ரா_பிரபு
பாகம் 6 : மர்ம 'மோய்'கள்
கடந்த பாகத்தில் நாம் பார்த்து போல உலகதில் பல மர்ம புத்தகங்களை மனிதன் ஏன் எழுதினான் என்றே தெரியாமல் இருப்பதை போல.. எதற்கு கட்டினான் ஏன் கட்டினான் என்றே தெரியாமல் பல கட்டிடங்களும் , சிலைகளும் இருக்கின்றன. உதாரணமாக நமக்கு மிகவும் பரிட்சயமான உலகின் முதன்மை மர்ம கட்டிடமான பிரமிடை எடுத்து கொள்ளுங்கள். அதை ஏன் கட்டினான் என்பதற்கு நமக்கு சொல்ல படும் காரணம் என்ன ? மன்னர்கள் மீண்டும் உயிர்த்து வருவார்கள் அதற்காக உடலை பாதுகாக்க வேண்டும் . இதில் ஒன்றை தர்க்க பூர்வமாக யோசித்தால் ஒரு பொருந்தாத விஷயம் ஒன்றை கவனிக்கலாம். அதாவது இக்கால நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூட கட்ட முடியாத, மிகுந்த அறிவியல் நுட்பம் கொண்ட, வானவியல் அறிவை கொண்டு பிரமாண்டமாக டன் கணக்கில் எடை கொண்ட கற்களை வைத்து அந்த பாலைவன பகுதியில் இவ்வளவு பிரமாண்ட அசாத்திய கட்டிடம் கட்ட தெரிந்தவர்களுக்கு, இறந்து போனவன் உடல் மீண்டும் உயிர்த்து எழாது என்ற குழந்தைக்கு கூட தெரிந்த அடிப்படை உண்மை கூடவா தெரிந்திருக்காது ?
நிச்சயம் வேற ஏதோ உயர ரக தொழில் நுட்பத்தை பயன் படுத்திய களம் தான் பிரமிடுகள். அவர்கள் வேறு உலகில் உயிர்தெழுவார்கள் என்பது டெலிபோர்டேஷ்னா ? பிரமிடு ஒரு "வார்ம்ஹோல் "போர்டராக செயல் பட்டு இருக்குமா போன்ற பல கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது.(பிரமிட் பற்றி நிறைய பேர் நிறைய இடங்களில் நிறைய முறை எழுதி விட்டார்கள் என்பதால் நான் அதை தவிர்த்து விடுகிறேன் ) இது போன்று எதற்கு செய்தார்கள் என்று தெரியாத ஒரு இடம் தான் ஈஸ்டர் தீவும் அதில் உள்ள மர்ம 'மோய்'கள் சிலையும். அதை பற்றி பார்க்கலாம்.
தெற்கு பசிபிக் கடலில் மிகவும் தன்னித்து ஒதுக்க பட்டு நடு கடலில் இருக்கும் ஒரு தீவு தான் ஈஸ்டர் தீவு. அநேகமாக வேறு எந்த தீவும் இவ்வளவு தனிமையில் நில பகுதியை விட்டு இவ்வளவு தொலைவில் இல்லை. Chile யிலிருந்து செல்ல வேண்டும் என்றால் அந்த தீவுக்கு 3700 கிலோமீட்டர் கடலில் பிரியாணிக்க வேண்டும். அல்லது tahiti யிலிருந்து செல்ல வேண்டும் என்றால் 4000 கிலோமீட்டர் கடலில் செல்ல வேண்டும். அவ்வளவு ஏன் அந்த தீவுக்கு அடுத்த அருகாமை தீவுக்கு செல்ல வேண்டும் என்றால் அந்த தீவில் இருந்து நாம் 2250 கிலோ மீட்டர் கடலில் செல்ல வேண்டும் அந்தளவு ஒதுக்க பட்ட ஒரு பூகோள அமைப்பில் இருக்கிறது ஈஸ்டர் தீவு. அந்த தீவு மொத்தமே 24 கிலோமீட்டர் நீளமும் 16 கிலோமீட்டர் அகலமும் கொண்டது தான்.
1772 இல் ஒரு டச்சு மாலுமி ஒரு ஈஸ்டர் திருநாளில் அந்த தீவை கண்டுபிடிக்கும் வரை அப்படி ஒரு தீவு இருப்பதோ அதில் கி. பி 400 களில் கடலில் நட்சத்திர வழி காட்டலையும் கடல் நீர் போக்கையும் திறமையாக கையாண்டு கடலில் நீண்ட தூரம் பிரியாணிக்கும் 'பாலிநேசியன்'கள் எனும் பழங்குடி இன மக்கள் அங்கே குடியேறி நூற்றாண்டு கணக்காக வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வருவது பற்றியும் வெளி உலகிற்கு தெரியாது. (கண்டுபிடிக்க படும் முன் அந்த தீவின் பெயர் "Rapanui")
முதல் முதலில் ஐரோப்பியர்கள் அந்த தீவை அடைந்த போது அங்கு எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த மர்ம சிலைகளை பார்த்து வாய் பிளந்து நின்றார்கள். அதை அந்த பழங்குடியினர்கள் "மோய் " என்று அழைக்கிறார்கள். ஒன்று இரண்டு இல்லை அந்த விசித்திர மோய்கள் அந்த தீவு முழுவதும் மொத்தம் 887 சிலைகள் இருபதை கண்டார்கள். ஒவொன்றும் 30 அடிக்கும் மேலான உயரங்கள் கொண்ட டன் கணக்கில் எடையை கொண்ட சிற்பங்கள்.
மோய்கள் பார்க்க மிக விசித்திரமானவை. அவைகளின் முகங்கள் சாதாரண மனித முகத்தின் வழக்கத்திற்கு மாறாக நன்கு நீண்டதாக செதுக்க பட்டு உறுதியான கூர்மையான மூக்கு தடித்த உதடுகள் மற்றும் அடர்த்தியான புருவங்கள் கொண்டிருந்தன. அந்த தீவு வாசிகள் அதை எதற்காக செய்தார்கள் என்பது ஆச்சர்யம் என்றால் அதை எப்படி செய்தார்கள் என்பது இன்னும் பெரிய ஆச்சர்யம் .காரணம் அவைகளை செதுக்குவதும் இட பெயர்ச்சி செய்வதும் தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத அந்த தீவு வாசிகளின் சக்திக்கு அப்பார் பட்டது. அவர்கள் மொத்தமாக சேர்ந்தால் கூட அத்தனை சிலைகளை இடபெயர்ச்சி செய்து கொண்டு வந்து நிறுவுவது சாத்தியம் இல்லை. அவர்கள் அதை எப்படி செய்தார்கள் மேலும் இப்படி ஒரு கடினமான வேலையை ஏன் செய்தார்கள் என்று புரியவில்லை. அந்த சிலைகளை அவர்கள் அந்த தீவில் உள்ள எரிமலை உச்சியில் இருந்து செய்து கொண்டு வந்து இருந்தார்கள்.
அந்த மோய்கள் எதை குறிக்கின்றன ? ஏன் எல்லா மோய்களும் ஒரே போல முக அமைப்பை கொண்டிருக்கின்றன என புரியவில்லை. ஒரு பம்மிய பென்குவின் போல உடல் அமைப்பில் கைகளை உடலுடன் ஒரு மாதிரியாக அணைத்து வைத்திருக்கும் அந்த மோய்களுக்கு கால்கள் கிடையாது. எல்லா மோய்களும் ஏதோ சாதித்தது விட்ட உணர்வு போல சற்றே தலையை உயர்த்திய நிலையில் ஒரு கர்வமான பார்வை பார்க்கின்றன. எல்லா சிலைகளுமே கடல் பக்கம் திரும்பாமல் தீவின் மைய பகுதியில் எதையோ ஊற்று பார்க்கின்றன. ஒன்றே ஒன்று மட்டும் கடலை நோக்கி உள்ள மோய் ஒன்று உண்டு... இதை தவிர ஒரு மோய் மற்ற அனைத்தையும் விட வித்தியாசமாக முட்டி போட்டு கொண்டு உள்ளது அதற்க்கு தாடியும் உண்டு... மற்றதை போல இல்லாமல் இது மட்டும் கொஞ்சம் பார்க்க மனித சாயல் அதிகம் நிரம்பி காண படுகிறது. எல்லா மோய் களுமே பிரமாண்டமானவை அல்ல சில சின்ன மோய்களும் உள்ளன. அங்கே இருப்பதிலேயே உயரமான மோய் பாரோ என்று அழைக்க படும் மோய் ஆகும். அது 33 அடி உயரமும் 90 டன் எடையும் கொண்டது. இருப்பதிலேயே அதிக எடை கொண்ட மோய் உயரம் குறைந்து அகலம் பெருகி 86 டன் எடையுடன் காண படுகிறது. இன்னோரு பிரமாண்ட மோய் செதுக்க பட்டு பாதியில் விட பட்டுள்ளது அது செதுக்க பட்டு இருந்தால் 69 அடியும் 270 டன் எடையும் கொண்டதாக இருந்து இருக்கும்.
இந்த பழங்குடி இனத்தில் இருந்த ஜன தொகை அதிகபட்சமாக 15000 வரை உயர்ந்து இருக்கிறது. பிறகு மர்மமான முறையில் ஆச்சர்யமாக திடீரென வெகுவாக குறைந்து போய் 2000 அளவில் வந்து விட்டது என்கிறார்கள். ஐரோபியர் குடியேறிய பின் அவர்களை அடிமையாக்கி அவர்களுக்கு நோய்கள் பரிசளித்து 1877 இல் ஜன தொகையை வெறும் 111 க்கு குறைத்து விட்டார்கள்
அந்த rapanui பழங்குடியில் இரு விதமான இனங்கள் இருந்து இருக்கிறார்கள். ஒன்று நீண்ட காது உடைவர்கள் இன்னொன்று குட்டை காது உடையவர்கள். இதில் நீண்ட காது கொண்டவர்கள் ஆட்சிசெய்பவர்களாகவும் குட்டை காது உடையவர்கள் அடிமைகளாகவும் இருந்திருக்கிறார்கள் அதனால் தான் பெரும்பான்மையான மோய்களுக்கு நீண்ட காதுகள் இருக்கின்றன. பிறகு ஒரு கட்டத்தில் குட்டை காது குழுவினர் புரட்சி செய்து நீண்ட காதுகாரர்களை கொன்று குவித்து இருக்கிறார்கள்.
அந்த தீவு வாசிகள் சிலைகளை மலை யிலிருந்து அதன் அதன் இடத்திற்கு அதை எப்படி நடத்தி கூட்டி வந்தனர் என்று பல தியரிகள் சொல்ல படுகிறது. வழக்கம் போல இது ஏலியன்கள் வேலை என்றும். இல்லை இல்லை இது ராட்சத மனிதர்கள் உதவியுடன் கட்ட பட்டது என்றும் பல கருத்து உள்ளது. சமீப ஆய்வாளர்கள் அந்த தீவில் வளரும் ஒருவகை புற்கள் வகையை சேர்ந்த செடிகளை கயிறு போல தயாரித்து சிலைக்கு மேலே கீழே என்று கட்டி எதிர் எதிர் திசையிலிருந்து அதை மாற்றி மாற்றி இழுப்பதன் மூலம் நாம் எடை அதிகமான வீட்டு பொருளை அறக்கி அறக்கி நகர்த்துவது போல அதை நடத்தி கூட்டி வந்து இருக்கலாம் என்கிறார்கள்.
இருந்தாலும் இவ்வளவு கடினமான வேலையை அவர்கள் ஏன் எதற்கு எப்படி செய்தார்கள் என்று இன்று வரை யாராலும் தீர்க்கமாக சொல்லவே முடியவில்லை. இன்றும் மர்மமான தனது பார்வையால் தீவின் மைய பகுதியில் உள்ள ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத அமானுஷயத்தை உற்று பார்த்து கொண்டே இருக்கின்றன அந்த " மர்ம மோய்கள்" .
✴ ✴ ✴ ✴
ஈஸ்டர் தீவு ஒரு மர்ம தீவு தான் ஆனால் ஆபத்து இல்லாத ரம்மியமான தீவு. ஆனால் உலகில் சில தீவுகள் மனிதர்கள் செல்ல அச்ச படுகின்ற அளவு திகில் நிரம்பிய தீவுகளும் உள்ளன. அப்படி பட்ட திகில் தீவுகளை பற்றி அடுத்த பாகத்தில்.........
மர்மங்கள் தொடரும்............🕷🕷
|