Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 17
Posted By:Hajas On 1/21/2018 8:44:07 AM

மர்மங்கள்_முடிவதில்லை

ரா_பிரபு

பாகம் : 16: மர்ம கிராமங்கள்

பாகம்:17 சிம்சன் எனும் மர்ம கார்ட்டூன்

 

"Simsons "ஒரு அமெரிக்க அனிமேஷன் கார்ட்டூன் தொடர் .1987 முதல் நீண்ட நாட்களாக ஒளி பரப்ப படும் ஒரு நெடிய கார்ட்டூன் தொடர். இதில் சிம்சன் குடும்ப உறுப்பினர்களான Homer, Marge, Bart, Lisa, மற்றும் Maggie யை கொண்டு கற்பனை நகரமான Springfield இல் வாழும் ஒரு அமெரிக்க குடும்பத்தை சுற்றி நடக்கும் இயல்பான அமெரிக்க வாழ்க்கையை பிரதி பளிக்கும் படி நிறைய நிஜ கேரக்டர்கள் காட்ட படும் ஒரு தொடர்.

இந்த சாதாரண அனிமேஷன் தொடர் கவனத்தை பெற காரணம் உலகில் நடந்த நடக்கிற பல முக்கிய நிகழ்வுகள் இதில் அது நடப்பதற்கு பல காலம் முன்பே காட்ட படுவதால் தான். இதென்ன டைம் டிராவல் மேஜிக் போல உள்ளதே என்று நீங்கள் நினைக்கலாம்.


ஆனால் இதில் காட்ட பட்ட பல நிகழ்வுகள் நிஜ உலகில் நடந்தது எல்லா சம்பவங்களிலுமே தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக 9.11 அமெரிக்க இரட்டை கோபுர இடிப்பு பற்றி இதில் காட்ட பட்டுள்ளது. அது போன்ற காட்சிகள் மிக சில வினாடிகளே இதில் இடம் பெறும் ஏதோ ஒரு காட்சியில் தற்செயலாக கவனித்தால் சம்பந்தமில்லாமல் பின்னால் ஒரு பிரேம் இல் அமெரிக்க இரட்டை கோபுரம் கட்டிடமும் 911 என்கிற எண்ணையும் காணலாம்.

இந்த கட்டுரை தொடரின் முன்பு ஒரு பாகத்தில் டைட்டாணிக்கை பற்றி முன் கூட்டியே எழுத பட்ட நாவலை பற்றியும் எட்கர்ட் ஆலன் போ சிறுகதை ஒன்றில் கொல்ல பட்ட ரிச்சர்ட் பார்க்கர் சிறுவன் கதை நிஜத்தில் நடந்தது பற்றியும் சொல்லி இருந்தேன். அதை எல்லாம் கூட ஏதோ ஒரு தற்செயலான ஒற்றுமை என்று விட்டு விடலாம் ஆனால் சிம்சனின் சில முன் கணிப்புகள் தற்செயல் என கொள்ள முடியாத அளவு ஆச்சர்யமானவை. பின் வரும் உதாரணத்தை ஒவ்வொன்றாக பாருங்கள்.

 

2008 இல் சீசன் 20, எபிசோட் 4 இல் சிம்சனின் ஹோமர் கேரக்டர் அமெரிக்க எலெக்சனில் ஒபாமாவுக்கு ஒட்டு போட முயற்சிக்க அந்த ஓட்டிங் மெஷின் கோளாறாகி வேறு கட்சிக்கு ஒட்டு விழுவது போல காட்சி வைக்க பட்டிருந்தது. 4 ஆண்டுகள் கழித்து இது நிஜத்தில் நடந்தது கோளாரான ஒட்டு மிஷினில் ஒபாமா ஓட்டு மிட் ரோம்னி க்கு விழுந்தது கண்டு பிடிக்க பட்டது.

2003 இல் tobacco வும் tomatto வும் கலந்து tomacco என்ற ஹைபிரிட தாவரத்தை உண்டாக்கினார்கள் ஆனால் 1999 இல் சீசன் 11 எபிசோட் 5 இல் ஹோமர் கேரக்டர் அதை செய்து இருந்தது.

2014 இல் எபோலா வைரஸ் தனது தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது நமக்கு தெரியும் .(அது கண்டு பிடிக்க பட்ட ஆண்டு 1976 ) சிம்பசன்ஸ் தொடரில் 1997 இல் சீசன் 9 எபிசோட் 3 இல் Bart கதாபாத்திரம் ஜுரதால் பாதிக்க பட்டு படுத்து இருப்பார் அப்போது அவர் படிக்கும் புத்தகத்தின் பெயர் "Curious George and the Ebola Virus." 1999 களில் எபோலா உலகில் பரவி இருக்க வில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஹிக்ஸ் பூஸான் எனும் அணு துகள் 1964 இல் பீட்டர் ஹிக்ஸ் ஆல் அவதானிக்க பட்டு 2013 இல் 13 பில்லியன் டாலர் பொருட் செலவுக்கு பின் ஆய்வில் நிரூபிக்க பட்டது. ஆனால் 1998 ஆம் ஆண்டு சிம்சன் தொடர் சீசன் 8 எபிசோட் 1 இல் ஹோமர் சிம்சன் கதாபாத்திரம் ஒரு ஆராய்ச்சியாளனாக மாறி இருப்பார் அவர் எதிரே கரும்பலகையில் ஒரு சமன் பாடு எழுத பட்டிருக்கும் என்ன ஆச்சர்யம் என்றால் அது பிற்காலத்தில் கண்டு பிடிக்க பட்ட ஹிக்ஸ் பூஸான் துகளில் நிறையை கான்பதர்கான சமன்பாடு.

lisa's wedding எனும் 1995 எபிசோடில் லண்டன் டவர் பிரிஜ் காட்ட பட்ட போது பின்னால் shard கட்டிட அமைப்பு காட்ட பட்டது ஆனால் சரியாக அதே இடத்தில் 14 ஆண்டு கழித்து 2009 இல் தான் அந்த கட்டிடமே கட்ட பட்டது.

