ரா_பிரபு
பாகம் 11 : சில மர்ம நிகழ்வுகள்
கடந்த பாகம் வரை நாம் உலகத்தின் பல விளக்க படாத மர்ம கட்டிடங்கள் ,மர்ம இடங்கள் ,ஏலியன் மர்மங்கள், ஆச்சர்யமான கோவில்கள் ,இப்படி பார்த்து வந்தோம் அவற்றில் கொஞ்சம் அறிவியல் சாயலும் இருந்தது . இனி வரும் பாகங்களில் அறிவியல் சாயல் இல்லாத விளக்க படாத மர்ம நிகழ்வுகள் சிலவற்றை பார்க்க இருக்கின்றோம் எல்லாமே மிக வி்சித்திரமானவை. அப்படி உலகில் ஆங்காங்கே நடந்திட்ட சில சின்ன சின்ன மர்ம சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.
( அடுத்து வரும் 4 பாகங்களில் நாம் 13 மர்ம சம்பவங்களை பற்றி வரிசையாக பார்க்க இருக்கின்றோம்.)
( 1 ) ☸"மரத்தில் ஒரு மர்ம பிணம் " ☸
April 18, 1943, இங்கிலாந்தில் ஒரு 4 சிறுவர்கள் ஒரு காட்டு பகுதியில் வேட்டைக்கு சென்றிருந்தார்கள். அதில் ஒரு 15 வயது சிறுவன் wych elm எனப்படும் ஒரு வகை மரத்தை கண்டான். 'இதில் நிச்சயம் பறவை கூடுகள் கிடைக்கும் ' அதில் பரபரவென ஏறியவன் அங்கே உள்ள ஒரு பெரிய பொந்தில் கையை விட்டான். அங்கே ஏதோ ஒரு வித்தியாசமான ஒன்று கையில் தட்டு பட்டது. அதை வெளியில் எடுத்தவன் அதிர்ந்தான். அது ஒரு அழுகிய நிலையில் இருந்த பிணத்தின் எலும்பு கூடு.
அந்த எலும்பு கூடு ஒரு பெண்ணின் எலும்பு கூடு என்று புரிந்தது. அதன் மண்டையில் இன்னும் கொஞ்சம் தசை பகுதியும் அதில் தொங்கும் முடிகளும் காண பட்டன அந்த கருவாடாய் போன பிணத்தின் ஒரு கை காணவில்லை. அந்த மண்டை ஓட்டின் இரண்டு முன் பற்கள் உடைத்து எடுக்க பட்டிருந்தது. சிறுவர்கள் அலறி கொண்டு ஓடி ஊர் மக்களை அழைத்து வந்து ஆராய்ந்த போது மரத்திற்கு பக்கத்தில் அந்த பெண்ணின் துணிகள் புதைத்து வைக்க பட்டிருந்தது தெரிந்தது . கூடவே அவளது காணாமல் போன கை. நிபுணர்கள் இதை ஆராய்ந்து இந்த பென்னின் வயது 30 35 இருக்கலாம் என்றார்கள். அவளுக்கு இந்த கொடூரம் ஒரு 18 மாதம் முன் நடந்து இருக்கலாம் என்றார்கள். கொடூரத்தின் உச்சமாய் அவள் மர பொந்தில் கைகள் பிய்க்க பட்டு சொருக பட்ட போது அவள் உயிரோடு இருந்ததாக சொன்னார்கள்.
எவ்வளவு துப்பறிந்தும் அந்த பெண் யார் என்ன என்று சிறு துப்பும் கிடைக்க வில்லை. அந்த ஊர் மக்கள் அந்த பெண்ணுக்கு பெல்லா என்ற கற்பனை பெயரை வைத்தார்கள். அந்த கேஸ் அந்த ஊரில் மிக பரபரப்பாக பேச பட்டது.
“Who put Bella down the wych-elm?” என்று அந்த ஊர் மக்கள் பார்க்கும் சுவரில் எல்லாம் எழுதி வைத்தார்கள்..
