Posted by Haja Mohideen
(Hajas) on 7/16/2015 7:20:41 AM
|
|||
இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 1 இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 2 இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 3 இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 4
நம்மில் சில சகோதரர்கள் இங்கே உள்ள அரசாங்க அடிமை டவுன் ஹாஜியின் பிறை நிலைபாட்டில் வெறுப்படைந்து இந்த அரைகுறை பிறை விஞ்ஞானிகளையும் ஏற்க மனம் இல்லாமல் நமக்கேன் வம்பு என்று நினைத்து கொண்டு மக்கா மதினா சவுதியில் இருப்பதால் சவூதி பிறை சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சவூதி பிறையை கடைபிடிப்பதை காணமுடிகிறது. உண்மையில் இவர்களின் நிலைப்பாடு சரியா என்றால் முற்றிலும் தவறாகும். சவுதியின் பிறை நிலைப்பாடு என்பது முற்றிலும் பலவருடங்களுக்கு முன்பே யாராலோ கணிக்கப்பட்ட காலண்டரின் அடிப்படையிலானது மட்டுமே ..அந்த கலண்டரை தான் சவூதி அரசாங்கம் இங்குள்ள டவுன் ஹாஜி போன்று அங்குள்ள பெரிய இமாம்களை கொண்டு பொய்யாக பிறை பார்த்ததாக அறிவிக்கிறது என்ற உண்மை இங்குள்ள நமது சகோதரர்களுக்கு தெரிவதில்லை.. சவூதி அரசாங்கம் இது வரை இன்னார் தான் பிறையை பார்த்தார் என்று இதுவரை ஒரு தடவை கூட அறிவித்ததே இல்லை என்பது விபரம் அறிந்த அனைவர்களும் நன்கு அறிந்ததே ஆகும். சில வருஷம் முன்னர் அமாவாசை சூரியகிரகண அஸ்தமத்துக்கு அடுத்த நாள் துல்ஹஜ் ஒண்ணு என்று சவுதி அறிவித்ததை அது முற்றிலும் தவறு என்று ஒரு படிச்ச இறையச்சம் கொண்ட அரபி கேஸ் போட்டதையும் கோர்ட்டில் இரண்டு நாள் விசாரித்து ஆமாம் இன்று துல்ஹாஜ் மூன்று இல்லை... துல்ஹஜ் இரண்டு தான் என்று சவூதி மறு அறிவிப்பு செய்ததையும் அதைத்தொடர்ந்து பள்ளி கல்லூரி அலுவலக விடுமுறை நாள் மாற்றப்பட்டது விடுமுறை பிளான் மாறியது... வெகேஷன் புக்கிங் கேன்சல் பண்ணி றீ புக்கிங் பண்ணியது... வியாபார ஒப்பந்த நாட்கள் குழம்பியது... பங்கு வர்த்தகத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டது... ஹஜ் ஏற்பாடுகள் நாள் மாறியதால்...ப்ரோகிராம் மாறியது..... ப்ளான் மாறியது.... ஹாஜிகள் ஃப்ளைட் டேட்ஸ்... எல்லா உலக நாடுகளுக்கும் தேதி மாற்றி அறிவித்து.... எல்லா உலக நாடுகளின் ஏற்போர்ட்டுகளும் சவூதி ஏர்லைன்ஸ் ஷெட்யுள் மாறியது...ஹோட்டல் புக்கிங்க்ஸ்.... போன்ற இன்னும் எத்தனையோ பணிகள் ஒரு நாள் மாற்றத்தால் சவூதி அரசு மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு உண்டானது... இது போன்ற நஷ்டங்களை தவிர்க்கவே சவூதி அரசாங்கம் அங்குள்ள டவுன் ஹாஜிக்களை பயன் படுத்தி அரசாங்க காலண்டரின் படி பிறையை அறிவிப்பு செய்கிறது என்ற உண்மை இங்குள்ள நம் சகோதரர்களுக்கு பாவம் புரிவது இல்லை... "ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 இன்ஷா அல்லாஹ் இன்னும் இருக்கு...
https://www.facebook.com/groups/baithussalam/permalink/862665223802196/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |