ரா_பிரபு
பாகம்:18 : மர்ம இந்தியா
பொதுவாக இந்தியாவை பொறுத்த வரை வித்யாசமான பல கோவில்கள் தான் நவீன விஞ்ஞானத்திற்கு சவால் விடும் வகையில் மர்மம் தாங்கி நிற்கின்றன. ஆனால் கோவில்கள் தாண்டி பல வகை மர்ம நிகழ்வு மர்ம இடங்கள் மர்ம மனிதர்களுக்கும் இங்கே பஞ்சம் ஒன்றும் இல்லை. அவற்றில் சிலவற்றை இப்பொது பார்க்கலாம்.
☯ ஜெட்டிங்கா கிராமத்து பறவைகள் :
" jatinga " இது அசாமில் உள்ள ஒரு சிறு கிராமம். அழகிய மலைசிகரங்கள் பசுமை போர்த்திய இயற்கை ஓவியங்கள் சூழ்ந்த ஒரு அழகிய கிராமம். 1900 ஆண்டுகளின் தொடக்கதில் ஒரு நாள் zeme naaga எனும் பழங்குடியினர் வசித்த வந்த நேரம் அது செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்திற்கு இடையில் ஒரு நாள் அந்த கிராம வாசிகள் முதல் முதலில் அந்த நிகழ்வை கண்டனர். ஒரு பறவை பறந்து வந்து தன்னை தானே கட்டிடத்தில் மோதி உயிரை விட்டது . அதை தொடர்ந்து மேலும் சில பறவைகள் அதை செய்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்த தற்கொலை பழக்கம் ஏதோ வைரஸ் நோய் பரவியதை போல மற்ற பறவைகளுக்கு பரவியது. பிறகு இரவு முழுவதும் பறவைகள் பறந்து கொண்டே இருந்தன மோதி கொண்டே இருந்தன. இப்படி பறவை தற்கொலை செய்து கொள்வதை அந்த கிராம வாசிகள் பார்த்ததே இல்லை நூற்றுக்கணக்கான பறவைகள் அப்படி விசித்திரமாக தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டன.
அது அந்த கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது இது கடவுளின் சாபம் என்று பேசி கொண்டனர். காரணம் புரியாமல் அதை பற்றி ஆச்சர்யமாக பேசி கொண்டே இருந்தனர். அடுத்த வருடம் அதே மாதம் காத்திருந்தது ஆச்சர்யம் . கடந்த ஆண்டு நடந்த கிட்ட தட்ட அதே கால கட்டத்தில் மீண்டும் கும்பல் கும்பலாக பறவைகள் தங்களை மாய்த்து கொண்டன. அந்த கிராம வாசிகள் அச்சத்தில் உறைந்தார்கள்.அடுத்து வந்த ஆண்டுகளில் அந்த பறவை மர்மம் மேலும் தொடர்ந்து அவர்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது. கடவுளின் சாபதிற்கு ஆளாக விரும்பாத அந்த jatinga கிராம வாசிகள் 1905 ஆம் ஆண்டு தங்கள் நிலங்களை புதியவர்களுக்கு விற்று விட்டு அச்சம் காரணமாக புலம் பெயர்ந்தனர்.
அடுத்து வந்த அந்த குடியிருப்பாளர்கள் அதே செப்டம்பர் -நவம்பர் இடையில் அந்த மர்ம சம்பவத்தை கண்டனர். சரியாக அந்த மாதங்களில் பறவைகள் நடவடிக்கை விசித்திரமாக மாறுவது தொடர்ந்து வந்தது ஆனால் இவர்கள் பார்வை வேறாக இருந்தது. இது கடவுள் தனக்கு கொடுக்கும் கொடை என்று கொண்டாடினர். அந்த மாதங்களில் அனைவர் வீட்டிலும் பறவை மாமிசதால் ஆனந்தமாக நிரம்பியது. நூற்றாண்டு காலமாக இன்று வரை அந்த மர்ம நிகழ்வு அங்கே தொடர்ந்து நடப்பது விஞ்ஞானிகள் கவனத்தை ஈர்த்தது. அங்கே தொடர் ஆய்வுகளை மேற்கொண்ட பின் ஒரு வழியாக அதற்க்கு ஒரு விளக்கத்தை கொடுத்தனர். பறவைகள் அந்த கிராமத்தின் விளக்கு வெளிச்சத்தால் கவர பட்டு விட்டில் பூச்சி பாணியில் தன்னை மாய்த்து கொள்கின்றன என்றார்கள். அது ஏன் சரியாக அந்த மாதத்தில் மட்டும் அவைகள் அதை செயகின்றன ? என்ற கேள்விக்கு அவர்கள் அது பருவ மாற்றம் நடக்கும் போது தான் பறவைகள் இந்த மாதிரி ஒரு மூளை குழப்பத்திற்கு ஆளாகின்றன என்று பதிலளித்தார்கள்.
காரணம் என்னவோ ஆனால் jatinga கிராம வாசிகள் நம்பியது போல அந்த நிகழ்வு நிஜமாகவே அவர்களுக்கு கடவுள் கொடுத்த வரமாக மாறியது. பறவைகள் மரணம் ஒரு சோக நிகழ்வு என்றாலும் கால போக்கில் அந்த நிகழ்வு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்ததது ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராமத்திற்கு கணிசமான அளவில் பண வரவிற்கு அது வழி செய்தது. இன்றும் கூட jatinga வில் குறிபிட்ட மாதங்களில் அந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
☯ சிகப்பு மழை :
நீங்கள் மழையில் ஆனந்தமாக நனைந்து கொண்டிருக்கும் போது வானம் திடீரென்று ரத்தம் போல சிகப்பு நிறத்தில் பிய்த்து கொண்டு ஊற்றினால் எப்படி இருக்கும் ?
கேரளாவின் இடுக்கி பகுதியை சார்ந்த மக்கள் 2001 ஜூலை 25 தொடங்கி செப்டம்பர் 23 வரை அந்த அமானுஷ்ய மழையை அனுபவித்தார்கள் . சிகப்பு நிறத்தில் வானம் ரத்ததை கரைத்து ஊற்றியதை போல பொழிந்ததை பார்த்து அதிர்ந்தார்கள். இதற்க்கு முன் 18 ஆம் நூற்றாண்டில் அதே பகுதியில் இந்த நிகழ்வு பதிவு செய்ய பட்டிருப்பது குறிப்பிட தக்கது.
☯ ஜோத்பூர் மர்ம வெடிப்பு :
December 18, 2012, ஜோத்பூர் மக்கள் அந்த பயங்கர வெடி சப்தத்தை கேட்டனர் . சூப்பர் சோனிக் ஜெட் வானத்தில் ஏற்படுத்தும் "sonic boom" மாதிரியான ஒலி அது ஆனால் மிக பெரிய வெடி விபத்தை போல மிகுந்த சப்தமானது. வெடியின் காரணத்தை ஆராய்ந்த போது மர்மம் தான் மிஞ்சியது. அந்த நேரத்தில் அந்த பகுதியில் வானில் எந்த ஒரு விமானமும் பறந்திருக்க வில்லை. அருகாமையில் எங்கேயும் வெடி விபத்து நடந்த தகவல் இல்லை. அரசாங்கம் எந்த ஆயுத சோதனையும் அந்த நேரத்தில் செய்ய வில்லை என்று தெரிவித்தது .
ஆச்சர்யம் என்ன வென்றால் அதே நேரத்தில் உலகில் பல மூலைகளில் இந்த மாதிரி வெடி ஒலி கேட்டதாக நிகழ்வுகள் பதிவானது தான். சிலர் அந்த நிகழ்வின் போது வானில் பச்சை ஒளி தெரிந்ததாக சொன்னார்கள். பலர் இது ஒரு ஏலியன் செயல் என்றார்கள். பலர் இது அரசாங்கம் நடத்தும் ரகசிய ஆயுத சோதனையாக இருக்கலாம் என்றார்கள் இன்று வரை அன்றைய ஜோத்பூர் வெடியின் காரணம் மர்மமாகவே தான் இருக்கின்றது.
☯ லடாகின் காந்த மலை :
ஜம்மு காஸ்மீரின் 11000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் லாடாகில் கார்கில் செல்லும் வழியில் 30 கிலோமீட்டருக்கு அமைந்துள்ள சாலையில் ஓரிடத்தில் உள்ளது அந்த காந்த மலை. என்ன மர்மம் என்றால் அந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை மேடாக ஏறுவதை காணலாம் அங்கே காரில் செல்பவர்கள் தங்கள் காரை அணைத்து விட்டால் கார் தானாக மேட்டை நோக்கி ஏதோ மலையால் காந்தம் போல இழுக்க படுவதை போல ஒரு 20 கிமி வேகத்தில் ஓடி ஏறுவதை பார்க்கலாம். புவி ஈர்ப்பு சக்திக்கு எதிராக வாகணங்கல் எப்படி அப்படி ஏறுகின்றன என்ற ஆச்சர்யம் அங்கே வரும் 1000 கணக்கான பயணிகளை கவர்ந்துள்ளதால் அவர்கள் அங்கே தங்கள் வண்டிகளை நிறுத்திவைத்து அந்த நிகழ்வை காணுகின்றனர்.
மலை ஈர்க்கிறது என்ற கருத்து போல சில ஆய்வாளர்கள் அது ஒரு ஆப்டிகள் இலுஷன் என்கிறார்கள் அதாவது பள்ளமாக தான் அங்கே சாலை இருக்கிறது ஆனால் பார்க்க மேடு போல ஒரு காட்சி பிழையை அது ஏற்படுத்துகிறது என்கிறார்கள்.
✴ ✴ ✴ ✴
இன்னும் சில இந்திய மர்மங்ளின் தொடர்ச்சியை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
மர்மங்கள் தொடரும்............🕷🕷
|