கடைசி வரை ... இன்று வரை...விடை தான் கிடைக்க வில்லை. தீர்க்க படாத மர்மமாகவே இருக்கிறாள் பெல்லா. (மேலும் அறிய Bella in wych elam என்று தேடி பாருங்கள் )
✴ ✴ ✴ ✴
( 2 )☸" பாலத்தில் ஒரு பயங்கரம்'' ☸
கிட்ட தட்ட மேலே பார்த்த மாதிரியான ஒரு சம்பவம் தான் அடுத்ததாக பார்க்க போவதும். February 8, 1981, இல் சான் பிரான்சிசுகோவில் உள்ள கோல்டன் கேட் தொங்கும் பாலத்தில் Leroy Carter என்பவரின் சடலம் கண்டெடுக்க பட்டது. அது ஒரு "முண்டம் சடலம் ".அதாவது அந்த சடலத்தின் தலையை காண வில்லை. அதை விட விசித்திரம் ஒரு கோழியின் சடலமும் கூடவே கிடைந்ததது அந்த கோழிக்கும் தலை வெட்ட பட்டு இருந்ததது. அந்த கோழியின் உடல் கார்டரின் வெட்ட பட்ட தலை இருக்க வேண்டிய இடத்தில சொருக பட்டிருந்ததது. வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் இதை ஆராய ஒரு Sandi Gallant என்ற சிறப்பு அதிகாரியை நிர்ணயித்தார்கள் .
அவர் இதை ஆராய்ந்து பார்த்து அந்த காணாமல் போன தலை 42 நாள் கழித்து கிடைக்கும் என்றார். அவர் சொன்னது போலவே 42 கழித்து வெட்ட பட்ட தலையை அங்கே திருப்பி வைத்திருந்தான் கொலைகாரன். அனைவரும் ஆச்சர்யம் அடைய அந்த அதிகாரி அதற்க்கு விளக்கம் அளித்தார் “Palo Mayombe”, என்ற ஒரு கொடூர சடங்கு இது சாத்தானை வழி படுபவர்களால் செய்ய படுவது என்றார். கொலை காண காரணம் அவர் யூகித்து இருந்தாலும் கொலையாளி கடைசி வரை மர்மமாகவே இருக்கிறான் .கடைசி வரை அவன் பிடிபட வில்லை.
✴ ✴ ✴ ✴
( 3 )☸ ''ஒரு முகமூடி மரணம்'' ☸
1966 இல் பிரேசிலில் ஒரு நாள்...பட்டம் விட்டு கொண்டு விளையாடி கொண்டிருந்த சிறுவன் ஒருவன் எதிலோ தடுக்கி விழ பார்த்தான். அது என்ன வென்று பார்த்தால். அங்கே இரண்டு பேரின் பிணங்கள் கிடந்ததது. அவைகள் மிக விசித்திரமான பிணங்கள்.
அந்த இருபிணங்களும் டிப் டாப்பாக கோட் சூட் அணிந்து இருந்தன ஏதோ கூட்டத்திற்கு அல்லது விழாவிற்கு செல்பவர்களை போல. ஆனால் இருவருமே விசித்திரமாக கண்ணை மறைக்கும் lead mask அணிந்து இருந்தனர்.
போலீஸ் ஆராய்ந்த போது அவர்களுடன் நோட் ஒன்று கிடைந்ததது. அதை வைத்து ஆராய்ந்த போது குழப்பம் தான் கூடியது. அந்த நோட் குறிப்பில் இருந்து அவர்கள் நிச்சயம் தற்கொலைக்கு முயன்றவர்கள் அல்ல என்பது தெரிந்தது. அவர்கள் உடலை ஆராய்ந்த ஆய்வாளர்கள் அவர்கள் உடலில் எந்த காயமோ போராட்ட அறிகுறியோ இல்லை என்றார்கள். அவர்கள் ஏதோ ஒரு நிகழ்வுக்கு காத்து இருந்ததாக மட்டும் கணிக்க முடிந்ததது. அது என்ன நிகழ்வு... எதுக்காக கோட் சூட் சகிதம் கிளம்பி இருந்தார்கள். கண்ணில் ஏன் அந்த கருப்பு பட்டை.. எப்படி இறந்தார்கள் போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை.
( மேலும் தகவலுக்கு lead mask case என்று தேடி பாருங்கள் )
✴ ✴ ✴ ✴
( 4 )☸ " மர்ம கப்பல் mery celeste " ☸
வரலாற்றில் மிக பிரபலமான ஒரு மர்ம கப்பல் தான்" mery celeste" 1872 டிசம்பரில் ஒரு நாள் நியூயார்கிலிருந்தது genoa நோக்கி அந்த சிறு கப்பல் கிளம்பியது... கேப்டனுடன் மொத்தம் 8 பேர் அதில் கிளம்பி இருந்தார்கள். ஒரு தம்பதி ஒரு 2 வயது சிறு குழந்தை மற்றும் ஒரு பெண்.. அதில் அடக்கம். அந்த கப்பல் தனது இலக்கை வந்து சேர வேண்டிய நாளை கடந்து ஒரு வாரம் ஆகியும் வந்து சேரவில்லை..சம்பந்தமில்லாமல் கடலில் ஒரு 400 கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில ஒரு குழுவால் அந்த கப்பல் கண்டு பிடிக்க பட்டது. அதில் அருகே சென்று பார்த்தவர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள்.
அந்த கப்பலில் இருந்தவர்கள் அப்படியே மாய மாகி இருந்தார்கள். அங்கே ஒருவரும் இல்லை... ஆளே இல்லாமல் பேய் கப்பல் போல அது தனியாக சுற்றி கொண்டிருந்தது. சரி ஏதாவது நடந்து இருக்கும் என நினைத்தால் அந்த ஏதாவது என்ன என்பதில் தான் பெரும் குழப்பமும் அமானுஷ்யமும் இருந்தது. காரணம் அது கொள்ளையர்கள் கைவரிசை என்று சொன்னால் அங்கே கப்பலில் எந்த பொருளும் கொள்ளை அடிக்க பட வில்லை. அங்கே இருந்தவர்கள் இயற்கை பேரழிவு எதாவதில் சிக்கி இறந்திருக்கலாம் என்றால் அந்த கப்பலில் எந்த சேதாரமும் காண பட வில்லை. உணவு இல்லாமல் இறந்து இருப்பார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை காரணம் அந்த கப்பலில் இன்னும் 40 நாளைக்கு தேவையான உணவு வைக்க பட்டு இருந்தது. அது மட்டுமின்றி அப்படி ஒரு வேளை இறந்து இருந்தால் கூட பிணங்கள் அங்கே தானே இருக்க வேண்டும். இப்படி சுத்தமாக காற்றில் கரைந்த கற்பூரம் போல அவர்கள் மறைந்தது எப்படி அவர்களுக்கு நடந்தது என்ன என்பது இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது.
(மேலும் தகவலுக்கு mery celeste mystery என்று தேடி பாருங்கள் )
( 5 )☸ "திகில் கப்பல்" ☸
அடுத்து சொல்ல போகும் "duch ss ourang medan " எனும் கப்பலின் மர்மம் சம்பவம் இன்னும் திகிலானது.June 1947 ஆம் ஆண்டு ஒரு நாள். சுமத்ரா விற்கும் மலேசியாவிற்கும் இடையில் உள்ள பாதையில் பயணித்த சில கப்பல்கள் ஒரே நேரத்தில் SOS சிக்னல் ஒன்றை கிடைக்க பெற்றன (உயிர் ஆபத்து காலத்தில் கொடுக்க படும் சிக்னல் SOS.. அதாவது SAVE OUR SOLE ) அடையாளம் தெரியாத அந்த கப்பல் ஒன்றில் இருந்து அந்த சிக்னலை தொடர்ந்து மோர்ஸ் கோடில் வந்து சேர்ந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த செய்தி இது தான்.
“All officers including captain are dead, lying in chartroom and bridge. Possibly whole crew dead.” (கேப்டன் உள்ளிட்ட அனைத்து ஆபிசர்களும் இறந்து விட்டார்கள் அநேகமாக பயணிகள் அனைவரும் கூட இறந்து விட்டார்கள் ) கடைசியாக அதை தொடர்ந்து வந்த செய்தி..." இப்போது நான் இறக்கிறேன்" இந்த செய்தியை அமெரிக்க கப்பலும் அதே சமயம் பிரிட்டிஷ் கப்பலும் பதிவு செய்தன. இந்த செய்தியை அளித்த கப்பல் SS Ourang Medan எனும் டச்சு கப்பல் என்பதை கண்டு பிடித்தனர். அமெரிக்க வியாபார கப்பல் சில்வர் ஸ்டார் தான் முதலில் அந்த ஸ்பாட் க்கு வந்து சேர்ந்தது. அங்கே சென்று கப்பலை பார்த்த மாலுமிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள். அங்கே காணும் இடங்கள் எல்லாமே டச்சு பயணிகளின் பிணங்கள் தான் கிடைத்தன. அவைகள் மர்மத்தையும் விசித்திரத்தையும் தாங்கி இருந்தன.
அவர்கள் அனைவரின் கண்களும் திறந்தே இருந்தன. அந்த பிணங்கள் அனைத்துமே கண்களை திறந்து வானத்தில் எதையோ அதிர்ச்சியாக பார்த்த படி இருந்தன. அவர்கள் அனைவருமே விசித்திரமாக கைகளை முன்னே கொண்டு வந்து எதையோ தடுப்பது போல அரண் அமைத்த கோணத்தில் இருந்தன.(போதும் போதும் என்று சைகையால் சொல்வது போல) அங்கே சென்று பார்த்தவர்கள் நடந்தது என்ன என்று புரியாமல் திணறினார்கள்.. ஒரு கப்பலில் இத்தனை பேரை அடித்து கொன்ற அந்த மர்ம சக்தி எது என்று யாருக்குமே புரியவில்லை. ஏன் எல்லோருமே ஒரே மாதிரி முகத்தில் திகிலை காட்டிய படி இறந்து இருந்தார்கள் ?? அவர்கள் அப்படி கடைசியாக பார்த்த அந்த காட்சி தான் என்ன ??
அந்த கப்பலில் இருந்த நாயும் கூட இறந்து இருந்தது. கடைசியாக தனக்கு"i die " செய்தி அனுப்பிய அந்த மனிதன் இன்னும் ஆச்சர்யத்தை கொடுத்தான். அவன் கடைசியாக செய்தி அனுப்பி விட்டு தந்தி கருவியில் அவன் விரல்களை வைத்த படி இறந்து இருந்தான். அதாவது தந்தி அனுப்பி அடுத்த கணம் அவனை ஏதோ அடித்து கொன்றுள்ளது.
இந்த கப்பலை கரை சேர்க்க அமெரிக்க கப்பல் ஒரு கயிறை கட்டி முயன்ற போது . அதில் தீடீரென அமானுஷ்யமாக புகை கிளம்பியது. அமெரிக்க கப்பல் பயந்து கயிறை அறுத்து விட அந்த மர்ம கப்பல் திடீரென வெடித்து சிதறி உடைந்து கடலில் கரைந்து தனது மர்மங்களுடன் சமாதியானது.
அன்று அவர்களுக்கு நடந்த கொடூரம் என்ன வென்று யாருக்கும் தெரிய வில்லை. மக்கள் அந்த கப்பலை the most deadliest gost ship in hystory என்று வர்ணித்தார்கள். (மேலும் தகவலுக்கு "duch ss ourang medan " என்று தேடி பாருங்கள்)
✴ ✴ ✴ ✴
வரலாற்றில் இப்படி பட்ட மர்ம சம்பவங்கள் ஏராளமாய் கொட்டி கிடக்கின்றன அடுத்த வரும் சில பாகங்களுக்கு இது போன்ற மர்ம நிகழ்வுகளின் தொகுப்புகள் சில வற்றை தொடர்ச்சியாக பார்க்கலாம்.
மர்மங்கள் தொடரும்............🕷🕷
|