டைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive.........பாகம் 5
by David Praveen
பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4
விண்கல் மோதல்தான் டைனோசர் போன்ற மிருகங்களின் அழிவிற்கு காரணம் என்று NASA-வின் கதையிலாக்கா அறிவியலாளர்கள் கதை அளந்துக்கொண்டிருந்தாலும் கள நிலவரம் என்பது அதற்கு முற்றிலும் எதிர்மறையானது. அதாவது விண்கல் மோதல்கள் டைனோசர் போன்ற மிகப் பெரிய உயிரினங்கள் பூமியில் தோன்றுவதற்கு வசதி செய்திருக்கிறது. விண்கல் மோதல்களால் ஒருபோதும் பூமியின் உயிரினங்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முடியாது. மோதலின் தாக்கம் அதிகமிருக்கும் என்றாலும் அனைத்து உயிரினங்களும் அழிவதற்கான சாத்தியக் கூறுகள் விண்கல் மோதல் சம்பவங்களால் நடைப்பெற வாய்ப்புகளே இல்லை.
இதற்கு புதைப்படிவங்களே ஆதாரங்கள். கிடைத்துவரும் பாறைப் புதைப்படிவங்கள் விண்கல் மோதல் சம்பவங்களுக்கும் உயிரின அழிப்புகளுக்கும் தொடர்பில்லை என்றே நிருபித்துவருகின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மேல் பல விண்கல் மோதியிருக்கின்றன அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன ஆனால் அவைகள் டைனோசர் போன்ற உயிரினங்களை அழிக்கவில்லை மாறாக டைனோசர் போன்ற உருவத்தில் மிகப் பெரிய மிருகயினங்கள் பூமியில் தோன்றுவதற்கு ஒரு ஊக்கியாக (catalyst) செயல்பட்டிருக்கின்றன.
அப்படியானால் டைனோசர்களை இத்தகைய விண்கல் மோதல்களுக்கு பிறகு உண்டான பூமியின் காலநிலை மாற்றங்கள்தான் உண்டாக்கினவா என்றால் டைனோசர் போன்ற உருவில் பெரிய மிருகங்களைதான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் டைனோசர்களை அல்ல. மேலும் ஒவ்வொரு பெரு உயிரின அழிப்புகளும் (mass extinction) கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியே உச்சநிலைக்கு போயிருக்கின்றன. விண்கல் மோதல் கொள்கை சொல்வதைப்போல ஒரு சில நூறு ஆண்டுகளில் நடைப்பெற்ற காரியங்கள் அல்ல இவைகள்.
இதுவரை பூமி கண்ட மிகப் பெரிய உயிரின அழிப்பாக கருதப்படும் Permian-Triassic extinction பல முறை சங்கிலித் தொடர்போல நிகழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துவருகின்றன. அதாவது இந்த அழிப்பு காலகட்டத்தில் பூமி தன்னை தகவமைத்துகொண்டு உயிரினங்களோடு எழுந்து நிற்க அதன் முகத்தில் உயிரின அழிப்பு அடிவிழுந்திருக்கிறது அதனால் உயிரினங்கள் அழிந்திருக்கிறது. இதை தாக்குப்பிடித்து மீண்டும் பூமி உயிரினங்களோடு எழுந்து நிற்க தலையில் மீண்டும் ஒரு அழிப்பு அடி. பூமி எழுந்து நிற்க அதன் தலையில் அடி என்று Permian-Triassic extinction காலம் முழுவதும் தொடர்ச்சியாக பல முறை பல கோடி ஆண்டுகளுக்கு நடந்திருக்கிறது.
இதற்கு இறுதியாக ஒரு பெரும் அடி விழுந்திருக்கிறது. அதில்தான் பூமியின் ஒட்டுமொத்த உயிரினங்களும் துடைத்து அழிக்கப்பட்டிருக்கின்றன. பூமி செத்துப்போயிருக்கிறது. இப்படி பூமி பல கோடி ஆண்டுகளுக்கு செத்த நிலையிலேயே இருந்திருக்கிறது. பிறகு மீண்டும் காலநிலைகள் மாறி உயிரினங்கள் தோன்றியிருக்கின்றன என்று புதைப்படிவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்த நிலை Permian-Triassic extinction-க்கு மட்டுமில்லை மற்ற பெரிய mass extinction-களுக்கும் பொருந்தும் என்று தற்போது கிடைத்துவரும் ஆதாரங்கள் தெளிவுப்படுத்துகின்றன.
(டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை எப்படி அடிவாங்குகிறது என்பதை நீங்களே இங்குப் பார்க்கலாம். பரிணாமக் கொள்கை பூமியில் உயிர்களின் தோற்றம் ஒரு தடையற்ற படி நிலை வளர்ச்சியின் காரணம் என்கிறது. இப்படி ஐந்து பெரு அழிப்பு காலங்களிலும் பல முறை செத்து செத்து பிழைத்த பூமியில் எப்படி டார்வினின் பரிணாமக் கொள்கை சாத்தியப்படும் என்பதை படிப்பவர்களின் பார்வைக்கே விட்டுவிடலாம்)
இந்த ஆதாரங்களும் கடலில் வாழும் உயிரினங்களான ammonite cephalopod போன்வற்றின் புதைப்படிவங்களிலிருந்தே பெரிதும் பெறப்படுகிறது. இத்தகைய ஆதாரங்களை இதுவரை பூமியில் வாழுந்து அழிந்த மிருகங்களின் புதைப்படிவங்கள் தரவில்லை. அப்படியானால் டைனோசர்களின் எலும்புகள் இதற்கு உதவவில்லையா என்று நீங்கள் கேட்கலாம் ஏன் நானும் கூட கேட்டேன் ஆனால் இன்னுமும் புதைப்படிவ ஆராய்ச்சியாளர்கள் அதற்கு வாயேத் திறக்கவில்லை. டைனோசர்களின் எலும்புகளை கண்டுபிடித்து டைனோசர்களை மீள் உருவாக்கம் செய்பவர்கள் அந்த எலும்புகளின் C-12 மற்றும் C-13 மூலக் கூறுகளை கொண்டு அவைகள் எப்படி அழிந்தன என்கிறத் தகவலை சொல்லவில்லை. அப்படியானால் டைனோசர் என்கிற மிருகமே கிடையாதா என்று நீங்கள் கேட்டால் இந்த கட்டுரைத் தொடரின் முடிவுவரைக் காத்திருங்கள் என்று நான் சொல்வேன்.
உயிரின அழிப்புகளுக்கு விண்கல் மோதல் காரணமில்லை என்பதைப் பார்த்துவிட்டோம் அப்படியானால் இவைகளுக்கு காரணமென்ன? Global Warming. ஆம் நண்பர்களே நாம் இன்றைக்கு அரசல் புரசலாக கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறோம் அல்லவா Global Warming என்று அதேதான். ஆனால் இன்றைக்கு நாம் கேள்விப்படும் Global Warming என்பது மனிதன் பூமிக்கு வைத்த சூனியம். பெரும் உயிரின அழிப்புகளுக்கு காரணமான Global Warming குறித்து இனிப் பார்ப்போம்.
அடுத்த தொடரிலும்.......