Posted by Haja Mohideen
(Hajas) on 7/12/2015 12:27:05 PM
|
|||
இறைவனின் பார்வையில் குற்றவாளியா? ##பிறை. ஒரு நண்பருடைய கேள்வி விஞ்ஞானம் என்பது நல்ல விஷயம் தானே பிறை விசயத்தில் அதை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறிர்கள்? பதில்: விஞ்ஞானம் காலத்திற்கேற்ற நல்ல விஷயம் தான் ஏற்றுக்கொள்வதும் நல்லதுதான். ஆனால் எந்த விஞ்ஞானத்தை ஏற்பது? என்பது தான் நம்முடைய கேள்வி. உதாரணம் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற சிலவிசயங்களை அதற்கென்று உள்ள அரசாங்க ஆய்வு கூடங்களில் பல கோடி ருபாய்கள் சிலவு செய்து அதற்காகவே விஞ்ஞானம் படித்த அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட சில விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிவிக்கிறார்கள் அதை நாம் ஏற்கிறோம். அந்த விஞ்ஞானிகளின் கூற்று படி அந்த நிகழ்வுகள் நடக்கவும் செய்கின்றன.. ஆனால் நீங்கள் சொல்லும் இந்த அரைகுறை பிறை விஞ்ஞானிகள் நாங்களும் பிறையை ஆய்வு செய்கிறோம் இந்த இந்த நாட்களில் பிறை ஆரம்பமாகிறது என்று சொல்கிறார்களே இவர்கள் எப்படி எங்கே சென்று எந்த முறையில் ஆய்வுகள் செய்தார்கள்? இவர்களுக்கு ஆய்வு செய்து கொடுக்கும் அந்த விஞ்ஞானி யார்? என்பதை உங்களால் விவரிக்க முடியுமா? சென்ற வருடம் ரமலானில் இவர்கள் பிறை துவங்குவதா சொன்ன நாளில் உலகில் எங்குமே பிறை தென்படவில்லை தென்படவும் வாய்ப்பே இல்லை என்பது முக்கியமாக கவனிக்க பட வேண்டியதாகும்.... சரி நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் ... நேரம் என்பது மனிதனால் கண்டுபிடிகபட்ட உலக மக்கள் அனைவர்களாலும் ஏற்றுகொள்ள பட்ட ஒரு விஞ்ஞானம் ஆகும். ஆனாலும் நான் நேரத்தை பார்க்காமல் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை பின்பற்றி "ஒரு பொருளின் நிழல் இரண்டு மடங்கு வரும்" வரை காத்திருந்து அஸர் தொழுகையை நிறை வேற்றுகிறேன் என்று வைத்துகொள்ளுங்கள் ஏண்டா விஞ்ஞானத்தை கடைபிடிக்காமல் நபிவழியை பின்பற்றினாய் என்று நாளை மறுமையில் அல்லாஹ் கேள்வி கேட்பானா? அல்லது தன்னுடைய தூதரின் வழிமுறையை பின்பற்றியதற்காக நன்மையை தருவானா? நண்பரின் பதில்: நன்மையை தான் தருவான்.. சரி இப்போது பிறை பார்பதற்கு வருவோம்..... "ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அல்லது நீங்கள் உங்களுக்கு விஞ்ஞானம் பற்றிய முழு அறிவும் இல்லாத போதும் யாரோ ஒருவர் எங்கிருந்தோ அரைகுறையாக விஞ்ஞானம் மூலம் கணித்ததாக சொல்லும் ஒன்றை தனக்கு புரிய வில்லை என்றாலும் மனோ இச்சை படி அதை கடை பிடித்து தவறான நாளில் நோன்பு வைத்து தவறான நாளில் நோன்பை விட்டு ரமலானின் முழு நன்மையை இழந்த நீங்கள் குற்றவாளியா? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்... அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டி தந்த வழிகளில் நம் இபாத்துகளை செய்து அதன் முழுமையான நன்மைகளை நாளை மறுமையில் பெற்றிட எல்லாம் வல்ல ரஹ்மான் கிருபை செய்வானாக ..... இன்ஷா அல்லாஹ் தொடரும்....... இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 2 இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 3 இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 4 https://www.facebook.com/groups/baithussalam/permalink/861073913961327/ |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |