Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 12
Posted By:Hajas On 1/16/2018 3:34:42 AM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் 11 : சில மர்ம நிகழ்வுகள்

பாகம் : 12 : சில மர்ம நிகழ்வுகள் (2 )

 

கடந்த பாகத்தின் தொடர்ச்சியாக மேலும் சில மர்ம நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்ப்போம்.

( 6 )☸ அந்த மர்ம வெடிப்பு

🕸 Tunguska event :

1908 ஆம் ஆண்டு ஜூன் 30 தேதி .. சைபிரியாவின் ஒரு தொலைவான காட்டு பகுதி அது. அங்கே tunguska நதியின் அருகே இருந்த காட்டு பகுதியில் ஒரு மர்ம நிகழ்வு ஒன்று நடந்தது. 100 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அது tunguska event என்ற விளக்க முடியாத மர்ம நிகழ்வாக திகழ்கிறது. அன்றைய தினம் அந்த காட்டு பகுதிக்கு மேலே இருந்த வானம் திடீரென வெடித்தது. ஒரு பெரிய நெருப்பு கோளமாக அது ஒரு மகா வெடிப்பாக வெடித்து சிதறியது. அந்த நெருப்பு கோளத்தின் அளவு கிட்ட தட்ட 300 அடிகள் அகலம் . அதன் சக்தி ஆச்சர்ய பட தக்க வகையில் ஹிரோஷிமாவில் போட பட்ட சக்திவாய்ந்த அணுகுண்டை போல கிட்ட தட்ட 380 மடங்கு அதிக சக்தி கொண்டதாக இருந்தது. அது வெடித்த போது அங்கே இருந்து 35 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இடத்தில் வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்து சிதறின. அந்த காட்டில் 2000 சதுர கிலோ மீட்டருக்கு சுத்தமாக பஸ்பமாக்கி இருந்தது அந்த மர்ம நெருப்பு பந்து . மேலும் அத்துடன் அந்த காட்டின் எட்டு கோடி மரங்களை பிரமாண்டமாக அது அழித்து இருந்தது.

 

இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வெடிப்பை நாம் வானத்தில் பார்த்தது மிக சொற்பமே... அந்தளவு ஒரு சக்தியோடு அன்று வெடித்தது என்ன என்பது தான் இன்று வரை புரியாத மர்மம். பலர் அது ஒரு வின் கல் ..பூமியில் மோதும் முன்பே வெடித்து விட்டது என்றார்கள். பலர் அது ஒரு ஏலியன் ஷிப் ஆக்சிடெண்ட் என்றார்கள். அந்த மோதல் அரிசோனா வில் உள்ள ஏரிகல் விழுந்த இடத்தில உண்டான பள்ளம் போல் ஏன் பள்ளத்தை உண்டாக்க வில்லை என்பது இன்னொரு புரியாத புதிர்.  20 ஆண்டுகள் கழித்து Leonid kuli என்பவர் தலைமையில் ஒரு ரஷ்ய குழு அங்கே ஆய்வு செய்த போது 20 ஆண்டுகள் கழித்து அங்கே மரங்கள் நொறுங்கி கிடந்ததை கண்டார்கள். அவைகள் விசித்திரமான ஒரு பெரிய பட்டாம் பூச்சி வடிவில் நொறுங்கி சிதைக்க பட்டிருபதை கண்டார்கள்.


