low dose naloxone vs naltrexone naloxone naltrexone comparison link
நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!
( தொடர்- 4 )
கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம்.
( தொடர்- 1 ), ( தொடர்- 2 ) , ( தொடர்- 3 )
திடீரென அந்த 8 வயது சிறுவன் கோபம் கொண்டவனாய் எழுந்து ஓடினான் கீழே கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்துக்கொண்டு தன் தந்தையின் அருகில் வந்து டாடி அந்த பொம்பளையை இப்பவே காட்டு அவளை நான் அடிக்காமல் விடமாட்டேன் என கத்த ஆரம்பித்து விட்டான்.
அதற்கான காரணத்தை கேட்டால் நான் வியந்ததை போல நீங்களும் வியந்துதான் போவீர்கள்.
அந்தப்பையனின் தந்தை உஹதுப்போரைப் பற்றியும் அதில் எம்பெருமானார்(ஸல்)அவர்களின் சிறிய தந்தை ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்கள் ஷஹீதான விஷயத்தையும்,
ஹழ்ரத் அபூசுப்யான்(ரலி)அவர்களின் மனைவி ஹிந்தா அவர்கள் நமதருமை நாயகம்(ஸல்)அவர்களின் மீதான கோபத்தினால்,
பெருமானாரின் சிறிய தகப்பனார் ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட நிலையிலும் அவர்களின் நெஞ்சத்தை குத்தீட்டியால் பிளந்து ஈரல்குலையை வெளியில் எடுத்து அதை வாயில் வைத்து கடித்து துப்பிய விஷயத்தை சொன்னதும் தான் தாமதம்,
திடீரென அந்த 8 வயது சிறுவன் கோபம் கொண்டவனாய் எழுந்து ஓடினான் கீழே கிடந்த ஒரு கல்லை கையில் எடுத்துக்கொண்டு தன் தந்தையின் அருகில் வந்து டாடி அந்த பொம்பளையை இப்பவே காட்டு அவளை நான் அடிக்காமல் விடமாட்டேன் என கத்த ஆரம்பித்து விட்டான்.
அவனது கோபத்தை கண்டு நான் மட்டுமல்ல, அவனது பெற்றோரும் வாய்பிளந்து நின்றோம்.
பின்னர் மலையின் அடிவாரத்தில் உள்ள காம்பவுண்ட் சுவருக்குள் மத்திய பாகத்தில் பாத்தி கட்டப்பட்ட ஒரு இடத்தை காண்பித்து அதுதான் எம்பெருமானாரின் சிறிய தந்தை ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் அடக்கஸ்தலம் என அந்தப்பையனுக்கு அவனது தகப்பனார் அடையாளம் காண்பித்து கொடுத்தார்.
அடுத்து அவன் சொன்ன வார்த்தை டாடி,நான் பக்கத்தில் போய் பார்க்கணும் என்னை அங்கே கூட்டிப்போ என நச்சரிக்க ஆரம்பித்து விட்டான்.
உடனே அவனது தந்தையும் மலையிலிருந்து கீழே இறங்கி ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் ஜியாரத்திற்கு அருகில் அந்தப்பையனை அழைத்து சென்றார்.
இந்தப்பையனின் வினோதமான நடவடிக்கையைப் பார்த்து நானும் அவர்களைப்பின் தொடர்ந்தேன்.அங்கே சென்றதும் சுற்றிலும் கட்டப்பட்டுள்ள காம்பவுண்டு சுவருக்குள் ஹழ்ரத் ஹம்ஜா(ரலி)அவர்களின் ஜியாரத்தும்,
உஹது யுத்தத்தில் ஷஹீதாக்கப்பட்ட நபித்தோழர்களின் ஜியாரத்தும் இருந்தன.
காம்பவுண்ட் மதில் உயரமாக இருந்ததால் அந்தப்பையனுக்கு உள்ளே இருந்த காட்சிகள் தெரியவில்லைபோலும்,தன் தந்தையிடம் சொல்லி என்னை மேலே தூக்கிக்காட்டு என்றான்.
அவனை தூக்கி மதில் மேல் நிற்க வைத்தார் அவன் மதில் மேல் இருந்த இரும்பு கம்பிகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு உள்ளே உற்று பார்த்துக்கொண்டிருந்தான்.
