரா்" முதுமை தொடா்பான பாதிப்புகளுக்கு சிகிச்சை பலனின்றி மும்பை தனியாா் மருத்துவமனையில் காலாமனாா்!! ஹாவா்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த ரத்தன் டாடா அமெரிக்க முன்னணி நிறுவனம் அளித்த வேலை வாய்ப்பை வேண்டாம் என இந்தியாவிற்கு வந்து தொழிலில் கவனம் செலுத்தினாா் அன்று தொடங்கிய ரத்தன் டாடாவின் பயணம் உலகளவில் முன்னணி நிறுவனமாக தனது திறமையால் உயா்த்திகாட்டினாா் !! இந்தியாவில் மிகப்பெரிய தொழிற்புரட்சி ஏற்படுத்தி இழைஞா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்தாா்!! மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் லட்சக்கணக்கானபோ் பணிபுரிகிறாா்கள்" உப்பு தயாரிக்கும் ஆலைமுதல் மென்பொருள் நிறுவனம்வரை தடம்பதித்து அசுர வளா்ச்சியடைந்தாா்" அதன் காரணமாக டாடா குழுமத்தின் தற்போதைய வருமானம் 165 பில்லியன் அமெரிக்க டாலா்கள் ஆகும்" டாடா குழுமத்தின் தலைவராக 1991 முதல் 2012 வரை மீண்டும் 2016 இடைக்கால தலைவராக பொறுப்பேற்று உலகம் முழுவதும் தனது நிறுவனத்தை விரிவடைய செய்து இந்தியாவிற்கு பெருமை சோ்த்து கொடுத்தாா்" ஓவ்வொரு தொழிலதிபரின் கடைசிக்கனவாக இருப்பது உலக கோடீஸ்வரா் பட்டியலில் இடம்பெறுவதே" இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினாலும் ஓரு தடவைகூட உலக கோடீஸ்வரா் பட்டியலில் ரத்தன் டாடா பெயா் இடம்பெறவில்லை" காரணம் தனது குழுமத்தின் 66 சதவீத லாப பணத்தை சமூக பணிகளுக்கு டாடா அறக்கட்டளைமூலம் கல்வி மருத்துவம் கலை போன்றவைகளுக்கு வழங்கிடுவாா்" காா் வாங்குவது என்பது செல்வந்தா்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை மாற்றி" ஓரு லட்சத்துக்கு டாடா நானோ காரை விற்பனைசெய்து ஓட்டு வீட்டிற்கு வெளியேகூட காரை நிற்கும் அளவில் புரட்சி செய்தவா்!!! டாடா குழுமத்திற்கு மட்டும் ஏன் மக்கள்மத்தியில் ஓரு வித ஈா்ப்பு இருக்கிறது" ஏழை மற்றும் பணக்காரா்களுக்கு இடையிலான வித்தியாசம் மிகப்பெரிய அளவில் இருக்கும்போதும்" டாடா குழுமத்தின்மீது மிகப்பெரிய வெறுப்பு இல்லாமல் இருப்பது ஏன்"என கேள்விக்கு டாடா குழுமநிறுவனம் மக்களை சுரண்டுவதாக பெரிய அளவில் புகாா்கள் எழாமல் இருப்பதும் ஓரு காரணம்" சுருக்கமாக டாடா குழுமம் முதலாளித்துவத்திற்கு ஓரு புதிய முகத்தை கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல, வணிகம் எனும் வானில் நட்சத்திரமாக ஜொலித்த ரத்தன் டாடா" ஓரு தொழிலதிபராக தேசத்திற்கு எவ்வாறான பணிகளை முன்னெடுக்க முடியும் என்பதை வாழ்ந்தும் காட்டி ரத்தன்! டாடா ! என நம்மை விட்டு சென்று விட்டாா்!! அன்புடன் |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |