mixing lexapro and weed mixing weed and adderall online
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் =============================
தொடர் 3: திரைமறைவில் ஜின்கள்
Episode 32: கரீன் (கூட்டாளி) – தொடர்ச்சி - 2:
Episode 33: கரீன் (கூட்டாளி) – தொடர்ச்சி - 3: ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(சென்ற எபிசோடில் விட்ட இடத்திலிருந்து ஆதாரங்கள் தொடர்கின்றன..) ஆதாரம் 3: நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ்வே உதவியாளன். (அவன்) இருள்களிலிருந்து அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறான். (ஏகஇறைவனை) மறுப்போருக்குத் தீய சக்திகளே (ஷைத்தானிய ஜின்களே) உதவியாளர்கள். (இந்த ஷைத்தான்கள்) வெளிச்சத்திலிருந்து அவர்களை இருள்களுக்குக் கொண்டு செல்கின்றனர். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர். (அல்குர்ஆன் 2:257) இந்த வசனம் என்ன செய்தியைச் சொல்ல வருகிறது? நாம் ஏற்கனவே முன்வைத்த விளக்கங்களின் இன்னொரு பகுதியை இவ்வசனம் ஐயத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்துகிறது. அதாவது, அல்லாஹ்வை மட்டும் சார்ந்திருக்கும் முஃமின்களுக்குப் பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் இருந்து, அவர்களை அல்லாஹ் எவ்வாறு பொறுப்பேற்றுக் கொள்கிறானோ, அதே போல், இலுமினாட்டிகளைப் போன்ற ஷைத்தானின் ஊழியர்களுக்கும், காஃபிர்களுக்கும், கெட்டவர்களுக்கும் பாதுகாவலர்களாகவும், உதவியாளர்களாகவும் இருந்து, அவர்களை இப்லீஸும், அவனைச் சர்ந்த ஷைத்தானிய ஜின்களும் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்; மேலும், அவர்களுக்கு எல்லா விதமான வசதி வாய்ப்புக்களையும் இவ்வுலகில் செய்து கொடுக்கிறார்கள் என்பது இவ்வசனத்தில் தெளிவாகக் கூறப்படுகிறது. (குறிப்பு: இப்லீஸின் இந்தப் “பொறுப்பேற்றுக் கொள்ளுதல்” என்பது அல்லாஹ்வே அவனுக்கு வழங்கிய அதிகாரங்களுள் ஒன்று. இதைத் தவறான அடிப்படையில், “அல்லாஹ்வுக்கு நிகராக இப்லீஸ் ஆகி விட்டானா?” என்பது போன்ற கருத்தில் அரைகுறையாகப் புரிந்து விடக் கூடாது) எனவே, இவ்வசனத்தின் மூலமும், ஏற்கனவே நாம் முன்வைத்த விளக்கங்களின் இன்னொரு பகுதியும் இங்கு நிரூபனமாகி விட்டது. இனி எஞ்சிய பகுதிகள் குறித்த ஆதாரத்தையும் பார்ப்போம். ஆதாரம் 4: எவனொருவன் அர்ரஹ்மானின் நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானைச் சாட்டி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய தோழனாகி விடுகிறான். (அல்குர்ஆன் 43:36) இந்த வசனம் சொல்லும் செய்தி தான் என்ன? நாம் ஏற்கனவே முன்வைத்த விளக்கங்களின் எஞ்சிய பகுதியை இவ்வசனம் இன்னும் ஒருபடி ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறது. அதாவது, அல்லாஹ்வுக்கு மாறு செய்து யாரெல்லாம், அவனது கருணையிலிருந்தும், உதவிகளிலிருந்தும் தூரமாகி விடுகிறார்களோ, அவர்களுக்கு வானவர்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்புக்களை நீக்கி விடுவதோடு மட்டும் அல்லாஹ் விட்டு விடுவதில்லை. மாறாக, இவ்வாறானவர்களை இப்லீஸைச் சார்ந்த ஷைத்தானிய ஜின்களின் கைகளில் அல்லாஹ்வே ஒப்படைத்து விடுகிறான். அதாவது, “இவனை நான் கைகழுவி விட்டேன். இனி இவன் எனக்கு வேண்டாம். இந்தா, இவனை நீயே வைத்துக் கொள்; இவனை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்..!” என்பது போன்ற அடிப்படையில் இவ்வாறான மனிதர்களை அல்லாஹ் ஷைத்தான்களிடமே ஒப்படைத்து விடுகிறான் என்பதை இவ்வசனம் தெளிவாகக் கூறுகிறது. எனவே, இவ்வசனத்தின் மூலமும், ஏற்கனவே நாம் முன்வைத்த விளக்கங்களின் எஞ்சிய பகுதியும் இங்கு மறுக்க முடியாதவாறு நிரூபனமாகி விட்டது. இதுவரை நாம், இப்லீஸின் திட்டங்கள் குறித்து முன்வைத்த விளக்கங்களின் ஒவ்வொரு பகுதிகளையும் தனித்தனியாக நிரூபிக்கும் ஆதாரங்களைப் பார்த்தோம். இனி, இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, நமது மொத்த விளக்கத்தின் தொகுப்பையும் ஒரே மூச்சில் நிரூபிக்கும் ஓர் ஆதாரத்தையும் பார்க்கலாம்: ஆதாரம் 5: "என்னை விட கண்ணியப் படுத்திய இவரை(ஆதமை)ப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் சொடுத்தால், நான் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (ஏனையோரையெல்லாம்) நிச்சயமாக வேரறுப்பேன்" என்று (இப்லீஸ்) கூறினான். "நீ போய் விடு அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிரப்பமானதாக இருக்கும். "இன்னும் அவர்களிலிருந்து நீ எவர் (மீது) சக்தி பெற்றிருக்கிறாயோ, அவர்களை உன் குரல் மூலம் தூண்டி (முடுக்கி) விட்டுக் கொள்; உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்; அவர்களது செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாளியாக (பங்காளியாக) இருந்து கொள்; அவர்களுக்கு வாக்குறுதிகளையும் அளித்துக் கொள்!" (என்றும் அல்லாஹ் கூறினான்). மேலும், ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றத்தையே அன்றி வேறில்லை. "நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை" (என்றும் அல்லாஹ் கூறினான்). (நபியே! அந்த என் நல்லடியார்களைக்) பொறுப்பேற்றுக் காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன். (அல்குர்ஆன் 17 : 62-65) இந்த வசனத்தொடர் ஒன்று மட்டுமே நமது எல்லா விளக்கங்களின் தொகுப்பையும் ஒரேயடியாக நிரூபித்து விடுகிறது. அது எப்படியென்பதை இவ்வசனங்கள் சொல்லும் ஒவ்வொரு செய்தியையும் சுருக்கமாக சுட்டிக் காட்டுவதன் மூலம் பின்வரும் ஒழுங்கில் புரிந்து கொள்ளலாம்: செய்தி 1: கியாம நாள் வரை ஆதமின் சந்ததிகளை வேரறுப்பேன் என்று இப்லீஸ் கூறினான். இதன் விளக்கம்: இப்லீஸ் என்பவனின் அடிப்படை நோக்கம், உள்ளத்தில் ஆசைகளைத் தூண்டுவதன் மூலம் மனிதர்களைப் பாவிகளாக்கி வழிகெடுப்பது மட்டுமல்ல. மாறாக, ஈருலகிலும் மனிதன் நிம்மதியாக வாழ முடியாதவாறு, அவனை எல்லாத் துறைகளிலும் சின்னாபின்னமாக்குவதும், சீரழிப்பதும் தான் என்பது இங்கு உறுதி செய்யப் படுகிறது. வேரறுத்தல் என்பதன் பொருள் இது தான். செய்தி 2: "அவர்களில் (மனிதர்களில்) நீ எவர் (மீது) சக்தி பெற்றிருக்கிறாயோ, அவர்களை......” இதன் விளக்கம்: எல்லா மனிதர்கள் மீதும் இப்லீஸுக்கு அதிகாரம் இல்லையென்பதும், மனிதர்களில் ஒரு சாரார் மீது மட்டுமே அவனுக்கு நேரடி ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் இருக்கிறது என்பதுவும் இங்கு உறுதிப் படுத்தப் படுகிறது. அதாவது, வானவர்களால் பாதுகாக்கப் பட்ட சாரார் (முஃமின்கள்) மீது இப்லீஸுக்கு நேரடி அதிகாரம் இல்லையென்பதும், வானவர்களின் பாதுகாப்பை இழந்த கெட்டவர்கள் மீது மட்டுமே அவனுக்கு நேரடி ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் உண்டு என்பதும் இங்கு நிரூபனமாகிறது. செய்தி 3: “அவர்களை (உன்னால் ஆட்டுவிக்கப் படும் மனிதர்களை) உனது குரல் மூலம் தூண்டி (முடுக்கி) விட்டுக் கொள்;” இதன் விளக்கம்: மனிதர்களுள், இப்லீஸின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்களை (உதாரணமாக இலுமினாட்டிகளைக் குறிப்பிடலாம்), தனது திட்டங்களுக்கு அமைய கட்டளைகள் மூலம் வேலை வாங்கும் அதிகாரம் இப்லீஸுக்கும், அவனைச் சார்ந்த ஜின்களுக்கும் அல்லாஹ்வால் வழங்கப் பட்டிருக்கிறது என்பதைத் தான் இந்த வாசகம் குறிக்கிறது. அதாவது, “உனது குரல் மூலம்” எனும் வாசகம், இப்லீஸ் பிறப்பிக்கும் கட்டளைகளைக் குறிக்கிறது. அதே போல், “அவர்களை தூண்டி விட்டுக் கொள்” எனும் வாசகமானது, இவ்வாறான இப்லீஸின் கட்டளைகளை அமுல்படுத்தும் விதமாக அவனது சேவகர்களாகப் பணிபுரியும் மனித ஷைத்தான்கள் (இலுமினாட்டிகள்) உலகின் நாலாபுறங்களுக்கும் முடுக்கி விடப்படும் செயலைக் குறிக்கிறது. செய்தி 4: “உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு (மனிதர்களுக்கு) எதிராக ஏவிக் கொள்; அவர்களது செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாளியாக (பங்காளியாக) இருந்து கொள்; அவர்களுக்கு வாக்குறுதிகளையும் அளித்துக் கொள்!" இதன் விளக்கம்: இப்லீஸுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் அதிகாரங்கள் என்பது, உள்ளத்தில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துதல், ஆசைகளைத் தூண்டிப் பாவம் செய்ய வைத்தல், வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாமல் கவனத்தைத் திசைதிருப்புதல் போன்ற உளவியல் சார்ந்த அதிகாரங்கள் மட்டும் அல்ல; இதையும் தாண்டியது என்பது இந்த வாசகத்தின் மூலம் சந்தேகத்துக்கே இடமில்லாதவாறு நிரூபனமாகிறது. அதாவது ஷைத்தானிய ஜின்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் ஆற்றல் / அதிகாரங்கள் குறித்து அனேகமான சகோதரர்கள் (பல உலமாக்கள் உட்பட) கருத்துத் தெரிவிக்கும் போது, “மனித உள்ளங்களுக்குள் ஆசைகள், ஊசலாட்டங்கள் போன்றவற்றைத் தோற்றுவிப்பதன் மூலம் வழிகெடுக்கும் ஆற்றல் மட்டுமே ஷைத்தான்களுக்கு இருக்கின்றன. இதைத் தாண்டி, உடலில் கூடுதல், வீடுகளுக்குள் நுழைந்து நிம்மதியைக் கெடுத்தல், சூனியங்களைப் பலிக்கச் செய்வதன் மூலம் கை கால்களை முடமாக்குதல் போன்ற எந்தவிதமான பௌதீக ரீதியான ஆற்றல்களும் ஷைத்தான்களுக்கு இல்லை” என்று வாதிடுவதுண்டு. இது முழுக்க முழுக்கத் தவறான ஒரு வாதம் என்பதையும், ஜின்கள் குறித்து ஆழமாக ஆய்வு செய்யாமல், அவசரத்தில் நுனிப்புல் மேய்வதன் விளைவாக வெளிப்படும் அரைகுறை வாதம் என்பதையும் தான் மேற்கண்ட குர்ஆன் வாசகம் ஆணித்தரமாக நிரூபிக்கிறது. உள்ளத்தில் ஆசைகளையும், ஊசலாட்டங்களையும் ஏற்படுத்தி, அதன் மூலம் மனிதனை வழிகெடுப்பது மட்டும் தான் இப்லீஸின் பணி என்றால், எதற்காக அவனுக்குக் குதிரைப் படைகளையும், காலாட் படைகளையும் அல்லாஹ் வழங்க வேண்டும்? எதற்காக இப்லீஸுக்கு ஒரு நாட்டையே ஆக்கிரமிக்கும் அளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இராணுவப் படைப்பிரிவுகள் மீது அல்லாஹ் அதிகாரத்தை வழங்க வேண்டும்? யார் இந்தக் குதிரைப் படையினர்? யார் இந்தக் காலாட் படைப் பிரிவினர்? இந்தப் படைப் பிரிவுகளெல்லாம் எங்கிருக்கின்றன? எவ்வாறு இந்தப் படைப்பிரிவினர் மனித இனத்துக்கு எதிராக ஏவி விடப் படுகின்றன? இந்தக் கேள்விகளைச் சரியாக சிந்தித்தாலே போதும்; பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். இலுமினாட்டிகள் யார் என்பது பற்றிய பல மர்மங்களும், பறக்கும் தட்டுக்களில் வரக் கூடிய ஜின்களின் படைப்பிரிவுகள் பற்றிய பல மர்மங்களும் வெளிச்சத்துக்கு வரும். இத்தோடு மட்டும் அல்லாஹ் நிறுத்தி விடவில்லை. இப்லீஸுக்கு வழங்கப் பட்டிருக்கும் மேலும் பல அதிகாரங்களையும் கூட தொடர்ந்து பட்டியலிடுகிறான். மனிதர்களது பொருளாதாரங்கள், குடும்பம், குழந்தை குட்டிகள் போன்ற வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் பங்குதாரர்களாக (Partners) இருந்து கொள்ளும் அதிகாரங்களைக் கூட இப்லீஸுக்கும், அவனைச் சார்ந்த ஷைத்தானிய ஜின்களுக்கும் அல்லாஹ் வழங்கியிருப்பதாகவும் இங்கு கூறுகிறான். மேலும், மனிதர்களுக்குப் பலவிதமான வாக்குறுதிகளை அளித்து, அவற்றின் மூலமும் அவர்களை நம்ப வைத்து, அழிவின் பால் இட்டுச் செல்லும் ஆற்றல், மற்றும் அதிகாரங்கள் கூட இப்லீஸுக்கு வழங்கப் பட்டிருப்பதாகவும் இவ்வாசகம் கூறுகிறது. மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் அதிகாரத்தை இப்லீஸுக்கு வழங்கியிருப்பதாக அல்லாஹ்வே இங்கு பச்சையாகச் சொல்லிக் காட்டிய பிறகும், அதையெல்லாம் கண்டும் காணாதது போல், “ஷைத்தானுக்கு எந்தவிதமான பௌதீக / லௌகீக ரீதியிலான ஆற்றல்களும் இல்லை” என்று யாராவது கூறினால், அவ்வாறு கூறுபவர் முறையாக மார்க்க ஆதாரங்களை ஆய்வு செய்யவில்லை என்று தான் பொருள். இவ்வாறானவர்கள் தமது நிலைபாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். செய்தி 5: "நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை" (என்றும் அல்லாஹ் கூறினான்). (நபியே! அந்த என் நல்லடியார்களைக்) பொறுப்பேற்றுக் காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன். இதன் விளக்கம்: மேலே கூறப்பட்ட பிரகாரம், மனிதர்களது வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் புகுந்து விளையாடும் அளவுக்கு ஆற்றல்களும், அதிகாரமும் வழங்கப் பட்டவனாக இப்லீஸ் இருந்தாலும், இந்த அதிகாரங்களையெல்லாம் தான் விரும்பிய மனிதர்களிடமெல்லாம் இப்லீஸ் இஷ்டத்துக்குப் பிரயோகிக்க முடியாது என்பதையும் அல்லாஹ் இங்கு இறுதியில் நினைவு படுத்துகிறான். அதாவது, நாம் ஏற்கனவே முன்வைத்த விளக்கங்களில் கூறப்பட்டது போல், இவ்வாறான பௌதீக / லௌகீக ரீதியிலான அதிகாரங்களெல்லாம், அல்லாஹ்வின் பொறுப்பிலிருந்தும், பாதுகாப்பிலிருந்தும் தூரமாக்கப்பட்ட காஃபிர்கள், முஷ்ரிக்குகள், கெட்டவர்கள் போன்றோரிடம் மட்டுமே செல்லுபடியாகும். ஏனெனில், அவர்களைச் சுற்றி எந்த விதமான பாதுகாப்பும் இருக்காது. ஆனால், அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய முஃமின்களிடம் அல்லாஹ் நாடாத வரை இந்த அதிகாரங்கள் எதுவும் செல்லுபடியாகாது. ஏனெனில், நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அல்லாஹ்வின் அடைக்கலத்தைப் பெற்ற முஃமின்கள், இவ்வாறான ஆதிக்கங்களிலிருந்து வானவர்கள் மூலம் பிரத்தியேகமாகப் பாதுகாக்கப் படுகிறார்கள். இதனால் தான் இப்லீஸின் பௌதீக