சிம்சனின் நிறைய நிஜ கேரக்டர்கள் காட்ட படுவது உண்டு .1993 இல் சீசன் 5 எபிசோட் 10 இல் Siegfried மற்றும் Roy எனும் சர்க்கஸ் கலைஞர்கள் பழக்க பட்ட வெண் புலியால் தாக்க படுவதை போல காட்சி வைக்க பட்டிருந்தது. 2003 இல் அந்த இருவர் நிஜமாகவே பழக்க பட்ட வெண் புலியால் தாக்க பட்டார்கள்.

1990 இல் bart கதாபாத்திரம் ஒரு அணு உலையில் பயன்படுத்த படும் தண்ணீரில் இருந்து மூன்று கண் கொண்ட மீன் ஒன்றை பிடித்து வருவதாக காட்சி இருந்தது. பல வருடங்கள் கழித்து அரஜென்டினா வில் அணு உலை தண்ணீர் சேர்த்து இருக்கும் நீர் தேக்கத்தில் கதிர் வீச்சால் மாற்றம் அடைந்த 3 கண் கொண்ட மீன் பிடிக்க பட்டது.

இப்படி சிம்சனின் ஆருடம் அடுக்கி கொண்டே போகலாம் இதில் ட்ரம்ப்ட் அமெரிக்க அதிபர் ஆனது கூட அடக்கம் (எந்த பகுதியில் எவ்வளவு வாக்குகள் என்று கூட கணிக்க பட்டிருந்தது ) ஒரு விஷயம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அது போலி சிம்ப்சன்களை பற்றி. அவ்வபோது போலி சிம்சன்கள் உதவுவது உண்டு. உதாரணமாக 2017 இல் ட்ரம்ப்ட் சவூதி சென்று அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டதை 2002 இல் வெளியிட்டதாக ஒரு சிம்ப்சன் கார்ட்டூன் வெளியாகி நாட்டில். பரவியது ஆனால் உண்மையில் அது 2017 மே மாதம் பத்திரிக்கையில் கிண்டலாக வெளியிட பட்ட சித்திரம்.

இப்படி சில போலிகள் இருந்தாலும்..அமெரிக்க பிரதமர் தொடங்கி ஜானி டெப் எனும் ஹாலிவூட் நடிகர் விமான நிலையத்தில் மன்னிப்பு கேட்டது . மாமிச கடையில் குதிரை கரி கலக்க பட்டது... greace நாட்டு பொருளாதாரம் சரிந்தது பிரின்ஸ் எனும் பாடகர் இறந்தது தொடங்கி... ஒரு எலுமிச்சை மரம் வேரோடு காணாமல் போனது போன்ற பல சிறு சம்பவங்கள் வரை சிம்சன் முன் கூட்டியே கணித்து உள்ளது அவ்ளோ ஏன் ஆபில் நிறுவன ஸ்மார்ட் வாட்ச் கூட சிம்சனின் பல ஆண்டுகளுக்கு முன்பே காட்ட பட்டது என்றால் என்ன சொல்வது.


கடைசியாய் ஒரு ஆச்சர்யம் சொல்லி முடிக்கிறேன் 20 th century fox க்கு சொந்தமான சிம்சனை பிற்காலத்தில் டிஸ்னி வாங்கியது. இதையும் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது தொடரில் காட்டி இருந்தது சிம்சன்.

ஒரு சின்ன கதை :
ஒரு ஊரில் மிக சிறந்த ஜோதிடன் இருந்தானாம் அவன் சொல்லும் எதுவும் மிக சரியாக பலித்ததாம். இங்கே பற்றி எரியும் என்றால் எரிந்தது. இங்கே திருடு போகும் என்றால் போனது. கடைசியில் பார்த்தால் அந்த திருட்டை .. அந்த தீ விபத்தை செய்ததே அந்த ஜோதிடன் தான் என்று தெரிய வந்ததது.

சிம்சனின் எழுத்தாளர் Dan Greaney என்ன மந்திர வாதியா இல்ல டைம் ட்ரைவலரா அல்லது சிறந்த ஜோதிடரா என்று சிலர் குழம்பி கிடக்க பலர் இல்லை இல்லை இப்படி அவர் சரியாக கணித்து சொல்ல முடிவதற்கு காரணம் அவர் "அவர்களில்" ஒருவராக இருப்பது தான் என்கிறார்கள் .


எவர்களில் ஒருவர் ???


அவர்கள் தான் உலகை மறைமுகமாக ஆண்டு கொண்டிருக்கும் நிழல் மனிதர்கள். உலக அரசியலை தங்கள் அறையில் உட்கார்ந்து நிர்ணயிக்கும் சூத்திரதாரிகள். உலக வர்த்தகத்தை தங்கள் கட்டுபாட்டில் வைத்திருக்கும் உலக வியாபாரிகள்.


அவர்களின் பெயர்.....

"இலுமிநாட்டிகள் "

சரி நிறைய உலக மர்மங்களை அலசியாயிற்று கட்டுரை தொடர் முடியும் தருவாயை நெருங்கும் சமயத்தில் சில  இந்திய மர்மங்களை பற்றி வரும் பாகங்களில் பார்க்கலாம்.

மர்மங்கள் தொடரும்............🕷🕷

 

பாகம்:18 : மர்ம இந்தியா









Others
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..