இது பூமி சாராத ஏதோ ஒன்றால் தான் நடந்துள்ளது என்று கருத்தை சொன்னார்கள். சிலர் அதை மேட்டர் ஆண்டி மேட்டர் களின் இணைவு என்றார்கள் (இயற்கையில் மேட்டருக்கு எதிரான ஒரு அதே போல பொருள் தான் ஆண்டி மேட்டர். இரண்டும் ஒன்று சேர்ந்து விட்டால் அளப்பரிய சத்தியுடன் ஒன்றை ஒன்று அழிக்க கூடியவை. ஆரம்ப கால பிரபஞ்சத்தில் ஒவ்வொரு ஆண்ட்டி மேட்டருடன் மேட்டர் மோதி அழிந்து மிஞ்சி இருபது தான் இன்றைய நாம் காணும் பிரபஞ்சம். மேல் சொன்ன அளவு வெடிப்பு சம்பவம் நடக்க ஒரு கோலி குண்டு அளவு மேட்டர் ஆண்ட்டி மேட்டர் மோதினால் போதுமானது).


அன்று என்ன பொருள் வெடித்தது என கருத்துக்கள் பல இருந்தாலும் tanguska சம்பவம் ஒரு விளக்க முடியாத மர்ம சம்பவமாகவே இருக்கிறது.

( 7 )☸ லிப்ட் பயங்கரம்

🕸 Elisa lam இவள் உலகத்தின் மிக மர்மமான சம்பவங்களில் ஒன்றாக கருத படும் சம்பவத்திற்கு சொந்தமான பெண். அப்படி என்ன மர்ம நிகழ்வு அவளுக்கு நிகழ்ந்தது ??

எலிசா லேம் ஒரு 21 வயது கல்லூரி மாணவி. லாஸ் ஏஞ்சல்சிலிருந்து வெண்கொவர் செல்லும் ஒரு தனிமை பயணி அவள். cecil hotel இல் தங்கி இருந்த போது தான் மர்மமாக அவள் காணாமல் போனால். சில நாள் கழித்து அந்த ஹோட்டலின் மற்ற விருந்தினர்கள் ஒரு புகார் கொடுத்தனர் அதாவது ஹோட்டல் ரூமில் முன்பு போல தண்ணீர் வேகமாக வருவது இல்லை குழாயில் ஏதோ அடைப்பு உள்ளது. மேலும் தண்ணீரின் சுவை மற்றும் வாசனையும் வித்தியாசமாக உள்ளது . அதை தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்கள் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சோதித்தது பார்த்த போது தான் "அது" கிடைத்தது . காணாமல் போன எலிசா வின் பிணம். அதுவும் உடலில் துணி ஏதும் இல்லாமல் தண்ணீர் தொட்டியில் மிதந்த படி. விசித்திரமாக அவளது துணி ஷூ மற்றும் வாட்ச் அதே தொட்டியில் தனியாக வைக்க பட்டு கிடந்து மிதந்தது.

இந்த கேஸில் ஒரு பெரிய விச்சித்திரம் இருந்தது அது நாடு முழுவதும் எலிஸாவை பற்றி பேச வைத்தது. அது ஒரு மர்ம வீடியோ. தேடும் பணியில் ஹோட்டல் cc டிவியில் இருந்து போலீஸ் க்கு கிடைத்த விடீயோ.
அந்த வீடியோ வில் எலிசா லேம் லிப்ட் இல் ஏறுவது தெரிந்தது. அங்கே அவள் செய்தது மிக விசித்திரமான காரியம். முதலில் லிப்ட் இல் சாதாரணமாக தான் ஏறுகிறாள். பிறகு தேவை இல்லாமல் அணைத்து புளோர் பட்டனையும் அழுத்துகிறாள். அந்த லிப்ட் இன் கதவுகள் சாத்தவே இல்லை.. அப்படியே திறந்தே இருக்கின்றன. பிறகு மெல்ல யாருக்கோ பயந்து எட்டி பார்க்கிறாள். பிறகு மிகுந்த அச்சத்துடன் லிப்ட் உள்ளே ஒரு ஓரமாக கோழி குஞ்சு போல பயந்த படி நடுங்குகிறாள். ஒளிகிறாள். லிப்ட் கதவு அப்போதும் மூடவே இல்லை. பிறகு மெல்ல தயக்கத்துடன் யாரையோ எதிர் பார்ப்பது போல மெல்ல எட்டி பார்க்கிறாள். பிறகு மெல்ல மெல்ல லிப்டை விட்டு வெளியேறி நிற்கிறாள். இங்கே இவள் செய்தது தான் இன்னும் விசித்திரம் அங்கே காற்றில் கைகளை வித விதமாக ஆட்டி சைகை காட்டி யாரிடமோ பேசுகிறாள். ஆனால் கேமராவில் அங்கே அவள் எதிரில் யாருமே இல்லை. கண்ணுக்கு தெரியாத யாருடனோ காற்றில் அவள் பேசி கொண்டிருக்கிறாள்.


லிப்ட் கதவுகள் இப்போது மர்மமாக மூடுகின்றன.(இந்த வீடியோ இணையத்தில் உள்ளது elisa lame lift video என்று தேடி பாருங்கள் )

இந்த விசித்திர சம்பவத்திற்கு பிறகு தான் எலிசா தண்ணீர் தொட்டியில் நிர்வாண பிணமாக கண்டெடுக்க பட்டாள். போதாதென்று அங்கே வேறு சில மர்மங்களை விட்டு சென்றிருந்தாள் . அதாவது அது கொலையாகவோ தற்கொலையாகவோ இருந்தால் உடைகள் கழட்ட பட்டு இருப்பது ஏன். ? லிப்ட் இல் அவள் நடவடிக்கை பார்த்தவர்கள் அவள் ஏதோ போதை பொருள் எடுத்திருக்கலாம் என்றார்கள் மூளை குழம்பி போய் தண்ணீர் தொட்டியில் குளிக்க இறங்கி இருக்கலாம் என்றார்கள். ஆனால் தொட்டியின் மூடி வெளி பக்கமாக மூட பட்டு இருந்தது. மேலும் அந்த தொட்டி 10 அடி உயரத்தில் இருந்தது. அங்கே ஊழியர்களே ஏணி போட்டு தான் ஏறினார்கள். அவர்கள் வரும் முன் அங்கே ஏறியதற்கான எந்த வாய்ப்பும் தடயமும் இல்லை. மேலும் அங்கே சென்றடைய ஊழியர்கள் செக்யுரிட்டி லாக்கை பயன் படுத்தினால் தான் முடியும்.


அவளை அங்கே மர்மமாக கொன்று போட்டது யார் ?அல்லது எது ?  அவள் நிச்சயமாக தீய சக்தியால் ஆட்கொள்ள பட்டாள் என்று பலர் நம்புகின்றனர். பலர் அவளுக்கு போதையால் ஏற்பட்ட மாய தோற்றம் ..ஹாலுசினேஷன் தான் காரணம் என்றார்கள் ஆனால் இன்று வரை அவள் மரணத்தின் சரியான காரணத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவம் சார்ந்த மேலும் இரண்டு கொசுறு தகவல்...சொல்கிறேன்.

1. Richard Ramirez — aka the Nightstalker — எனும் தொடர் கொலையாளி 1984 இல் வசித்த இடம் இந்த ஹோட்டல் தான். (அவன் ஆவி தான் காரணமா ????)
2. எலிசா லேம் ஒரு போதை அடிமை என்று பலர் சந்தேகிக்கும் நிலையில் அங்கே பக்கத்து அக்கது ஏரியாவில் ஒரு போதை பொருள் பயன் பாட்டில் இருந்தது கண்டு பிடிக்க பட்டது. ஆச்சர்யம் என்னன்னா அந்த போதை பொருளின் பெயர்' எலிசா லேம் .'.. என்ன ஒரு co insident.

விச்சித்திர சம்பவங்கள் இன்னும் நிறைய நிறைய இருக்கின்றன அதில் இன்னும் சில சம்பவ தொகுப்பை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷

 

பாகம் : 13 : சில மர்ம நிகழ்வுகள்( 3 )











Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..