ரீதியான ஆட்டங்கள் எதுவும் முஃமின்களிடம் பலிப்பதில்லை. இது தான் இந்த வாசகங்கள் மூலம் உணர்த்தப்படும் பேருண்மை. ஏற்கனவே நாம் முன்வைத்த மொத்த விளக்கங்களின் தொகுப்பையும் இந்த ஒரு வசனத் தொடரிலேயே அல்லாஹ் ரத்திணச் சுருக்கமாகக் கூறியிருக்கிறான் என்பதை இப்போது நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டோம். இதன் அடிப்படையில், ஒவ்வொரு மனிதனோடும் மரணம் வரை கூடவே இருக்கும் “கரீன்” எனப்படும் ஷைத்தானிய ஜின்னுக்கு இருக்கும் முக்கியத்துவம் எத்தகையது என்பதை இப்போது வாசகர்கள் புரிந்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அதாவது, இதை இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதமாக ஓர் உருவகக் கதை மூலம் பின்வருமாறு கூறலாம்: இப்லீஸும், அவனைச் சார்ந்த ஷைத்தானிய ஜின்களும் நமது பகிரங்க எதிரிகள். நம்மை நேரடியாகத் தாக்குவதற்காகவோ, அல்லது நம்மைக் கைதிகளைப் போல் கைப்பற்றுவதற்காகவோ இவர்கள் படையெடுத்து வருவார்கள். ஆனால், இவர்கள் நம்மை நெருங்கி வந்து தாக்க முடியாதவாறு நமது காவல் அரண்களாக நம்மைச் சுற்றி வானவர்கள் நின்று கொண்டிருப்பார்கள். வானவர்கள் எனும் இந்தக் காவல் அரண்கள் உறுதியாக இருக்கும் வரை இவர்களால் நம்மை நெருங்கக் கூட முடியாது. எனவே, இந்த எதிரிகள் பொறுமையாக வெளியில் காத்திருப்பார்கள். அதே நேரம், இவர்களது படையணியின் ஒற்றர் பிரிவைச் சேர்ந்த “கரீன்”களிடம் படைத் தளபதி இப்லீஸ் முதல் கட்டப் பணியை ஒப்படைப்பான். அது என்ன முதல் கட்டப் பணி? நம்மைச் சுற்றியிருக்கும் வானவர்கள் எனும் காவல் அரண்களை மெல்ல மெல்லத் தளர்த்த வேண்டும். இது தான் கரீன்களுக்கு ஒப்படைக்கப் பட்டிருக்கும் பணி. உள்ளிருந்து கொண்டு ஒற்றர்கள் இரகசியமாக ஒரு நாட்டின் பாதுகாப்புக்களைத் தளர்த்துவது போன்ற ஓர் அடிப்படையில், கரீன்கள் நம்மைப் பாவிகளாக மாற்றுவதன் மூலம், காவல் அரண்களாக நின்று கொண்டிருக்கும் வானவர்களை நம்மை விட்டும் கொஞ்சம் கொஞ்சமாகத் தூரமாக்க முயற்சிக்கிறார்கள். கரீனின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், வானவர்களின் காவல் நீங்கி விடும்; அடுத்த கணமே வெளியில் காத்திருக்கும் இப்லீஸின் ஏனைய படைப் பிரிவுகள் நம் மேல் அடர்ந்தேறி, நம்மை இலகுவாகக் கைப்பற்றி, நம்மைத் தமது அடிமைகளாக ஆக்கி விடுவார்கள். மாறாக கரீனின் முயற்சி வெற்றி பெறவில்லையென்றால், கடைசி வரை கரீன் மட்டுமே நமக்கு எதிராக உள்ளுக்குள் இருந்து கொண்டு நம்மை வழிகெடுக்க முயற்சித்துக் கொண்டே இருப்பான்; தனக்கு ஒப்படைக்கப் பட்ட பணியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற லட்சியத்தோடு நமது மரணம் வரை மனம் தளராமல் முயற்சித்துக் கொண்டே இருப்பான். வெளியில் காத்திருக்கும் ஷைத்தானியப் படைகள் கடைசி வரை வெளியிலேயே காத்திருந்து ஏமாற வேண்டியது தான். சுருங்கக் கூறினால், இது தான் உண்மை. “கரீன்” எனப்படும் ஷைத்தானிய ஜின் இனத்தவருக்கு ஒப்படைக்கப் பட்டிருக்கும் பணி என்பது, ஒற்றர்களுக்கு ஒப்படைக்கப் படும் பணியைப் போன்ற ஒரு பணி மட்டுமே. கரீன்கள் பற்றி ஓரளவு விரிவாகவே பார்த்து விட்டோம். இனி ஏனைய ஜின் இனத்தவர்கள் பற்றியும் சற்று நோக்கலாம். இன் ஷா அல்லாஹ் வளரும்... - அபூ மலிக்
பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 34
|