Posted by S Peer Mohamed
(peer) on 6/29/2022 4:03:07 PM
|
|||
போட்டி விவரங்கள்
ஈமான் அறக்கட்டளை சார்பாக, நம் வளரும் தலைமுறையினருக்கு மக்தப் மதரஸா கல்வியை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் ஊரின் நலனை கருத்தில் கொண்டும் கடந்த வருடங்களைப் போல இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக இணையதளத்தில் நத்தப்பட்ட ஈமானிய மொட்டுக்கள் நிகழ்வு இறையருளால் இந்த வருடம் ஊரில் மீலாது மைதானத்தில் இரண்டு நகழ்ச்சியாக நடைபெறயுள்ளது/ 16 & 17 ஜுலை 2022 (சனி & ஞாயிறு)
நாள் : 16 ஜுலை 2022 (சனி) நேரம்: காலை 9.00 to 12.30 (முதல் அமர்வு: இணையதள (Online) போட்டிகள்) (ஈமான் ஆடை மேளா, பாரம்பரிய பண்டக சாலை, புத்தகங்கள் பகிர்வு, கண்ணாடி ஃபிரேம் பகிர்வு) மாலை 4.30 to 10.00 (2ம் அமர்வு – போட்டிகள் & சிறப்பு அமர்வுகள்)
நாள் : 17 ஜுலை 2022 (ஞாயிறு) நேரம்: காலை 9.00 to 12.30 (முதல் அமர்வு - போட்டிகள்) மாலை 4.30 to 10.00 (2ம் அமர்வு – போட்டிகள், சொற்பொழிவு & பரிசளிப்பு)
இணையதள போட்டிகள் (Online)
பொதுவான போட்டிகள்
10. “மலரும் நினைவுகள்” – பெரியவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்
நிகழ்வுகள் / கண்காட்சிகள் விவரங்கள்: பாரம்பரிய பண்டகசாலை – Traditional Shops v பாரம்பரிய பண்டக சாலைகள் (கடைகள்) மாதிரி மீலாது மைதானத்தில் ஈமான் மூலம் ஏற்பாடு செய்யப்படும். இதில் வைப்பதற்காக கலந்து கொள்ள விரும்புபவர்கள் பாரம்பரிய பாத்திரத்தில் பாரம்பரிய் பண்டங்கள் ஒன்றை (உதா : கல்கோனா, கமர்கட்டு, குழல், etc..) கொண்டு வந்து வைக்க வேண்டும்.
ஈமான் ஆடைமேளா v ஈமான் ஆடை வங்கியிலுள்ள உபயோகப்படுத்தும் படியான புத்தாக்கம் செய்யப்பட்ட ஆண்கள், பெண்கள், இளையோர், முதியோர் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான ஆடைகளை தேவையுடையர்கள் கண்ணியாமான முறையில் நேரில் வந்து பார்த்து தேர்ந்தெடுத்து செல்லும் வகையில் ஆடைகள் வைக்கப்படிருக்கும். v உங்களிடமுள்ள அதிகப்படியான, உபயோகப்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் ஆடைகளை தேவையுடையர்களுக்கு பகிர்ந்து கொள்ள நாடினால் அவற்றை சலவைச் செய்து, அயர்ன் செய்து கொண்டு வந்தும் தரலாம்.
எழுத்தழகியல் (Calligraphy) – மாணவ மணிகளின் கலை படைப்புகள் v எழுத்தழகியல் (Calligraphy) போட்டியில் கலந்துகொண்ட மாணவமணிகளின் படைப்புகள் காட்சிக்காக வைக்கபடும்.
புத்தகங்கள் பகிர்வோம்! அறிவைப் பெருக்குவோம்! v உங்களிடமுள்ள நீங்கள் படித்து முடித்த, இனிமேல் தேவைப்படாத நல்ல புத்தகங்களை கொண்டு வந்து தாருங்கள். v உங்களுக்கு பயன்படக் கூடிய நல்ல புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். v வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவோம்.
கண்ணாடி ஃபிரேம் வழியே கருணையை பகிர்வோம்! v ஈமான் கண்ணாடி ஃபிரேம் வங்கியிலுள்ள உபயோகப்படுத்தும் படியான நல்ல நிலையிலுள்ள கண்ணாடி ஃபிரேம்கள் காட்சியகப் படுத்தப் பட்டிருக்கும். தேவையுடையர்கள் கண்ணியாமான முறையில் நேரில் வந்து பார்த்து தேர்ந்தெடுத்து செல்லாம். v உங்களிடமுள்ள அதிகப்படியான, உபயோகப்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் கண்ணாடி ஃபிரேம்களை தேவையுடையர்களுக்கு பகிர்ந்து கொள்ள நாடினால் அவற்றை கொண்டு வந்து தரலாம். |
|||
|
|||
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |