Posted by Haja Mohideen
(Hajas) on 7/14/2015 5:56:30 AM
|
|||
இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 1 இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 2
இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 3 சகோதர சகோதரிகளே நாம் இந்த பிறை பற்றிய பதிவு எழுதுவதன் நோக்கம் நான் எல்லாம் அறிந்தவன் என்பதை பறை சாற்றவோ என்னிடம் விவாதம் செய்து யாராலும் ஜெயிக்க முடியாது என்பதை காண்பிப்பதற்காகவோ அல்லது பிறரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டும் என்பத்ற்காகவோ இல்லை... மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டி தந்த வழிமுறைகளை முறையாக விளங்கி அதன் படி நமது இபாதத்துகளை செய்யவேண்டும் என்ற நோக்கதிர்க்காவே அன்றி அல்லாஹ்வின் மேல் ஆணையாக நமக்கு வேறு தவறான எண்ணம் ஒன்றும் இல்லை.... சென்ற வருடம் ஒரு சகோதரி இந்த அரைகுறை விஞ்ஞானிகளின் பெருநாள் தொழுகை நோட்டிசை கண்டு ரமலான் நோன்பு 29,30 ஆகியவைகளை பிடிக்காமல் இருந்ததோடு மட்டும் அல்லாமல் இந்த அரைகுறை பிறை விஞ்ஞானிகளோடு சேர்ந்து பெருநாளும் தொழாமல் இருந்து விட்டார் என்ற செய்தி கேட்டு நான் விசாரித்த போது அந்த சகோதரி சொன்னது.. ஹிஜ்ரி கமிட்டி நோட்டிசில் ஷவ்வால் பிறை தெரிந்த வுடன் நோன்பு பிடிப்பது ஹராம் என்று படித்தேன் அதனால் தான் நோன்பு வைக்க வில்லை என்றும் சொன்னார்.. நான் கேட்டேன் அப்படியானால் நேற்று அரைகுறை பிறை விஞ்ஞானிகளோடு சேர்ந்து பெருநாலாவது கொண்டாடி இருக்கலாமே ஒரு பார்சல்#பிரியானியாவது கிடைத்து இருக்குமே இப்போது நோன்பின் முழு நன்மையையும் இழந்து ஒரு பார்சல் #பிரியாணியும்வீனாகிவிட்டதே என்று கூறிவிட்டு அந்த சகோதரியிடம் சொன்னேன் அல்லாஹ்வின் தூதார் (ஸல்)அவர்கள் இது போன்ற அரைகுறை விஞ்ஞானிகளை நம்பி நம்மை விட்டு செல்லவில்லை நமக்கு தேவையான அனைத்து மார்க்க மற்றும் வாழ்க்கைக்கு தேவையான எல்லாவற்றையும் நமக்கு தெளிவாக விளக்கி விட்டே சென்றுள்ளார்கள் அதை பற்றி பிடித்திருக்கும் காலமெல்லாம் இது போன்ற அரைகுறை விஞ்ஞானிகளால் நம்மை வழிகெடுக்க முடியாது என்று விளக்கி விட்டு பிறை பற்றிய தெளிவான ஹதிசான கீழே உள்ள ஹதிஸை பதிவு செய்து விட்டு வந்தேன்..... "ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 இந்த ஹதிசின் படி இன்று நமக்கு நோன்பு இருபத்தி ஒன்பது தான் என்றும் ஷவ்வால் ஓன்று என்பது அரைகுறை விஞ்ஞான கணிப்பு படி அவர்களுக்கு மட்டும் தான் என்று விளக்கினேன் மேலும் இந்த ஆதாரப்புர்வமான ஹதிசின் படி ரமலான் நோன்பு அன்று நோன்பை விட்ட பாவத்திற்கும் அன்றைய தினம்#பிரியாணி வழங்கி நம்மை போன்ற நோன்பாளிகளை நோகடித்த காரனதிர்க்காகவும் நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நமக்கு பதில் சொல்வார்கள் என்று விளக்கினேன்..புரிந்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்....... இதுதான் சகோதரர்களே இறைத்தூதர் (ஸல்) நமக்கு காட்டி தந்த வழிமுறை ஆகவே இவர்களை போன்ற அரைகுறை விஞ்ஞானிகளின் மார்கத்திற்கு முரணான வாதங்களை கேட்டு அந்த சகோதரி போன்று நமது இபாதத்துகளை முழுமையாக கடைபிடிக்க முடியாமல் போகாமலிருக்க வல்ல ரஹ்மான் நம் அனைவர்களுக்கும் அருள்புரிவானாக... இன்ஷா அல்லாஹ்.... முடியல..... இறைவனின் பார்வையில் குற்றவாளியா? - பாகம் 4 https://www.facebook.com/groups/eruvadi/permalink/857106457660129/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |