ரா_பிரபு
பாகம் 7 : திகில் தீவுகள்
உலகில் பல தீவுகள் அழகானவை, ரம்யமானவை ,பலது மர்மமானவை ஆனால் சில தீவுகள் கொஞ்சம் திகிலானவை உதாரணமாக பொம்மைகளின் தீவு (island of the dolls) மெக்சிகோ சிட்டியின் தெற்கு பகுதியில் Xohimico கால்வாய்களுக்கு மத்தியில் உள்ள ஒரு குட்டி தீவு தான் (island of dolls) திகில் ,த்ரில் ..விரும்பிகள் சாகச விரும்பிகள் .. செல்வதற்கு ஏற்ற தீவு தான் இந்த island of doll.
இந்த தீவில் மனிதர்கள் யாரும் இல்லை மாறாக இங்கே வசிப்பது எண்ணற்ற பொம்மைகள் தான். அதுவும் anabelli படங்களில் காட்ட படுவதை போல திகில் வகை பொம்மைகள். இங்கே செல்பவர்கள் அங்குள்ள மரங்களில் செடிகளில் எங்கு பார்த்தாலும் பொம்மைகள் தொங்கி கொண்டிருப்பதை பார்க்கலாம். அங்குள்ள பொம்மைகளில் ஆவிகள் புகுந்து இருப்பதாக அங்கே சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களால் நம்ப படுகிறது. அங்கு சென்று வந்தவர்கள் பல திகில் கதைகள் சொல்வார்கள். அங்குள்ள பொம்மைகள் தன்னை தலை நிமிர்ந்து பார்த்ததாக கண்ணை சிமிட்டியதாக இரவில் அவைகளுக்குள் அவை பேசி கொள்வதாக சொல்வார்கள். இரவில் அந்த பொம்மைகள் மிகவும் மிரட்டலாக இருக்கும் என்று சொல்லவே தேவை இல்லை. அந்த தீவில் அந்த பொம்மைகள் எப்படி வந்தன என்பது தான் இன்னும் திகிலான கதை.
Don Julian Santana Barrera என்பவர் தான் அந்த தீவின் பாதுகாவலர் . ஒரு முறை அங்கே ஒரு சுழலில் சிக்கி இறந்து இருந்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமியை கண்டெடுத்தார். அந்த கால்வாயில் அந்த சிறுமியின் பினதுடன் சேர்ந்து ஒரு பொம்மையும் மிதந்து கொண்டிருப்பதை பார்த்தார். அந்த பொம்மையை தூக்கி எறிய மனம் இல்லாமல் அந்த இறந்த சிறுமிக்கு மரியாதை செய்யும் விதமாக அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்க விட்டார். அதன் பின் தான் அந்த அமானுஷ்யம் ஆரம்பமானது .
திடீரென ஜூலியன் போக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டன அவர் மேலும் பல பொம்மைகளை வாங்கி வந்து மரத்தில் கட்ட தொடங்கினார். அவரது இந்த செயல் மூலம் சிறுமியின் ஆவி திருப்தி அடைவதாக சொல்ல படுகிறது. அதன் பின் தொடர்ச்சியாக பொம்மைகளை கட்டி கொண்டே இருந்தார். அந்த பொம்மைகள் எல்லாம் அவிகளால் ஆட்கொள்ள பட்டது என்கிறார்கள் . ஜூலியன் மன நிலை பாதிக்க பட்டவர் போல் ஆனார். இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறி தொடர்ச்சியாக பொம்மைகளை கட்ட தொடங்கினார். இப்படி அவர் பித்து பிடித்ததை போல தொடர்ந்து 50 ஆண்டுகள் கட்டி கொண்டே இருந்தார். அந்த தீவு முழுவதும் பொம்மைகளால் தனி ஒருவனே கட்டி நிறப்பினார்.
பிறகு....திடீரென ஒரு நாள் 2001 ஆம் ஆண்டு மர்மமான முறையில் தண்ணீரில் மூழ்கி சரியாக அந்த சிறுமி இறந்து போய் இருந்த அதே இடத்தில் இறந்து போய் இருந்தார். அவரும் அந்த தீவு ஆவிகளுடன் கலந்து விட்டதாக மக்கள் நம்புகிறார்கள்
கால போக்கில் அந்த தீவு டூரிஸ்ட் ஸ்பாட் ஆக மாறி பல டூரிஸ்ட்களை கவர்ந்தது. பத்திரிக்கை ஆர்டிக்ள் டிவி தொடர்களில் வந்தது பல டூரிஸ்ட்கள் மேலும் பல பொம்மைகள் கொண்டு வந்து காட்டினார்கள். இப்பொது வெறும் பொம்மைகள் ஆட்சி செய்யும் அமானுஷ்ய தீவாக இருக்கிறது அந்த பொம்மைகளின் தீவு.
✴ ✴ ✴ ✴
உலகம் பல முன்னேறிய நாகரிகமும் தொழில் வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் அடைந்து விட்டாலும் இன்னும் இது எதுவுமே தெரியாத முற்றிலும் இன்றைய நவீன உலத்தின் தொடர்பே துளியும் இல்லாத இன்னும் ஆதி கால காட்டுவாசிகளை போல வாழும் ஒரு தனி தீவு ஒன்று உள்ளது. அதன் பெயர் "Sentinel Island "
"Skull island " படத்தில் காட்ட படும் வெளி மனிதர்கள் நெருங்க முடியாத மர்ம தீவை போன்ற ஒரு தீவு தான் இந்த சென்டினல் தீவு . இது அந்தமான்க்கு மேற்கு அமைந்து இருக்கும் இந்தியாவிற்கு சொந்தமான ஒரு தீவு ஆகும். இங்குள்ள சென்டினல் இன மக்கள் 40000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வசித்து வருகிறார்கள்.
அவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக தான் இருக்கும் என கணிக்க படுகிறது .அதிகபட்சமாக 400 பேர் இருக்கலாம் என்கிறார்கள். அந்த தீவில் இருபவர்கள் வெளி உலகத்தாருடன் தொடர்பு வைத்து கொள்ளாதது மட்டும் அல்ல... வெளியில் இருந்து யாரையும் அவர்கள் தீவில் அனுமதிப்பதும் இல்லை. மீறி அங்கே நெருங்கினால் அவர்களை அந்த ஆதிவாசிகள் கொன்று விடுகிறார்கள். ஒரு முறை அந்தமான் சிறையில் இருந்து ஒரு கைதி தப்பி போய் அந்த தீவில் பதுங்கி இருக்கிறான் அவனை அந்த தீவு வாசிகள் கொன்று கடலில் வீசி விட்டார்கள்.
நிலைநடுக்கமும் சுனாமியும் பாதித்த பின் அந்த தீவு வாசிகள் கணிசமாக இறந்து போய் இருப்பார்கள் என்று கனிக்க பட்டது ஆனால் ஆய்வு செய்த போது ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த தீவு வாசிகள் இயற்கை பேரிடரில் யாருமே சாக வில்லை... இயற்கை இடரில் உயிர் தப்பும் ஏதோ ஒரு நுட்பத்தை அவர்கள் கற்று வைத்து இருந்தார்கள். தங்களை ஆய்வு செய்ய வந்த ஹெலிகாப்டரை நோக்கி அவர்கள் கற்களை கட்டைகளை ஈட்டிகளை வீசி எறிந்து அவர்கள் எதிர்ப்பை வெளி படுத்தினார்கள். இந்திய அரசங்கம் அவர்களை நட்பு ரீதியாக அணுகி பார்க்க தேங்காய் மற்றும் பன்றிகள் போன்ற பரிசு பொருட்களுடன் நெருங்கி பார்த்தார்கள் ஆணால் அவர்களுக்கு கிடைத்தது அம்புகள் வரவேற்பு தான். (ஆணால் ஏதோ சில முறை சுற்றுலா பயணிகள் கொடுத்த பரிசை அவர்கள் அன்போடு வாங்கி கொண்டதாக சொல்ல படுகிறது .
1981 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 2 ஆம் நாள் primrose என்ற பெயருடைய கப்பல் ஒன்று அந்த தீவை சுற்றியுள்ள பவள பாறைகளின் அருகில் தரை தட்டி நின்றது. கப்பலின் கேப்டன் அங்கே இருந்து தீவு வாசிகள் தம்மை மிக தீவிரமாக இரண்டு மூன்று நாட்களாக கண்காணிப்பதையும் தீடீரென அவர்கள் சுறுசுறுப்பாக எதையோ செய்வதையும் கண்டார். கொஞ்சம் உற்று கண்காணித்து பார்த்த கேப்டன் அதிர்ந்தார். அவர்கள் ஈட்டி கட்டுதல் அம்புகள் வில்கள் தயாரித்தலுடன் ஒரு போருக்கு தயாராகி இவர்கள் இருக்கும் இடத்தை அடைய படகுகளை தயார் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. பயத்தில் உறைந்த கேப்டன் தங்கள் தற்காப்புக்காக ஆயுதம் வேண்டும் என்று ரேடியோ தகவல் அனுப்பினார். அவர் கேட்ட உதவி அவருக்கு வந்து சேரவே இல்லை. கேப்டனின் நல்ல நேரம் கடல் கொஞ்சம் இயற்கை சீற்றத்துடன் காண பட்டதால் அவர்கள் இந்த கப்பலை நெருங்குவதில் தாமதம் ஆனது. ஒரு வாரம் கழித்து அவர்கள் Indian Oil And Natural Gas Commission. இல் ஒப்பந்த அடிபடையில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு ஹெலிகாப்டரால் மீட்க பட்டார்கள்.
அவர்களுடன் நட்பு பாராட்டும் முயற்சியில் பல சில முறை ஈடு பட்ட இந்திய அரசு தோல்வியை கண்டு முயற்சியை கை விட்டது. அதன் பின் அந்த தீவை சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் வரை மனிதர்கள் செல்ல தடை செய்ய பட்ட பகுதியாக அறிவித்தது. இன்றும் "உங்க பேச்சுக்கு நாங்க வரமாட்டோம் எங்க பேச்சுக்கு நீங்க வராதீங்க " என்கிற ரீதியில் வெளி உலக தொடர்பு இல்லாமல் தனித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த மர்ம செண்டினல் தீவு வாசிகள்.
✴ ✴ ✴ ✴
பிரேசிலில் உள்ள ஒரு தீவு தான்"Ilha de Queimada Grande, "இதன் இன்னோரு பெயர் "Snake Island, "
அதாவது பாம்புகளின் தீவு. 43 ஹேக்கர் நிலபரப்பில் விரிந்து இருக்கும் இந்த தீவில் மனிதர்கள் சென்றால் சில மணி நேரங்கிளில் இறக்க நேரிடும் அந்தளவு கிட்டத்தட்ட 4000 விஷ பாம்புகள் இந்த தீவில் வாழ்கின்றன.
ஓவொரு சதுர அடிக்கும் குறைந்தது 5 Golden Lancehead வகை விரியன் பாம்புகள் அங்கே காண படுகின்றன. அந்த தீவில் மனிதர்கள் செல்ல முடியாத அளவு இத்தனை விஷ பாம்புகள் அங்கே எப்படி உண்டாகின என்பது மர்மமான ஒன்று தான்.
https://en.wikipedia.org/wiki/Ilha_da_Queimada_Grande
✴ ✴ ✴ ✴
சரி தீவில் ரொம்ப நேரம் சுத்தி கொண்டிருக்க முடியாது கொஞ்சம் நிலத்திற்கு வருவோம்..... நீங்கள் இரவில் தனியாக எங்கோ செல்கிறீர்கள் ...உங்களை மின் மினி ஒளி பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும் ?? நல்ல ரம்மியமாக தான் இருக்கும் அல்லவா ?
நான் சொல்ல போகும் ஒளிகள் மனிதர்களை பின் தொடரும் திகில் ஒளிகள்... அதை பற்றி அடுத்த பாகத்தில்.
மர்மங்கள் தொடரும்............🕷🕷
|