Posted by S Peer Mohamed
(peer) on 10/23/2024 9:07:00 AM
|
|||
ஏக இறைவனின் திருப்பெயரால். நெம்ஸ் நட்சத்திரங்கள் ஏட்டுக் கல்வியுடன் வாழ்வியல் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில் கல்விச் சுற்றுலா தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் நமது மாணவர்கள் கீழ்கண்ட இடங்களுக்கு சென்று தங்கள் வாழ்விற்கு தேவையான பாடங்களை நேரடியாக கற்றுக்கொண்டார்கள். 1.தீயணைப்பு நிலையம். இந்த கல்விச் சுற்றுலா மாணவர்களுக்கு கல்வியையும், மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தன. மகிழ்ச்சியான பயனுள்ள வாழ்வியல் கல்வி -இதுதானே நெம்ஸின் தாரக மந்திரம். பெற்றோர்களும் இதனைப் பாராட்டி தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, 📕📗📘 5 ஆம் ஆண்டு வாழ்வியல் பாடக் கல்விச் சுற்றுலா 📓📔📒 22/10/2024, செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “”*தமிழக அளவில் முதன் முறையாக””” சினிமாக்களின் மூலமும்,நாடகங்களின் மூலமே கண்டு களித்த நம்மில் வயது மூத்தவர்கள் கூட இன்னும் கானாத நிகழ்வான நீதிமன்ற நடவடிக்கைகளை ⚖️ இந்த வருட வாழ்வியல் கல்வி சுற்றுலாவை நீதிமன்றம் அழைத்து செல்வது என உத்தேசித்து நமதூர் ஏர்வாடியை சேர்ந்த இளம் வழக்கறிஞர் எஜாஸ் அவர்களை அனுகியபோது மறுநாளே நாங்குநேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அவர்களிடம் அனுமதி பெற்று செயலாளர் அட்வகேட் ரமேஷ் மற்றும் பொருளாளர் அட்வகேட் நம்பி உதவியுடன் நாங்குநேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் தலைமையான சார்பு நீதிபதி திரு.ராமதாஸ் அவர்களை நேரடியாக சந்தித்து அனுமதி கடிதம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று செவ்வாய் 22/10/2024 காலை 11.00 மணிக்கு நாங்குநேரி நீதிமன்ற வளாகத்திற்கு சென்றோம் வழக்கறிஞர் நம்பி அவர்கள் இன்முகத்தோடு வரவேற்று நீதிமன்றத்திற்குள் அழைத்து சென்றார். அங்கு சுமார் 15 நிமிடம் வழக்காடும் விதத்தை கண்டு கழித்தோம். அடுத்ததாக கிரிமினல் நீதிமன்ற நடவடிக்கைகளை கண்டுகான நீதிபதி ராமதாஸ் அறிவுறுத்தியதின் படி அதனை தொடர்ந்து நட்சத்திரங்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை விவரிக்க ஆர்வமாக முன்வந்த குற்றவியல் நீதிமன்றத்தின் நடுவர் திரு.சிதம்பரம் அவர்கள் தனது இருக்கையை விட்டு இறங்கி வழக்கறிஞர்கள் அமரும் மைய வளாகத்திற்குள் வந்து நட்சத்திரங்களிடம் கேள்விகளை கேட்க சொல்லி எளிய முறையில் பதில் அளித்தார். மேலும் நீங்கள் எப்படி நீதிமன்ற துறையை தேர்வு செய்தீர்கள் என்று 4 வகுப்பு மாணவி கேட்ட கேள்வி குற்றவியல் நீதிமன்ற நடுவர் திரு.சிதம்பரம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. மேலும் பைக் ஒட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு தண்டனை குறித்தும், குற்றவாளி உண்மையைதான் சொல்லுவார் என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள் என்று மழலைகள் கேட்டது நடுவர்க்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது மழலைகளுக்கே புரியும் வண்ணம் பதில் கொடுத்து 20 நிமிடங்களுக்கு மேல் பலதரப்பட்ட நட்சத்திரங்களின் கேள்விகளையும் எதிர் கொண்டு புன்முறுவலோடு பதில் அளித்தார். பல வருட அனுபவம் கொண்ட வழக்கறிஞர்கள் வாதாடும் நீதிமன்ற வளாகம் நெம்ஸ் வருங்கால வழக்கறிஞர்களாலும் அவர்களின் கேள்விகளாலும் 20 நிமிடம் நிரம்பியது. அதனை தொடர்ந்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் சிதம்பரம் அறிவுத்தலின் படி மாடியில் உள்ள உரிமையில் (Civil) நீதிமன்ற வளாகத்துக்கு சென்று கண்டு கழித்து வந்தனர். இந்நிகழ்வை கண்ட பொதுமக்களும், நீதிமன்ற அலுவலர்களும் இதர வழக்கறிஞர்களும் மனமாற பாராட்டியதோடு எந்த ஸ்கூல் நீங்கள் என்று நமது நிர்வாகிகளிடம் கேட்டு நாம் இதற்கு முன் சென்ற வாழ்வியல் கல்வி சுற்றுலா குறித்த விபரங்களை தெரிந்துகொண்டு பாராட்டினார்கள். இறுதியாக சார்பு நீதிபதி அவர்களுக்கு நினைவு பரிசு நெம்ஸ் சார்பில் அதன் நிர்வாகிகள் வழங்கினர். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |