டைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive...........பாகம் 2
by David Praveen
பாகம் 1
இத்தனைக்கும் Luis Alvarez-வும் Walter Alvarez-வும் ஏற்கனவே வழக்கில் இருந்த ஒரு கருத்திற்கு விண்கல் என்கிற மசாலை மட்டும்தான் தடவிக் கொடுத்தார்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்ப்பட்ட உயிரினங்களின் அழிவுகளுக்கு (mass extinction) பூமியின் செயல்பாடு காரணமாக இருக்க முடியாது நிச்சயம் விண்வெளிதான் இதற்கு காரணமாக இருக்க முடியும் என்கிற கருத்தை முதன் முதலில் கிளப்பிவிட்டவர் Otto Schindewolf.
இதில்தான் இரண்டு Alvarez-களும் விண்கல் என்கிற தங்களுடைய கை சரக்கையும் சேர்த்துக்கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டார்கள். பொதுவாக ஒன்றுக்கு இரண்டு முறை ஆராய்ச்சி செய்து பல அறிவியலாளர்களின் கருத்துக்களைக் கேட்டப் பிறகுதானே ஆராய்ச்சி முடிவுளை அறிவியலாளர்கள் வெளியிடுவார்கள் என்று அப்பாவியாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் எல்லா ஆராய்ச்சி முடிவுகளும் அப்படியானவைகள் கிடையாது. சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை பன்னாட்டு பெரு மூலதனங்கள் தங்கள் வீட்டு கல்யாணப் பத்திரிக்கையை காசுக் கொடுத்து தங்கள் விருப்பத்திற்கு அச்சடிப்பதைப்போல தங்களுக்கு லாபம் தரக் கூடிய வகையில் பொய்களை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக விலை கொடுத்து வாங்கி அச்சடிக்கின்றன.
அப்படியான ஒன்று Alvarez-களின் ஆராய்ச்சிக் கட்டுரை. இதில் அற்புதம் Alvarez-கள் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டுவிட்டு சாவகாசமாக paleontologist-களிடம் அது குறித்த ஆதாரங்களை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொண்டதுதான். Paleontologist ஆராய்ச்சியாளர்கள் இடையே இரண்டு தொழில் பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவு invertebrate என்று அழைக்கப்படும் முதுகெலும்பு இல்லாத உயிரினங்களின் புதைப்படிவங்களை ஆராய்ச்சி செய்யும் உதாரணமாக கடல் வாழ் உயிரினங்களில் சில மற்றும் பூச்சியினங்கள். மற்றொரு பிரிவு vertebrate என்று அழைக்கப்படும் முதுகெலும்பு உள்ள உயிரினங்களான மனிதர்கள் மற்றும் விலங்குகளின் எலும்பு புதைப்படிவங்களை ஆராய்ச்சி செய்யும்.
இந்த இரண்டுப் பிரிவுகளில் vertebrate புதைப்படிவங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள் பூமியில் நடைப்பெற்றதாக சொல்லப்படும் உயிரின அழிவுகள் (mass extinction) குறித்த கருத்தை பொதுவாக ஏற்றுக்கொள்வது கிடையாது. இவர்கள் டார்வீனின் பரிணமாக் கொள்கையை தூக்கிப்பிடிப்பவர்கள். இவர்களைப் போலவே Micropaleontologists மற்றும் Paleobotanists-களும் உயிரின அழிவுக் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள்.
Invertebrate புதைப் படிவங்கள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள் பூமியில் மிகப் பெரிதாக ஐந்து முறையும் (Ordovician, Devonian, Permian, Triassic மற்றும் Cretaceous இதை Big Five என்பார்கள்) சிறிது சிறிதாக பல முறையும் உயிரினங்கள் அழிந்திருக்கின்றன (mass extinction) என்று நம்புபவர்கள். இவர்கள் டார்வீனின் பரிணாமக் கொள்கையை பொதுவாக ஏற்றுக்கொள்வது கிடையாது.
பூமியில் இதற்கு முன் பல முறை உயிரினங்கள் முழுதுமாக அழிந்திருக்கின்றன என்கிற கருத்தை முதன் முதலில் கிளப்பிவிட்டவர் Baron Georges Cuvier. இவர் இப்படியான ஒரு முடிவிற்கு வர காரணமாக அமைந்தவைகள் பாறைகளில் புதைப்படிவங்களாக (fossils) இவர் கண்டு எடுத்த மிகப் பெரிய பெரிய எலும்புத் துண்டுகள். இத்தகைய மிகப் பெரிய எலும்புத் துண்டுகள் இப்பொழுது பூமியில் இருக்கின்ற எந்த உயிரினத்திற்கும் பொருந்திப் போகவில்லை என்பதால் இவைகள் பூமியில் முன்பொரு காலத்தில் உயிருடன் இருந்து பின்னால் அழிந்திருக்கவேண்டும் என்கிற mass extinction கொள்கையை இவர் முன்வைத்தார்.
பூமி அறிவியலைப் (Earth Science) பொறுத்த வரையில் பெரும்பான்மையான ஆராய்ச்சிகள் கருத்துக்களையே (hypothesis) அடிப்படையாக கொண்டவைகள். அதாவது இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் இரண்டிற்கும் நடுவிலும் கூட இருக்கலாம் அல்லது எப்படியும் இல்லாமலும் போகலாம் என்கிற சாத்தியப்பாடுகளே முன் வைக்கப்படும் கருத்துக்களுக்கு அடிப்படையானவைகள். அப்படியானவைகளில் ஒன்று டார்வினின் பரிணாமக் கொள்கையும். சாத்தியப்பாடுகள்தான் அந்த கொள்கையின் அடிப்படையேத் தவிர ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்ட ஒரு விசயமல்ல பரிணமாக் கொள்கை. இது Paleontology போன்ற மற்றத் துறை ஆராய்ச்சியாளர்களுக்கு நன்கு தெரியும். தெரிந்தும் ஒரு பிரையோசனமும் கிடையாது காரணம் அவர்களின் குரலையும் விளக்கத்தையும் கேட்க ஆட்கள் கிடையாது.
வெறும் சர்ச்சைகளுக்காகவும் சில அரசியல் நகர்வுகளுக்காவும் எப்படி அறிவியல் ஆராய்ச்சிகள் பெரு மூலதனங்களாலும் ஆளும் வர்கங்களாலும் தயாரிக்கப்படுகின்றன (ஆம் நண்பர்களே தயாரிக்கத்தான் படுகின்றன) என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் டார்வினின் பரிணாமக் கொள்கை. எத்தகைய புற ஆதாரமும் இல்லாத டார்வினின் கொள்கையை வெற்றுக் கூச்சல்கள் அதிகமாக தலையில் தூக்கிவைத்து ஊர்வலம் வருவதால் அந்த கொள்கையை குறித்து Paleontology போன்ற அறிவியலின் மற்றத் துறைகளே முன் வைக்கும் உண்மைகளை கேட்க ஆட்கள் இல்லை. அறிவியலின் ஒரு துறையே அதன் மற்றொருத் துறையை பேசவிடாமல் செய்யும் கொடுமை. நம் இடது கை நம்முடைய வலது கையை செயல்படவிடாமல் தடுத்தால் அது ஆரோக்கியத்தின் அறிகுறியாக இருக்க முடியுமா? ஆனால் அறிவியல் இப்படித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
சரி நாம் உயிரினங்களின் அழிப்புக் குறித்த விசயத்திற்கு திருப்புவோம்.
அடுத்த தொடரிலும்.....