டைனோசர்களை காணவில்லை – Wanted Dead or Alive...........பாகம் 4
by David Praveen
பாகம் 1, பாகம் 2, பாகம் 3
Carbon-14 குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Carbon Dating தொழில் நுட்பத்திற்கு அடிப்படை இந்த மூலக் கூரு. பூமியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் (மனிதன், விலங்கு, பூச்சி மற்றும் தாவரம்) வயதையும் கண்டுபிடிக்க பெரிதும் உதவுவது இந்த கார்பன் மூலக்கூறு. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டு எடுக்கும் வரலாற்று பொருட்களின் வயதை பெரும்பாலும் இந்த கார்பன் டேடிங் தொழில் நுட்பம் கொண்டுதான் கணிக்கிறார்கள். இந்த C-14 வேகமாக காற்றில் கறையக் கூடியது. ஒரு பொருளில் இருக்கும் C-14 அளவைக் (isotope) கொண்டு அது எவ்வளவு ஆண்டுகள் காற்றில் கறைந்திருக்கிறது என்று கணக்கிட்டு அந்த பொருள் எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் தோன்றியது என்பதை கண்டுபிடிப்பார்கள்.
ஆனால் மேலும் இரண்டு கார்பன் மூலக் கூறுகள் இருக்கின்றன. அந்த இரண்டும் ஒரு உயிரினத்தின் வயதைக் கண்டுபிடிக்க உதவாது ஆனால் அந்த உயிரினம் பூமியில் உயிருடன் இருந்தபோது சுற்றுப் புறசூழல் (environment) எப்படி இருந்திருக்கும் என்பதை கண்ணாடிப்போல காட்டிவிடும். உதாரணமாக வெப்பநிலை, வளி மண்டலத்தில் இருந்த கார்பன் அளவு ஆகியவைகளை காட்டும். அந்த இரண்டு கார்பன் மூலக் கூறுகள் C-12 மற்றும் C-13. புதைப்படிவ ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த ஆராய்ச்சிகளுக்கும் நம்பியிருப்பது இந்த இரண்டு கார்பன் மூலக் கூறுகளைத்தான்.
ஒருவேளை அந்த குறிப்பிட்ட உயிரினம் தானாக சாகாமல் பூமியில் ஏற்ப்பட்ட அழிப்பால் (mass extinction) செத்திருந்தால் அதையும் இந்த இரண்டு கார்பன் மூலக் கூறுகளைக் கொண்டு அறிந்துக்கொள்ள முடியும். அது எப்படி என்று பார்ப்போம். Paleontology பூமியில் நிகழ்ந்த உயிரின அழிப்புகளுக்கு காரணமான இரண்டு வகையான பொதுவான காரணங்களையும் மீண்டும் பார்ப்போம். முதலாவது பூமியின் காலநிலையில் (climate) மாறுதல் ஏற்பட்டு அதன் மூலம் உணவுச் சங்கிலி பாதிக்கப்பட்டு உயிர்கள் அழிந்திருக்கவேண்டும் என்பது. மற்றதுதான் விண்கல் பூமியில் மோதும் சமாச்சாரம். விண்கல் பூமியில் மோதியவுடன் சாம்பல் பூகை மூட்டம் வளி மண்டலத்திற்கு பரவி சூரிய வெளிச்சத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து பூமியின் வெப்ப நிலையை குறைத்து தாவரங்களை வளரவிடாமல் செய்து அதன் மூலம் உணவுச் சங்கிலியை அறுத்து பூமியின் உயிரனங்களை அழித்தது என்பது.
விண்கல் மோதல் கொள்கையின் படி விண்கல் மோதி வெடித்தவுடன் சாம்பல் பூகை மேகம் பூமியெங்கும் பரவியிருக்கிறது. பூமியின் வளிமண்டலத்தை மறைத்த சாம்பல் பூகை மூட்டத்துடன் sulfur-வும் கலந்திருக்கிறது. இந்த கலப்பு H2SO4 என்கிற sulfuric acid-யை உற்பத்தி செய்திருக்கிறது. பின்னர் இந்த acid பூமி முழுவதும் பெரு மழையாக பொழிந்து மழைக் காடுகளையும் உயிரினங்களையும் அழித்திருக்கிறது. மேலும் விண்கல் மோதலின் தாக்கமானது பூமியெங்கும் இருந்த எரிமலைகளையும் தூண்டிவிட்டு பூமி முழுவதும் எரிமலைகளை வெடிக்க வைத்திருக்கிறது. எரிமலை வெடிப்புகளிலிருந்து கிளம்பிய சாம்பல் புகை மூட்டங்களும் acid மழையை மேலும் மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே டைனோசர் பூமியில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டன என்பது விண்கல் மோதல் கொள்கையின் அடிப்படை. இந்த கொள்கை K-T extinction-க்கு மட்டுமே பொருந்தும் என்று சொன்னவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மற்ற extinction-களுக்கும் பொருந்தும் என்கிறார்கள்.
விண்கல் மோதல் கொள்கையை விளக்குவதை படிக்கும்போதே உங்களுக்கு ஒரு கிக்கு ஏற்படுகிறதுதானே! விண்கல் மோதல், அதை தொடர்ந்து எரிமலை வெடிப்புகள், உயிரினங்கள் அனைத்தும் அலறிப் புடைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பூமியெங்கும் தலைதெறிக்க ஓடுவது, பூமி முழுவதும் acid மழை, அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என்று பார்க்கத் தூண்டும் ஒரு பக்கா ஆலியுட் கிராபிக்ஸ் திரைப்படத்திற்கான கதை. இந்த கதைக்கு புதைப்படிவ ஆராய்ச்சியாளர்களில் ஒரு கூட்டம் NASA-வின் சம்பூரன ஆசீர்வாதத்துடன் பக்காவாக திரைக்கதை எழுதி பொது சன புத்தியில் பரப்பியதுதான் mass extinction-னிற்கான விண்கல் மோதல் கொள்கை.
NASA-வை நீங்கள் உலகின் முக்கியமான ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக கருதிக்கொண்டிருப்பீர்களானால் வாழ்த்துக்கள், நீங்கள் பத்தோடு ஒன்று பதினோராவது வாத்து மடையன். NASA அறிவியல் ஆராய்ச்சிகளை செய்கிறதோ இல்லை பொய் கதைகளை பொது சனப் புத்தியில் பரப்புவதை கனக்கச்சிதமாக செய்யும். பொய் கதைகளை தயாரிப்பதற்கே ஒரு கதை டிபார்ட்மென்ட் வைத்திருக்கிறது. பணத்திற்கு சோரம் போகும் அறிவியலாளர்களுக்கு அந்த கதை டிபார்ட்மெண்டில் எப்பொழுதுமே இராச மரியாதைதான். நம்மூர் மார்டன் தியேட்டர்ஸ், ஜெமினி ஸ்டுடியோஸ் போன்ற சினிமாத் தயாரிப்பு நிறுவனங்களில் சினிமா கதை இலாக்கா என்று ஒன்று இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள் (கண்ணதாசன் போன்றவர்கள் அத்தகைய கதை இலாக்காவில் வேலை பார்த்துதான் சினிமா பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள்) அதேப் போன்ற கதை இலாக்கா NASA-விலும் உண்டு.
NASA-வின் கைப்பாவைதான் உலகின் தலைச் சிறந்த அறிவியல் பத்திரிக்கையான Science. இந்த பத்திரிக்கையில் ஒரு அறிவியல் கட்டுரை வருகிறது என்றால் அது அறிவியலின் கல்வெட்டுப்போன்றது. நாலனா காலனா அறிவியல் ஆசாமிகள் எல்லாம் இந்த பத்திரிக்கையில் கட்டுரை எழுதிவிட முடியாது. முதலில் இந்த பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகள் அனைத்தும் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள். அப்படியொரு பெயரும் புகழும் மரியாதையும் இந்த பத்திரிக்கைக்கு உண்டு. இந்த பத்திரிக்கையில் உங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வெளியிடப்படுகிறது என்றால் அந்த வருட நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்படும் அறிவியல் அறிஞர்களில் உங்களின் பெயரும் சேர்ந்துக்கொள்ள வாய்ப்புகள் பிரகாசம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட பத்திரிக்கை NASA-வின் பண உதவியுடன் பொது சன புத்திக்கு தேவையான சுவாரசிய கதைகளை ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதும் ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளையும் வெளியிடும். அப்படியானவைகள்தான் விண்கல் மோதல் mass extinction கொள்கை.
அடுத்த தொடரிலும்......
பாகம் 5, இறுதி
https://www.facebook.com/photo.php?fbid=1536963556550257&set=a.1398919533687994.1073741828.100007098817905&type=1 |