நான் ஜியாரத்தை முடித்துக்கொண்டு அவனை பார்த்தேன்,எனதருமை மக்களே,சொன்னால் நம்பமாட்டீர்கள்.
அந்தப்பையனின் கண்களிலிருந்து தாரைத் தாரையாய் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது,அவனது தந்தை அதைப்பார்த்து என்னப்பா,என்னாச்சு?ஏன் அழுகிறாய்?எனக்கேட்டதும்,
அந்தப்பையன் சொன்ன வார்த்தையை பாருங்கள்,டாடி பாவம் ரசூலுல்லாஹ்வின் சின்னவாப்பா, நமது ரசூலுல்லாஹ்வை ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள்.என தன் மழலைப்பேச்சில் சொன்ன விதம் என் நெஞ்சை நெகிழச்செய்தது.
எனதருமை சகோதரர்களே,நான் கண்ட காட்சியும்,அந்தப்பையனும்,அவனது பெற்றோரும் வேறுயாருமல்ல,மதீனாவாசிகள்தான்!
ஒவ்வொரு தலைமுறையினரையும் இஸ்லாத்தின் அடிப்படை உணர்வுகளோடு வளர்த்தெடுப்பதை இலட்சியமாக கொண்டிருப்பவர்கள் மதீனத்து மக்கள்.
கண்மணி(ஸல்)அவர்களின் இதயத்தையே கொள்ளை கொண்டவர்கள் என்றால் சும்மாவா?
இதே நேரத்தில் நம்முடைய தலைமுறையினரை நாம் உற்று நோக்கினால்......கவலையே மிஞ்சி நிற்கும்.
ஷஹாதத்கலிமா தெரியாதவர்கள் எத்தனைபேர்?
சூரத்துல்பாத்திஹா தெரியாதவர்கள் எத்தனைபேர்?
திருக்குர் ஆனை ஓதத்தெரியாதவர்கள் எத்தனைபேர்?
இறைவனை தொழும் முறையை தெரியாதவர்கள் எத்தனைபேர்?
இவைகள் அனைத்தும் தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே?என்ற வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் நாங்களும் முஸ்லிம்கள்தான் என வீதியில் நடமாடும் மனிதர்கள் எத்தனை,எத்தனைபேர்?
இத்தகையவர்களின் மறுமை நிலையைப்பற்றி நினைக்கும்போது,இதையமே வெடித்து விடும்போல் இருக்கிறது.
இத்தகைய மனிதர்கள் தம் வாழ்வின் ஒருமுறையேனும் மதீனாவுக்கு வரவேண்டும். மதீனத்து மக்களின் உன்னதமான வாழ்க்கை நடைமுறையை நேரில் காணவேண்டும்.
நமதருமை நாயகம்(ஸல்)அவர்களின் மீது இன்றுவரைக்கும் கொஞ்சம் கூட குறைவின்றி நேசம் பாராட்டிக்கொண்டிருக்கும் மதீனத்து மக்களின் அளப்பெரிய அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்!என்ற வரிகள் என் மனதில் பசுமையாய் நிற்கிறது.
எம்பெருமானாரால் நேசிக்கப்பட்ட மதீனாவை நாமும் நேசிப்போம்,நாம் நேசிக்கும் மதீனாவுக்குள்தான் எம்பெருமானாரும் இருக்கிறார்கள்!
(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்)
என் அன்பிற்குரியவர்களே,நான் இன்னும் மதீனாவை விட்டும் வெளியே வரவில்லை,
மஸ்ஜிதுல்குபா,சபாமஸ்ஜித்,மஸ்ஜிதுல் கிப்லத்தைனி போன்ற பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் நான் கண்ட காட்சிகள் பசுமையாய் நிற்கிறது இவை அனைத்துமே பயனுள்ளவைகள் எனக்கருதுகிறேன்.
நீங்கள் விரும்பினால் தொடருவேன்.
இன்ஷா அல்லாஹ்.......
உங்களது மேலான கருத்துக்களை jahangeerh328@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். வஸ்ஸலாம்!

|